search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் திருட்டு"

    • திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவலின் பேரில் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ராம்கி (வயது21) என்ற வாலிபரை ஒதியஞ்சாலை போலீசார் பிடித்து நேற்று விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த ராம்கி திடீரென போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக வெளியேறி சாலையில் ஓடினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிச்சென்று விட்டார்.

    தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் நிலையத்திலிருந்து வாலிபர் தப்பி ஓடியதும் அவரை போலீசார் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் போலீசார் திரும்பியதை கண்ட பொது மக்கள் புதுவை போலீசாரின் நிலையை கிண்டலாக பேசினர்.

    • பட்டா கத்தியுடன் வந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
    • பொத்தேரி பகுதியில் பட்டா கத்தியுடன் சென்று மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    பொத்தேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார், இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டா கத்தியுடன் வந்த 2 வாலிபர்கள் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மறைமலைநகர் டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும்படி மது குடித்து கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்தனர். பின்னர் போலீசார் இருவரையும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது பொத்தேரி பகுதியில் பட்டா கத்தியுடன் சென்று மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்த சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 19), ஆவடியை சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார்.
    • ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர்.

    களக்காடு:

    கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது40). இவர் கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவில் இவர் களக்காடு அருகே உள்ள வடமலை சமுத்திரத்திற்கு வாழைத்தார்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்குள்ள பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார். இரவில் மோட்டார் சைக்கிளை இயக்கும் சத்தம் கேட்டு, அவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நந்து (19), காருக்குறிச்சியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் வேல்சாமி (18), சேரன்மகாதேவியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர். அப்போது நந்து உள்பட 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி விட்டு, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம்அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக நந்து உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
    • வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

    மாலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அதில் மதியம் 3மணியளவில் குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு அண்ணாதுரையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது . இருசக்கர வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லேயே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஹரிஹர சுதன்(19). இவர்கள் சம்பவத்தன்று தாரமங்கலம் அருகிலுள்ள அணைமேடு நீர் வீழ்ச்சியை சுற்றி பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
    • சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்பி வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் எடையபட்டியை சேர்ந்தவர் கணபதி(வயது24), பாப்பம்பாடி சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர சுதன்(19). இவர்கள் சம்பவத்தன்று தாரமங்கலம் அருகிலுள்ள அணைமேடு நீர் வீழ்ச்சியை சுற்றி பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

    இருவரும் சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்பி வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தனி தனியாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார்ட் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமார் மோட்டார் சைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச செலவு செய்து வந்து உள்ளார்.
    • கைதான விஜயகுமார் மீது கடலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளன.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் மதுராந்தகம், மேல் மருவத்தூர், சித்தாமூர் திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.

    இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சித்தாமூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் கோயம்புத்தூரை சேர்ந்த விஜயகுமார் என்பதும் அச்சரப்பாக்கத்தில் உள்ள மலை மாதா கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடி வருவதும் தெரிந்தது. இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மோட்டார் சைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச செலவு செய்து வந்து உள்ளார். அவரிடம் இருந்து மொத்தம் 54 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான விஜயகுமார் மீது கடலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளன.

    ஒரு இடத்தில் பிடிபட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் வேறு மாவட்டங்களுக்கு சென்று கைவரிசை காட்டுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.
    • போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களிடையே ஒருவிதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் திருடர்கள் தங்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்பட்டியை சேர்ந்த சூசை என்பவரது மகன் இயேசுராஜ் (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு பொல்லிக்காளிபாளையம் பகுதியில் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இதுகுறித்து அவர் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது வீட்டை விட்டு சற்று தள்ளி கணேஷ் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போடவே அங்கிருந்து திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    தொடர்ந்து பொங்கலூர் சுற்றுவட்டார பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அவினாசி பாளையம் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாயாண்டி தனது செல்போனை பார்த்த போது அதில் ஒரு ‘வாட்ஸ்-அப்’ குரூப்பில் அவரது மோட்டார் சைக்கிளின் படத்தை பதிவிட்டு விற்பனைக்கு என கூறப்பட்டிருந்தது.
    • போலீசார் விசாரணை நடத்திய போது மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தூத்துக்குடி மாவட்டம் அகரத்தை சேர்ந்த சிதம்பரம் சிவா என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மானூர் ரஸ்தாவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 25). இவர் சம்பவத்தன்று நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு சென்றார்.

    அப்போது தனது மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இதுதொடர்பாக அவர் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் மாயாண்டி மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.

    இந்நிலையில் மாயாண்டி தனது செல்போனை பார்த்த போது அதில் ஒரு 'வாட்ஸ்-அப்' குரூப்பில் அவரது மோட்டார் சைக்கிளின் படத்தை பதிவிட்டு விற்பனைக்கு என கூறப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்திய போது மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தூத்துக்குடி மாவட்டம் அகரத்தை சேர்ந்த சிதம்பரம் சிவா (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (வயது22). இவர் நேரு வீதி அருகே விவேகானந்தர் தெருவில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் மாலை வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம்மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் ஒருவர் முபாரககின் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.

    எப்பொழுதும் பரபர ப்பாக காணப்படும் இந்த சாலையில் மர்ம நபர் ஒருவர் சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி விட்டு சென்றது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில்சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோய் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிஅடைந்து உள்ளனர். 

    • வீட்டுமுன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அம்மாபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துபாரதி (வயது 32). இவர் மதுரை பைனான்ஸ் நிறுவனத்தில் கார் லோன் பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். மறு நாள் காலையில் வந்து பார்த்தபோது அது திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இது குறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
    • மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

    குனியமுத்தூர்,

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அபிஷேக் (வயது20). இவர் கோவை பாலக்காடு ரோடு கோவைப்புதூர் பிரிவு அருகே உள்ள வசந்தம் நகரில் வசித்து தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்க்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    பின்னர் இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

    • திருமங்கலம், மதுரை காளவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார்.
    • 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து ராஜபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை உசிலம்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன்படி உசிலம்பட்டி டி.எஸ்.பி நல்லு மேற்பார்வையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசாரின் விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் பேரையூர் பாறைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராஜபாண்டி (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை காளவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியுள்ளார். மேலும் திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் ராஜபாண்டி மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அவரிடம் இருந்து 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து ராஜபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் ராஜபாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல இடங்களில் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் திருடனை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வெகுவாக பாராட்டினார்.

    ×