search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து"

    • விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியை டிரோன் எனும் எந்திரத்தை மூலம் தொடங்கி விட்டனர்.
    • 3 முதல் 4 ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வட்டத்தில் சமீபகாலமாக டிரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கூலி ஆட்கள் பற்றாகுறை, கூலிதொகை உயர்வு, அதிகரித்து வரும் செலவு‌ போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்போது விவசாய பணிக்கு அதிகளவில் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    வயல்களை உழவு செய்தல், வரப்பு சீர்செய்தல், நடவு நடுதல் உள்பட அனைத்து விவசாய தேவைக்கும் கடந்த சில வருடங்களாக அதிகளவில் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியிலும் டிரோன் எனும் இயந்திரத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். டிரோன் மூலம் மணிக்கு 3முதல் 4ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் டிரோன் மூலம் மருந்து தெளிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    • ரேட்டல் எலி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்
    • ரேட்டல் எலி மருந்து பெரும்பாலும் தற்கொலைக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது

    அரியலூர்:

    கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு பூச்சிக்கொல்லிக்கான மோனோகுரோட்டோபாஸ், புரோபனபாஸ், அசிபேட், புரோப்பனபாஸ் பிளஸ் சைபர் மெத்திரின், குளோர்பைப்பாஸ் பிளஸ் சைபர்மெத்திரின், குளார்பைப்பாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகள், ரேட்டல் என்ற பெயரில் விற்கப்படும் எலி மருந்தான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் பசை ஆகியவற்றுக்கு ஆறுமாத காலம் தடை விதித்துள்ளது. உயிருக்கு கடும் அபாயகரமானதாக உள்ள இவை பெரும்பாலும் தற்கொலைக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் உடனடியாக விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கடைகள், சூப்பர் மார்க்கெட், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்களில் இவைகளை விற்பது தெரியவந்தால் உரிமம் ரத்து உள்ளிட்ட மிக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • ஆற்றில் அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூரில் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது. இதில் சில மருந்துகள் கடந்த ஜூன் மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி ஆகும் காலம் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஆற்றில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி ஆகாத மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்.
    • நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவருமான தென்னரசு தொடங்கி வைத்தார்.

    இதில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, வழக்கறிஞர் அன்பரசு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாகை மாவட்ட தலைவர் வேதநாயகம், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வர்த்தக சங்க முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன், வேதாரண்யம் வர்த்தக சங்க செயலாளர் சுபஹானி, பொருளாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் தங்கதுரை, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜாகிருஷ்ணன், தேசிய நல்லாசிரியர் செல்வராஜ், அரிவையார் சங்க உறுப்பினர்கள் மல்லிகா, கவிதா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவர்கள் சபரிகிருஷ்ணன், சதாசிவம் அடங்கிய மருத்துவ குழுவினர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொது மருத்துவம், நுரையீரல், ஆஸ்துமா, நீரிழிவு இருதய, உடல் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    • சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது.
    • அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர்.

    திருப்பூர் :

    அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லையெனில் 104க்கு தொடர்பு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்துள்ள போதும் சில நேரங்களில், குறிப்பிட்ட சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. விலை உயர்வாக இருக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை, மேம் படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லையென தெரிவித்தால் அந்த மருந்து குறித்து 104 என்ற அரசின் இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.உடனே, அவர்கள் அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர். மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவர் என திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
    • தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திடனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள்உற்பத்தியை தடுத்து காய்ச்சல்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது.

    முதல்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

    பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது.

    மேலும் பள்ளிவளாகங்களை சுற்றி பழையடயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டு பிளிசிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.

    மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திட பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்து சென்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது. 3 கடைகள் மீதும் மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940-ன்படி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோல் மருந்து கடைகளில் ஆய்வு செய்யப்படும், என்றனர்.

    • குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து வரு கின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் நேற்று மாலை குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, காமராஜர் பஸ் ஸ்டாண்டு, காந்தி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள ஆங்கில மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்துகள் எதுவும் சிக்கவில்லை.பின்னர் போலீசார் 'டாக்டர்களின் மருந்து சீட்டுக்கு மட்டும்தான் மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும்'என அறிவுறுத்தி சென்றனர்.இது போல் திங்கள்நகர், பேயன்குழி பகுதியில் உள்ள மருந்து கடைகளிலும் அவர் சோதனை செய்தார்.இதனால் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    • நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கல் உள்ளிட்ட கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை வளாகத்தில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கல் உள்ளிட்ட கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக மிட்டவுன் ரோட்டரி சங்க 2981 ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி. செல்வநாதன், மன்னார்குடி நகராட்சி ஆணையர் தா.

    சென்னுகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன்,

    ரோட்டரி உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர்

    டி.ராமலிங்கம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டார்.

    ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சி.குருசாமி, எம்.நடராஜன், ஜி.மனோகரன், ஜி.சிவக்கொழுந்து, ஆர்.மாரியப்பன், டாக்டர் கே.மோகனசுந்தரம், பி.ரமேஷ், ஹரிரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ரோட்டரி செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ரோட்டரி பொருளாளர் டி.அன்பழகன் நன்றி கூறினார்.

    • சிறு துளையிட்டு மணியில் உள்ள சாற்றினை உறிஞ்சி குடிப்பதால் அந்த குறிப்பிட்ட நெல்மணி பதராகி விடும்.
    • பயிர் அதிக அடர்த்தியாக உள்ள இடங்களில் இலையுறை அழுகல் நோய் ஆங்காங்கே தென்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே திருவலஞ்சுழி கிராமத்தில் குறுவைப் பயிரில் கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல் தென்படுவதாக விவசாயிகளிடமிருந்து தகவல் வந்ததை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் அந்த அந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர் உடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறும்போது:-

    பொதுவாக பின் தாளடி பருவத்தில் காணப்படும் கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல்கள் இந்த குறுவை பயிரில் காணப்படுகிறது.

    இந்த பூச்சிகள் கதிரில் அமர்ந்து நெல்மணிகள் உருவாகும் தருணத்தில் நெல்மணிகளில் சிறு துளையிட்டு மணியில் உள்ள சாற்றினை உறிஞ்சி குடிப்பதால் அந்த குறிப்பிட்ட நெல் மணி பதராகி விடும்.

    எனவே மருந்து அடிக்கும் போது சுற்று விழா போட்டு ஒரு சாகுபடி தளையை ஒரே முறையில் மருந்து அடிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தலா 1 கிலோ இஞ்சி, வெள்ளை பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து சார் எடுத்து அந்த சாற்றினை தண்ணீரில் கலந்து கைத்தறிப்பான் கொண்டு மாலை வேளை யில் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால் எளிய முறையில் பூச்சி கட்டுப்படுத்தப்படும்.

    பயிர் அதிக அடர்த்தியாக உள்ள இடங்களில் இலை யுறை அழுகல் நோய் ஆங்காங்கே தென்படுகிறது.

    எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயலில் பட்டம் பிரித்து விட்டு நோய் தென்படும் இடங்களில் ப்ரோபிகோனோசோல் எனும் மருந்தினை ஏக்கருக்கு 250 மில்லி 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம்.

    புகையான் தாக்குதல் வழக்க மாக ஏற்படும் இடங்களிலும் பயிர் அதிக அடர்த்தியாக உள்ள இடங்களிலும் புகையான் வராமல் தடுப்பதற்கு வயலில் பட்டம் பிரித்து ஒரு அங்குலம் நீர் நிறுத்தி ஏக்கருக்கு 5 கிலோ தவிடுவுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் கலந்து தூவினால் புகையானை வராமல் தடுக்கலாம் என்றார்.

    • மருந்து விலையை குறைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலு வலகம் அருகே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி.யில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகர ணங்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 5 சதவீதத்தை சுகாதாரத்திற்கு செலவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×