களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார். ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர்.
களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
Published on

களக்காடு:

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது40). இவர் கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவில் இவர் களக்காடு அருகே உள்ள வடமலை சமுத்திரத்திற்கு வாழைத்தார்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்குள்ள பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார். இரவில் மோட்டார் சைக்கிளை இயக்கும் சத்தம் கேட்டு, அவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார்.

அப்போது அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நந்து (19), காருக்குறிச்சியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் வேல்சாமி (18), சேரன்மகாதேவியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர். அப்போது நந்து உள்பட 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி விட்டு, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம்அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக நந்து உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com