search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள்"

    • மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
    • மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    தஞ்சாவூர்:

    திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் துரைராஜன் (வயது 39). இவர் ஊட்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் விடுமுறை க்காக துரைரா ஜன் திருச்சிக்கு வந்தார். பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை மாவட்டம் மெலட்டூருக்கு சென்றார். இதையடுத்து அங்கிருந்து திருச்சிக்கு அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    தஞ்சை அருகே அருள்மொழிபேட்டை - மாரியம்மன் கோவில் புறவழி சாலையில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருக்கிறது. அப்போது எதிரே தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி சங்கீதா பலத்த காயமடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரைராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி கண்முன்னே கணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
    • சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் சதாம்உசேன்(35). இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சதாம் உசேன் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் இருசக்கர வாகனத்தை திருப்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜ்கமல்(34) திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் ராஜ்கமலை கைது செய்து, மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தில் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ராஜ்கமலிடன் விசாரணை செய்து வருகிறார்.

    • ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை மதித்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலசவமாக வழங்கப்பட்டது.
    • 50 நபர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி என்ற அளவில் 50 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது .

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகே நடந்தது .

    தஞ்சை நகர போக்குவ ரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அந்த வழியாக இருசக்கர வாகன த்தில் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை மதித்து வந்தவர்களுக்கு நூதன முறையில் தலா 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    அப்போது அவர் பேசுகையில் தஞ்சை மாநகரத்தில் விபத்து இல்லா நகரமாக உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் தலைக்கவசமும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் சீட்பெல்ட் அணியவும் வலியுறுத்துகிறோம் .

    இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம் . தற்போது வரலாறு காணாத வகையில் தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது .

    எனவே சாலை விதிகளை மதித்து வருபவர்களுக்கு ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து இலவசமாக ஒரு கிலோ தக்காளி வழங்கி அதன் மூலம் பொதுமக்களுக்கு சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம் என்றார் .

    நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிந்து வந்த 50 நபர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி என்ற அளவில் 50 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞான சுந்தரி , மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ராய்ச்சூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
    • ரெயில்வே சுரங்க சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    ராய்ச்சூர் :

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடகர்நாடக மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சாலை, சுரங்க சாலைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ராய்ச்சூரில் ரெயில்வே சுரங்க சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை தலையில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    ராய்ச்சூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழை காரணமாக ராய்ச்சூர் அருகே சக்திநகர் ஆர்.டி.பி.எஸ். பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்க சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

    சுரங்க சாலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதை பார்த்த அவர், எவ்வாறு கடந்து செல்லலாம் என்று யோசித்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, தனது பேண்ட்டை தண்ணீர் படாதவாறு தொடை வரை மடித்தார். பின்னர் திடீரென்று தனது மோட்டார் சைக்கிளை அலேக்காக தூக்கி தலையில் வைத்து கொண்டு 'பாகுபலி' பட பாணியில் சுரங்கச்சாலையை கடந்து சென்றார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    • திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    ஈரோடு மாவட்டம் கந்தசாமி பாளையத்ைத சேர்ந்தவர் சிவசக்திவேல் (வயது 22), மில் தொழிலாளி. இவர் திருமங்கலம் அருகே திரளி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்தார். சம்பவத்தன்று அந்த கிராமத்தை சேர்ந்த தன்னுடன் வேலை பார்க்கும் ரஞ்சித்குமார் என்பவருடன் சிவசக்திவேல் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். டி.புதுப்பட்டி ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாது. இதில் படுகாயம் அடைந்த சிவசக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரஞ்சித்குமார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலியானார்.
    • விபத்தில் தூக்கி வீச்ப்பட்ட ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுவானைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 67). விவசாயி. இவர் சம்பவத்தன்று சேத்தியாத்தோப்பில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆணைவாரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீச்ப்பட்ட ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை மை மோசமானது. எனவே ஜெயராமன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் இறந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டி.ஆர்.நகர் ரோட்டில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் செந்தில்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் நேற்று முன்தினம் வள்ளியரச்சல் -வெள்ளகோவில் ரோட்டில் சிவகுமார் நகர் என்ற இடத்தில் பைக்கில் தனது மனைவி கவிதா (40) என்பவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு வெள்ளகோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது டி.ஆர்.நகர் ரோட்டில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் செந்தில்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில்குமார், கவிதா இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக செந்தில்குமாரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி செந்தல்குமார் உயிரிழந்தார். கவிதா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×