search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவசக்தி வித்யாலயா பள்ளியில்  யோகா தினம்
    X

    யோகாசனம் செய்த மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

    சிவசக்தி வித்யாலயா பள்ளியில் யோகா தினம்

    • சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவர்கள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • யோகாவின் வரலாறு மற்றும் அதன் பயன்களை பற்றி மாணவி விஜயரக்சா எடுத்துரைத்தார்.

    தென்காசி:

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆவுடையானூர் கிராமம் பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவர்கள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு யோகா கருப்பொருளான ' மனித குலத்திற்கான யோகா' என்ற கருத்தை மையமாக கொண்டு ஆசிரியை குயின்விக்டோரியாவால் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கொரோனா போரின்போது துன்பங்களை களைவதில் யோகா எவ்வாறு மனித குலத்திற்கு சேவை செய்தது என்பதை சித்தரிக்கும் வகையில் இந்த கருப்பொருள் அமைந்தது. பள்ளி மாணவர்கள் இணைந்து யோகா சின்னத்தினை சில ஆசனங்கள் மூலமாகவும் மற்றும் கூர்நுனிக்கோபுரம் செய்து காட்டியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.யோகாவின் வரலாறு மற்றும் அதன் பயன்களை பற்றி மாணவி விஜயரக்சா எடுத்துரைத்தார்.

    விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களின் துணையுடன் பள்ளி முதல்வர் நித்யா தினகரன் செய்திருந்தார்.

    Next Story
    ×