search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்பதிவு"

    • 52 எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கைகளும், 478 சேர் கார் இருக்கைகளும் உள்ளது.
    • எக்சிகியூட்டிவ் இருக்கைகள் சில நிமிடங்களிலேயே வெயிட்டிங்லிஸ்ட்டை எட்டியது.

    திருப்பூர் :

    கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ெரயிலில் மொத்தம் 530 இருக்கைகள் உள்ளது. இதில் 180 டிகிரி வளையக்கூடிய 52 எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கைகளும், 478 சேர் கார் இருக்கைகளும் உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில் பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டியதை தொடர்ந்து, எக்சிகியூட்டிவ் இருக்கைகள் சில நிமிடங்களி லேயே வெயிட்டிங் லிஸ்ட்டை எட்டியது. சேர் காரை பொதுமக்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்கிறார்கள்.

    எக்சிகியூட்டிவ் ரூ.2325. சேர் கார் ரூ.1280. விரைவில் கோவை- பெங்களூரு இடையே அதிவேக வந்தே பாரத் ெரயில் இயக்க திட்டமும் உள்ளது.

    • மானிய திட்டங்கள் இடுபொருள் முன்பதிவு பயிர் காப்பீடு விவரம்.
    • 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பட்டமங்கலம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு உழவர் செயலி குறித்த ஒரு நாள் பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

    அனைவரையும் உதவி தொழில் நுட்ப மேலாளர் மதுமனா வரவேற்றார். வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் விவசாயிக்கு எளிதில் கிடைப்பதற்கும் தங்கள் திட்டத்தின் பயனாளியாக பதிவு செய்து கொள்வதற்கும் பல்வேறு வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த உழவர் செயல் உருவாக்கப்பட்டது.

    இதனை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

    தொடர்ந்து உழவர் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து அதில் உள்ள மானிய திட்டங்கள் இடுபொருள் முன்பதிவு பயிர் காப்பீடு விவரம் உரங்கள்.

    விதைகளை இருப்பு நிலை மற்றும் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் வாடகை சந்தை நிலவரம் வானிலை அறிவுரைகள் பண்ணை வழிகாட்டி போன்றவை மற்றும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் இயற்கை பண்ணை பொருட்கள் மற்றும் பொருட்கள் வேளாண்மை செய்திகள் கருத்துக்கள் பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம் உழவர் ஈ சந்தை, பட்டு வளர்ச்சி பற்றிய விவரம் வேளாண்மை நிதிநிலை அறிக்கை அத்துடன் கலைஞரின் வேளாண்மை திட்டத்துடன் 21 தலைப்புகளில் இந்த செயலி செயல்படுகிறது என்று விவரமாகவும் உழவர் செயலி பயன்படுத்துதல் பற்றியும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறினார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் பாரி, குணசேகரன், மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை உதவி வேளாண்மை அலுவலர் சுகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

    அட்மா திட்ட உதவி தொழிற்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    • அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக அகமதாபாத்துக்கு சென்று அடையும்.
    • அதிகாலை திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 6.30 மணிக்கு தஞ்சாவூர் ரெயில் நிலையம் வந்தது.

    தஞ்சாவூர்:

    அகமதாபாத்- திருச்சி இடையே வாராந்திர ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் இந்த ரெயில் சேவை தொடங்கியது.

    அதாவது வாரந்தோறும் வியாழக்கிழமையில் காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா, சென்னை, சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு சென்று அடையும்.

    மறுமார்க்கத்தில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை வழியாக மறுநாள் இரவு 9.15 மணிக்கு அகமதாபாத்துக்கு சென்று அடையும்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்க திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 6.30 மணிக்க தஞ்சாவூர் ரெயில் நிலையம் வந்தது.

    ஒரிரு நிமிடங்கள் இந்த ரெயில் நின்றது.

    அப்போது காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர்ரெயில்ஓட்டு னருக்க சால்வை அணிவிக்க ப்பட்டுகவுரவிக்கப்பட்டார்.

    பயணிகளுக்குஇனிப்பு வழங்கி கொண்டாட ப்பட்டது.

    இது குறித்து செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் கூறும்போது;-

    அகமதாபாத்- திருச்சி இடையே இயக்கப்படும் வாராந்திர ரெயிலை வரவேற்கிறோம்.

    இந்த ரெயிலில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

    எனவே வாராந்திர ரெயிலை தினமும் இயக்கும் ரெயிலாக மாற்ற வேண்டும் என்றார்.

    இந்நிகழ்வில் வழக்கறி ஞர்கள் உமர்முக்தார், பைசல் அகமது, கண்ணன், பேராசிரியர்கள் திருமேணி, செல்வகணேசன் மற்றும் காஜாமொய்தீன், கூத்தூர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நவம்பர் 5,12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படுகிறது.
    • விரைவு வண்டி பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    பாபநாசம்:

    மயிலாடுதுறை, பெங்களூர், மைசூர் இடையே மீண்டும் நேற்று முதல் ஒரு வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (ஒரு மாதத்திற்கு மட்டும்) இயக்குவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    வண்டி எண்: 06251: மைசூர் - மயிலாடுதுறை ரெயில் நவம்பர் 4,11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெங்களூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படுகிறது.

    வண்டி எண்:06252: மயிலாடுதுறை - மைசூர் இன்று (29-ந்தேதி), நவம்பர் 5,12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும் இயக்கப்படுகிறது.

    விரைவு வண்டி பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    பெங்களூரிலிருந்து பாபநாசத்திற்கு வரும் நேரம் மதியம் 2.00 மணி மற்றும் பாபநாசத்திலிருந்து பெங்களூர், மைசூர் செல்ல புறப்படும் நேரம் இரவு 7.30 மணி ஆகும்.

    ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். எனவே, பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து பயன்பெற வேண்டுகிறோம்.

    இத்தகவலை திருச்சிராப்பள்ளி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்தார்.

    • டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும்.
    • சோழன் விரைவு ெரயிலுக்கு இணைப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் பாதுகாப்பு மற்றும் அலுவலர் குடியிருப்பு, சரக்கு போக்குவரத்து முனையகட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

    அவருடன் கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார், வர்த்தக பிரிவு மேலாளர், எலக்ட்ரிக்கல் சிக்னல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அது சமயம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெயராமன், துணைச் செயலாளர் கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, உறுப்பினர்கள் சங்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர் அவன் விபரம் வருமாறு :

    பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் விரைவில் சரக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள சிறிய பழுதுகளை நீக்க வேண்டும், கட்டி முடிக்கப்பட்ட பட்டுக்கோட்டை இரயில் நிலைய காவல் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும்,

    சோழன் விரைவு இரயிலுக்கு இணைப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட கோட்ட ரயில்வே மேலாளர், சோழன் விரைவு ரயிலுக்கான இணைப்பு ரயில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வாரிய அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    விரைவில் இரவு நேர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு முழுமையான ரயில் சேவை குறிப்பாக தாம்பரம், செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

    முன்பதிவு மைய நேரத்தை நீட்டிக்கவும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.

    பட்டுக்கோட்டை ரயில் நிலையம் நன்றாக பராமரிக்கப்படுவதற்கு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

    • காரைக்குடி ரெயில் நிலையத்தில் முன்பதிவு இடம் மாற்றப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
    • பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடமும், தினசரி ரெயில்களுக்கு டிக்கெட் வழங்கும் இடமும் தனித்தனியாக இருந்தன.

    காரைக்குடி

    காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடமும், தினசரி ரெயில்களுக்கு டிக்கெட் வழங்கும் இடமும் தனித்தனியாக இருந்தன.

    இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் 2 கவுண்டர்களையும் ஒரே இடமாக மாற்றியது.இதனால் காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு தினமும் 250 பயணிகள் முன்பதிவு செய்வதாகவும், நாள் ஒன்றுக்கு பலலட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும் தெரிகிறது.

    தற்போது தினசரி ரெயில்களுக்கு பயணிகள் அதிகமாக டிக்கெட் எடுப்பதால், முன்பதிவுக்கு செல்பவர்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. சில நேரங்களில் டிக்கெட் வழங்கும் ஊழியருக்கும், பயணிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.

    எனவே, காரைக்குடி ரெயில் நிலையத்தில் பழைய முறைப்படியே தனித்தனியாக டிக்கெட் கவுண்டர்கள் அமைக்க வேண்டும் என தொழில் வணிகக் கழகத்தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

    • நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    செங்கோட்டை:

    பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க அம்பாசமுத்திரம், ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06004) நெல்லையில் இருந்து வருகிற 18-ந் தேதி முதல் ஜனவரி 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் தாம்பரம் - நெல்லை வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06003) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன் பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    • கடந்த 2 நாட்களாக கியாஸ் சிலிண்டர் முன்பதிவு மற்றும் வினியோக முறையில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
    • இந்திய எண்ணெய் நிறுவனம், ஐபிஎம் மற்றும் ஆரக்கிளுடன் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    இந்திய எண்ணெய் நிறுவனம் ஐபிஎம் என்ற முறையில் இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான முன்பதிவுகளை பெற்று சிலிண்டர்களை வினியோகித்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முன்பதிவு மற்றும் வினியோக முறையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இந்திய எண்ணெய் நிறுவனம், ஐபிஎம் மற்றும் ஆரக்கிளுடன் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி, 77189-55555 என்ற எண்ணுக்கு குரல் பதிவு மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது இந்த எண்ணில் நேரடியாக பேசியும், 75888-88824 வாட்ஸ்-அப் மூலமும், வினியோகஸ்தர்களின் தொலைபேசி எண் மற்றும் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் முன்பதிவு பதிவு செய்யப்படும். முடிந்தவரை விரைவில் சிலிண்டரை உங்களுக்கு வழங்குவோம். விரைவில் சிக்கலைத் தீர்த்துவிடுவோம் என்று நம்புகிறோம்,

    இதனால் நாளை (இன்று) முதல் உங்கள் அழைப்புகளை ஏற்று வழக்கம் போல் சேவை செய்யப்படும். திடீரென கணினி செயலிழப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முதன்மை பொதுமேலாளர் சந்தீப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

    • முன்பதிவு இல்லாதரெயிலுக்கும் செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கலாம்.
    • பயணச்சீட்டு பரி சோதகர் கேட்கும்போது செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல்போன் பயணச்சீட்டை காண்பிக்கலாம்.

    மதுரை

    செல்போன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலும். அதேபோல முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளையும் செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

    செல்போனில் உள்ள பிளே ஸ்டோரில் யூ.டி.எஸ். செயலியை தரவிறக்கம் செய்து அதில் செல்போன் எண், பெயர், பாஸ்வேர்டு, பாலினம், பிறந்த தேதியை பதிவு செய்தால், தகவல்களை சரிபார்க்க ஓ.டி.பி. நம்பர் வரும். அதையும் செல்போனில் பதிவு செய்ய வேண்டும்.

    அதன் பிறகு பயணச்சீட்டு தேவைப்படும் நேரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .யு.டி.எஸ். ஆப் செயலியில் செல்போன் எண், பாஸ்வேர்டு பதிவு செய்து தேவையான ரெயில் நிலையத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை மொபைல் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர்வாலட் மூலம் செலுத்தினால் பயணச்சீட்டு பதிவாகி விடும்.

    பயணச்சீட்டு பரி சோதகர் கேட்கும்போது செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல்போன் பயணச்சீட்டை காண்பிக்கலாம்.

    குறிப்பிட்ட நிலையத்திற்கு அடிக்கடி சென்றால், அதை பதிவு செய்து Quick booking முறையில் விரைவாக பயணச்சீட்டு பெறலாம். பயணச் சீட்டுகள் மட்டுமின்றி நடைமேடை, சீசன் டிக்கெட்டுகளையும் இந்த செயலி மூலம் எளிதாக பதிவு செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×