search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விடுதி"

    • தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரையும், குழந்தையையும் சேர்த்தனர்.
    • குழந்தை பிறந்த சம்பவத்தை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் தெரிவித்து அந்த வாலிபரை அழைத்து நேரில் பேசினர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    இதை அடுத்து விடுதியின் ஒரு அறையில் பெண் குழந்தையை மாணவி பெற்று எடுத்துள்ளார். இத்தகவல் அறிந்த விடுதி வார்டன் கலைச்செல்வி மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரையும், குழந்தையையும் சேர்த்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் அதியமான் கோட்டை போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பாகவே தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருந்ததால் கர்ப்பமானதாகவும் மாணவி தெரிவித்தார்.

    மேலும் மாணவியின் வீட்டிற்கு காதலித்து கர்ப்பமானது தெரியாது, கல்லூரியில் சேரும் போது கர்ப்பமாக தான் இருந்தேன் என்றும் கூறியுள்ளார். அந்த வாலிபர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

    குழந்தை பிறந்த சம்பவத்தை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் தெரிவித்து அந்த வாலிபரை அழைத்து நேரில் பேசினர். அந்த வாலிபர் தான் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார்.

    இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேசினர். இதில் இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். இருவரும் ஒரே சமுதாயம் என்பதால் புகார் அளிக்கவில்லை. இதனால் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. மாணவியர் விடுதியில் 120 மாணவிகள் உள்ளனர். வார்டனாக கலைச்செல்வி உள்ளார்.

    இந்த மாணவி கர்ப்பமானது வார்டன் தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

    • அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிட மிருந்து 434 மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லகத்தின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டிலான தேய்ப்பு பெட்டியும், மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு ரூ.15 ஆயிரத்து 30 மதிப்பீட்டில் பல்வேறு வகையான உபகரணங் களையும் கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் அரசு குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கான வானவில் கொண்டாட்ட போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட காரைக்குடி அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சிவகங்கை அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் தங்கி படிக்கும் 4 மாண வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஆஷா அஜித் அவர்கள் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
    • மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ- மாணவிகளுக்கு என 21 மாணவர் பள்ளி விடுதிகளும், 14 மாணவி பள்ளி விடுதிகளும், 5 மாணவர்கள் கல்லூரி , பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும், 5 மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும் என மொத்தம் 45 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ- மாணவிகள் சேர தகுதியு டையவர்கள் ஆவார்கள்.

    அனைத்து விடுதி மாணவர், மாணவிகளுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகளும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பி டத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்ததொலைவு விதி மாணவிகளுக்கு பொ ருந்தாது.

    தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பா ளினிகளிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளி னியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.6.2023-க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி யிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.7.2023-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

    ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தை களுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.

    • மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 8 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன
    • பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 8 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட் டோர் நல பள்ளி விடுதிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதி, நாகர்கோவில், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதி, அழகப்பபுரம் ஆகியன உள்ளன.

    பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளாக அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, நாகர்கோவில், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, கோவளம். அரசு பிற்படுத்தப் பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, சுங்கான் கடை. அரசு பிற்படுத்தப் பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, அகஸ்தீஸ் வரம் உள்ளன.

    அரசு பிற்படுத்தப்பட் டோர் நல கல்லூரி மாணவர் விடுதி, அகஸ்தீஸ்வரம் (இ) பால்குளம். சிறுபான்மை யினர் நல கல்லூரி விடுதி அரசு சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதி பால்குளத்தில் உள்ளது. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவி கள் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

    விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவ சமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்ப டும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவி களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி வழங்கப்படும். மலைப்பி ரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாக பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ-மாணவியர் விண்ணப்பங் களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் காப்பாளினிகளிட மிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்திலி ருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பா ளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்தமாதம் 15-ந்தேதிக்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி யிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15-ந்தேதிக்குள்ளும் சமர்பிக்க வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித் தால் போதுமானது. தமிழ்நாட் டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு விடுதிகளில் தங்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி (https://tnadw-hms.in/application) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் உள்ள காலியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதற்காக விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்ற செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர்களின் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி (https://tnadw-hms.in/application) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    பள்ளி விடுதிகளுக்கான சேர்க்கை வருகிற 20-ந்தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கான சேர்க்கை வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் என விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் விடுதி சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. தகுதியான மாணவர்கள் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அனீஷ்சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×