search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கை"

    • கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்களிடம் சென்று அரசு பள்ளியின் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்திலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்று வட்டாரத்தில் இரண்டு துவக்க பள்ளிகளும், ஊட்ட மலை பகுதியில் ஒரு அரசு மேல்நிலை பள்ளியும் இயங்கி வருகிறது.

    இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

    இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிக்கு நிகராக ஒகேனக்கல் மூத்தமழை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் ஊட்டமலை, ராணிப்பேட்டை, சத்திரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்களிடம் வீடு வீடாகச் சென்று அரசு பள்ளியின் சேர்க்கை குறித்தும் பாடத்திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்ேபாது விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்திலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்த நிகழ்வால் அப்பகுதி மக்களிடையே தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியும் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகின்றனர்.

    • ராமநாதபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது.
    • முடிவில் சின்னக்கடை கான்சாகிப் அறக்கட்டளை சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கர்ணன், வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஆசிரியர் பயிற்றுனர் முருகவேல் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.

    புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேனி சை.அக்கீம் (ராமநாதபுரம் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர்),காளீஸ்வரி மாலை அணிவித்து இனிப்பு மற்றும் பேனா, பென்சில் வழங்கி வரவேற்றனர்.

    ஆசிரியர்கள் மாதவி, பழனியம்மாள், உமா மகேஸ்வரி, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னக்கடை கான்சாகிப் அறக்கட்டளை சார்பில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்.

    • என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
    • கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    இதன்படி கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை வருகிற 14-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவ- மாணவிகள் இந்த கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர்.

    • முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன.
    • தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 2- ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 12 ம் தேதியன்று நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர். சோ.கி.கல்யாணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்த 864 இடங்களில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 286 காலி இடங்களுக்கு 2- ம் கட்ட கலந்தாய்வு 12 ம் தேதி நடைபெற உள்ளது.அறிவியல் பாடப்பிரிவு தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்களில், இயற்பியல்,கணிதம், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்குத் தகுதியுள்ள, பிளஸ்-2வில் கணிதம் பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

    கணினி அறிவியல்(சுழற்சி II),தாவரவியல் ,வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பின்தங்கிய வகுப்பில் (பிசி.,) ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.இவ்விடங்களுக்கான கலந்தாய்வில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த, பிளஸ்-2வில் – கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களைப் பயின்ற விண்ணப்பதாரர்கள் 12 -ந் தேதியன்று காலை 9 மணிக்கு கலந்து கொள்ளலாம்.

    கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பிபிஏ, பி.காம், பிகாம்(சிஏ), பி.காம்(இ.காம்) , அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கைக் கலந்தாய்வில்,பிளஸ்-2வில் தொழில்முறை பாடப்பிரிவில் பயின்ற, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு தரவரிசை 1208 முதல் 2651 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் காலை 11 மணிக்கு கலந்து கொள்ளலாம்.இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள பின்தங்கிய வகுப்பு (பி.சி.,) மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பு (எம்.பி.சி.) இடங்களுக்கு மட்டும், தமிழ் பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் 12.6.2023 அன்று பிற்பகல் 1மணிக்குக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு அனைத்து வகுப்பினை சேர்ந்த, ஆங்கில பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்களும் 2- ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு கல்லூரியின் www.gacudpt.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மாணவர்கள் வருகிற 7-ந் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
    • பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023 -ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு , 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருகிற 7-ந் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். 

    விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

    மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவன ங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.50-ஐ விண்ணப்பதாரர் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். பிரிவுகளில் சில இடங்கள் இருக்கின்றன.
    • இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து 3-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 மற்றும் 22-ந்தேதிகளில் நடந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர். இதில் இடம் கிடைக்காத மாணவர்கள் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.

    இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன. அதுபோல இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். பிரிவுகளில் சில இடங்கள் இருக்கின்றன. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு நடைபெறும் 3-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.
    • 2023-2024-ம் கல்வியாண்டிற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    சேலம்:

    தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்கீழ் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன. இந்த 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 1830 இடங்களுக்கு நடப்பாண்டு 2023-2024-ம் கல்வியாண்டிற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் மாணவர் சேர்க்கை கையேடு ஆகியவை www.scert.tn.schools.gov.in என்ற இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    2,300 இடங்கள்

    அதே சமயம் கடந்த ஆண்டு 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை செய்த நிறுவனங்களை தவிர்த்து, 33 உதவி பெறும் மற்றும் சுயநிதி பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,300 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை செய்ய தகுதியுள்ளது. வருகிற 5-ந்தேதி இந்த நிறுவனங்களின் இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவுறுத் தியுள்ளார்.

    • தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தொழிற்பிரி வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தொழிற்சாலைகளின் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள பிரிவுகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்க ளில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தொழிற்பிரி வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வெல்டர், வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும், எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கா னிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சா லைகளின் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள பிரிவுகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், செல்போன் எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்க ளுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு மே 31, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
    • முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலை செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம் வணிகவியல் மற்றும் இளநிலை அறிவியல் பிரிவில்பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. இயற்பியல்,பி.எஸ்.சி. கணினி அறிவியல்,பி.எஸ்.சி. கணிதம் ஆகிய 7 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு வருகின்ற 31- ந்தேதி, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

    இதில் 31- ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள், .என்.சி.சி., என்.எஸ்.எஸ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 2- ந்தேதி (வியா ழக்கிழமை) வேதியியல் துறை, கணிணித் துறை. கணிதத் துறை, இயற்பியல் துறைக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் 2- ந்தேதி அனைத்து கலைப்பிரிவு தமிழ் ஆங்கிலம் வணிகவிய ல்போன்ற பாடப்பி ரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

    தமிழக அரசின் இட ஒது க்கீட்டின் விதிமுறைகளின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லூரி கல்விக் கட்டணம் ரூபாய் 2500(தோராயமாக) செலுத்த வேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் இணைய வழி விண்ணப்ப படிவத்தை நகல், மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், தேசிய வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல், 4 வண்ண புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். மேலும் அனைத்து சான்றிதழ்களும் 2 செட் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வரவேண்டும். கலந்தாய்வுக்கு அலைபேசி . மின் அஞ்சல் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்தவ ர்களுக்கு மட்டும் கனியாமூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 8 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன
    • பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 8 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட் டோர் நல பள்ளி விடுதிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதி, நாகர்கோவில், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதி, அழகப்பபுரம் ஆகியன உள்ளன.

    பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளாக அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, நாகர்கோவில், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, கோவளம். அரசு பிற்படுத்தப் பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, சுங்கான் கடை. அரசு பிற்படுத்தப் பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, அகஸ்தீஸ் வரம் உள்ளன.

    அரசு பிற்படுத்தப்பட் டோர் நல கல்லூரி மாணவர் விடுதி, அகஸ்தீஸ்வரம் (இ) பால்குளம். சிறுபான்மை யினர் நல கல்லூரி விடுதி அரசு சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதி பால்குளத்தில் உள்ளது. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவி கள் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

    விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவ சமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்ப டும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவி களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி வழங்கப்படும். மலைப்பி ரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாக பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ-மாணவியர் விண்ணப்பங் களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் காப்பாளினிகளிட மிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்திலி ருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பா ளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்தமாதம் 15-ந்தேதிக்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி யிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15-ந்தேதிக்குள்ளும் சமர்பிக்க வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித் தால் போதுமானது. தமிழ்நாட் டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாழப்பாடியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலர் நெடுமாறன் தலைமையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது.

    தலைமையாசிரியை சத்தியக்குமாரி அனைவ–ரையும் வரவேற்றார். பேரணியில் சிங்காரி மேளம் வாசித்தும், சலங்கை இசைத்தும் கிராமிய பாடல்கள் பாடியும், ஆசிரிய ஆசிரியைகள் குடியிருப்புப் பகுதிகளில் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி–னர். அரசு பள்ளியில் மாண–வர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வினியோகித்தும் பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.

    பேரணியில் வட்டார கல்வி அலுவலர் வித்யா, அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திலகவதி, வாழப்பாடி வட்டாரத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தி–னர் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் அர்சுணன் நன்றி கூறினார்.

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து.

    அரவேணு:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் வழிகாட்டுதலின் படி கோத்தகிரி வட்டாரத்தில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து. நிகழ்ச்சிக்கு கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், சுப்ரமணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் பேரணியின் முக்கிய அம்சங்களை விளக்கி பேசினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன், காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன், குன்னூர் ஜெ.சி.ஐ. அமைப்பு தலைவர் பாவனா, எப்.பி.டி. தன்னார்வ அமைப்பு ஜோசப், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங், தன்னார்வலர்கள் நிர்மலா யமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு கோத்தகிரி நெல்லை கண்ணன் அவர்கள் குளிர்பானம் வழங்கினார்.

    ×