என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி
  X

  மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.

  மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

  மன்னார்குடி

  நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டையில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி தலைவர் சி. குருசாமி தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பா.ஜ.க. நகர பொதுச்செயலாளர் எம்.எஸ். ஜெயராமன் மாணவ- மாணவிகளுக்கு யோகாசனப் பயிற்சி அளித்தார். யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினார்.இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தளிக்கோட்டை பா.ஜ.க கிளைத் தலைவர் பாரதிராஜா, கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×