search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்பதிவு இல்லாத ரெயிலுக்கு செல்போன் மூலம் டிக்கெட்
    X

    முன்பதிவு இல்லாத ரெயிலுக்கு செல்போன் மூலம் டிக்கெட்

    • முன்பதிவு இல்லாதரெயிலுக்கும் செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கலாம்.
    • பயணச்சீட்டு பரி சோதகர் கேட்கும்போது செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல்போன் பயணச்சீட்டை காண்பிக்கலாம்.

    மதுரை

    செல்போன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலும். அதேபோல முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளையும் செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

    செல்போனில் உள்ள பிளே ஸ்டோரில் யூ.டி.எஸ். செயலியை தரவிறக்கம் செய்து அதில் செல்போன் எண், பெயர், பாஸ்வேர்டு, பாலினம், பிறந்த தேதியை பதிவு செய்தால், தகவல்களை சரிபார்க்க ஓ.டி.பி. நம்பர் வரும். அதையும் செல்போனில் பதிவு செய்ய வேண்டும்.

    அதன் பிறகு பயணச்சீட்டு தேவைப்படும் நேரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .யு.டி.எஸ். ஆப் செயலியில் செல்போன் எண், பாஸ்வேர்டு பதிவு செய்து தேவையான ரெயில் நிலையத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை மொபைல் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர்வாலட் மூலம் செலுத்தினால் பயணச்சீட்டு பதிவாகி விடும்.

    பயணச்சீட்டு பரி சோதகர் கேட்கும்போது செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல்போன் பயணச்சீட்டை காண்பிக்கலாம்.

    குறிப்பிட்ட நிலையத்திற்கு அடிக்கடி சென்றால், அதை பதிவு செய்து Quick booking முறையில் விரைவாக பயணச்சீட்டு பெறலாம். பயணச் சீட்டுகள் மட்டுமின்றி நடைமேடை, சீசன் டிக்கெட்டுகளையும் இந்த செயலி மூலம் எளிதாக பதிவு செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×