search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மத்திய மந்திரி நாராயணசாமி தலைமையில் 1000 பேர் யோகா பயிற்சி- அண்ணாமலை பங்கேற்பு
    X

    மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மத்திய மந்திரி நாராயணசாமி தலைமையில் 1000 பேர் யோகா பயிற்சி- அண்ணாமலை பங்கேற்பு

    • சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • பல்லவ சாம்ராஜ்ய பூமியில் அமர்ந்து நான் யோகா செய்ததை பெருமையாக உணர்கிறேன்.

    மாமல்லபுரம்:

    சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் 3 இடங்களில் யோகா பயிற்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இன்று காலை 6 மணி அளவில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் யோகா பயிற்சி தொடங்கியது. இதில் மத்திய சமூகநீதித்துறை மந்திரி நாராயணசாமி கலந்து கெண்டார். 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு பிரதமர் மோடி பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த யோகா நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பாரதிய ஜனதாகட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இதில் மத்திய மந்திரி நாராயணசாமி பங்கேற்றார்.

    இதைத்தொடர்ந்து யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 கலைஞர்களுக்கு தங்க தாமரை விருதை மத்தியமந்திரி நாராயணசாமி வழங்கினார்.

    ஆவடியில் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் 300க்கும் மேற்பட்டவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் மத்திய ரிசர்வ் காவல்துறை துணைத்தலைவர் எம்.தினகரன், மத்திய பயிற்சி காவல் துணைத்தலைவர் கேவல்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து யோகா கலை நிபுணர் வினோத் கூறும்போது, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 58நாடுகளில் தொடங்கப்பட்ட இந்த யோகா தற்போது 183 நாடுகளில் கடைபிடிக்கபடுகிறது. உடல் நலத்தை பாதுகாக்க யோகா முக்கிய பங்காற்றுகிறது. யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    பல்லவ சாம்ராஜ்ய பூமியில் அமர்ந்து நான் யோகா செய்ததை பெருமையாக உணர்கிறேன்.

    அ.தி.மு.க வில் ஒற்றை தலைமை என்பது அவர்களது கட்சி நிலைப்பாடு. நாங்கள் தலையிடவோ,கருத்து சொல்லவோ விரும்பவில்லை. எல்லாம் நாளை மறுநாள் சரியாகி விடும். அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும். எங்களது கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை கிராமம், கிராமமாக அதிகரித்து வருகிறது.

    "அக்னிபாத்" இராணுவ திட்டம் பற்றி எதிர் கட்சிகள் தவறாக மக்களிடம் திணிக்கிறார்கள். இளைஞர்களை முன்புபோல் பொய் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் நன்றாக படித்து புரிந்து வருகிறார்கள். எனவே அக்னிபாத் திட்டம் மோடி நினைத்ததை விட எழுச்சி அடையும். இராணுவமும் பலமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×