திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். பிரிவுகளில் சில இடங்கள் இருக்கின்றன. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து 3-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 மற்றும் 22-ந்தேதிகளில் நடந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர். இதில் இடம் கிடைக்காத மாணவர்கள் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.

இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன. அதுபோல இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். பிரிவுகளில் சில இடங்கள் இருக்கின்றன. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு நடைபெறும் 3-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com