என் மலர்
நீங்கள் தேடியது "Medicines"
- மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ‘‘நிலையான தரம் இல்லாதவை’’ என்று அடையாளம் கண்டுள்ளன.
- சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது.
புதுடெல்லி:
வழக்கமான ஒழுங்குமுறை கண்காணிப்பு நடவடிக்கையின்படி, நிலையான தரம் இல்லாத (என்.எஸ்.கியூ) மற்றும் போலியான மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் மாதாந்திர அடிப்படையில் காட்டப்படுகிறது.
மத்திய மருந்துகள் ஆய்வகங்கள் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மருந்து எச்சரிக்கையில் பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 52 மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று கண்டறிந்து உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று அடையாளம் கண்டுள்ளன.
மருந்து மாதிரிகளை நிலையான தரம் இல்லாதவையாக அடையாளம் காண்பது என்பது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட தர அளவுருக்களில் மருந்து மாதிரியின் தோல்வியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. தோல்வி என்பது அரசாங்க ஆய்வகத்தால் சோதிக்கப்பட்ட தொகுப்பின் மருந்து தயாரிப்புகளுக்கு குறிப்பிட்டது, மேலும் சந்தையில் கிடைக்கும் பிற மருந்து தயாரிப்புகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பரில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது, இது ஒரு அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளரால் மற்றொரு நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த விஷயம் விசாரணையில் உள்ளது, மேலும் சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மருந்துகள் அடையாளம் காணப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநில கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து நிலையான தரம் இல்லாதவை மற்றும் போலி மருந்துகளை அடையாளம் காணும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது.
- டிரான்ஸ்கேத்தர் இதய வால்வு சிகிச்சைகளில் ஒரு புதுமை கண்டுபிடிப்பாளராக நாட்டை நிலைநிறுத்துகிறது.
- கல்லீரல் பிரச்சினைகள் போன்ற ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் காரணமாக அறுவை சிகிச்சைக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.
உலகளாவிய முன்னணி மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மெரில் லைஃப் சயின்சஸ், ஜூன் 14 அன்று இந்தியாவின் முதல் டிரான்ஸ்கேதட்டர் விளிம்பு-முதல்-விளிம்பு வரை பழுதுபார்க்கும் (TEER) அமைப்பான MyClip ஐ அறிமுகப்படுத்தி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
ஜூன் 13–15 வரை வாபி (குஜராத்) மெரில் அகாடமியில் நடைபெற்ற இந்த மைல்கல் இதய கட்டமைப்பு புதுமை நிகழ்வு, 150-க்கும் மேற்பட்ட இந்திய இருதயநோய் நிபுணர்களையும், இதய இமேஜிங் நிபுணர்கள் மற்றும் சர்வதேச பிரபலங்களையும் ஒன்றிணைத்தது.
இதில் பேராசிரியர் ஒட்டாவியோ அல்ஃபியேரி, பேராசிரியர் பிரான்செஸ்கோ மைசானோ மற்றும் பேராசிரியர் அக்ரிகோலா ஆகியோர் அடங்குவர்.
மைவல் THV-இன் வெற்றியைத் தொடர்ந்து மெரில் தற்போது உலகின் முன்னணி TAVI குழுமமாகவும், TEER அமைப்பை அறிமுகப்படுத்திய முதல் இந்திய நிறுவனமாகவும் உள்ளது. இது டிரான்ஸ்கேத்தர் இதய வால்வு சிகிச்சைகளில் ஒரு புதுமை கண்டுபிடிப்பாளராக நாட்டை நிலைநிறுத்துகிறது.
MyClip TEER அமைப்பானது, கடுமையான மிட்ரல் பின்னோக்கிய பாய்வு (MR) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், முதுமை, உடல் பலவீனம், பெரிதான அல்லது பலவீனமான இதயம் மற்றும் சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் போன்ற ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் காரணமாக அறுவை சிகிச்சைக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.
குறிப்பாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், MR ஒரு பேரழிவு தரும் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது - 50% க்கும் அதிகமான நோயாளிகள் சரியான நேரத்தில் தலையீடு இல்லாமல் உயிர்வாழ முடியாது, மேலும் 1 வருடத்திற்குள்ளான இறப்பு 57% வரை அதிகமாக இருக்கலாம்.
MyClip TEER அமைப்பு மிட்ரல் வால்வு மடிப்புகளை துல்லியமாக மூட உதவுகிறது, இது நுரையீரலுக்குள் சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தின் பின்னோக்கிய ஓட்டத்தைத் திறம்படத் தடுக்கிறது.
இந்த செயல்முறை மிகக் குறைவான ஊடுருவல் கொண்டது, தோராயமாக ஒரு மணி நேரம் எடுக்கிறது, அத்துடன் நோயாளிகள் 3-5 நாட்களுக்குள் வீடு திரும்ப அனுமதிக்கிறது.
வீடு திரும்பிய பிறகு, நோயாளிகள் செயல்முறைக்குப் பிந்தைய ஒரு குறுகிய காலத்திற்குள் நடைபயிற்சி மற்றும் கடினமற்ற வேலை போன்ற அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம்.
- சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.
- கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.
சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.
உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- ஆற்றில் அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூரில் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது. இதில் சில மருந்துகள் கடந்த ஜூன் மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி ஆகும் காலம் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஆற்றில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி ஆகாத மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார்.
- மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, அங்கு வரும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார்.
குறிப்பாக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவம னையில் ஆய்வு செய்த அவர், மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கேட்டறிந்தார்.
மேலும், நாகூர் தர்கா அலங்காரவாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு அங்கிருந்த பதிவேட்டை ஆய்வு செய்தார். மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நாகை நகர்மன்ற தலைவர்மாரிமுத்து, துணைத் தலைவர்செந்தில் குமார், நகர்மன்ற உறுப்பி னர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- கடந்த 10-ந் ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
- இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவுரி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகி பிரணவ், ரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 10-ந்ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குருமூர்த்தி எப்படி இறந்தார்? என தகவல் தெரியவந்துள்ளது. சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் தனது மனைவியிடம் புலம்பி வந்தார். இதனால் சம்பவத்தன்று குருமூர்த்தி மது போதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டு நேராக ஏரியில் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடினர்.
மேலும் வீராணம் ஏரியில்
தீயணைப்பு வீரர்கள், அப்ப குதி பொதுமக்கள் இறங்கி தேடினர். அப்போது மோட்டர்சைக்கிள் ஆழமான
பகுதியில் கிடந்தது. இதை
யடுத்து அந்த மோட்டார்சை க்கிளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- மேற்கு தெரு ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் திருமண்டபத்தில் இலவச மருத்துவமுகாமை நடத்துகின்றனர்
- காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
கலைஞரின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அனு மருத்துவமனை சிவகுமார் எம்.டி., டி.எம். மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலர் எஸ்.சி. மேத்தா ஆகியோர் இணைந்து நாளை 3-ந்தேதி தஞ்சாவூர் மேற்கு தெரு ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் திருமண்டபத்தில் இலவச மருத்துவமுகாமை நடத்துகின்றனர்.இந்த மருத்துவமுகாம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு சுகாதார சோதனைகள்,ஈசிஜி, ரத்த குளுக்கோஸ் சோதனை உள்ளிட்ட சோதனைகளும், இலவச மருந்துகள் வழங்கப்பட உள்ளன.
இந்த இலவச மருத்துவ சேவையில் அனைவரும் பங்கேற்று பயன் அடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
- நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.
- இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.
ஈரோடு,
வேளாண் பயிர்கள் உற்பத்தியில் பயிர்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள், பூஞ்சாண கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.
ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல், உடல் நல பாதிப்பு, உண்ணக்கூடிய பயிர்களை நச்சு கொண்டதாக மாற்றும். எனவே மனிதர்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன், நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.
எனவே, பூச்சி கொல்லி மருந்தால், பயிர்களுக்கான உற்பத்தி செலவு அதிகரிக்கும். எனவே உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேளாண் துறையின் கீழ் செயல்படும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும்.
எதிரி உயிரி பூஞ்சாணமான டிரைகோடெர்மா விரிடி பயிர்களில் ஏற்படும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் போன்ற மண்ணின் மூலம் பரவு நோய்களையும், எதிரி உயிரி பாக்டீரியாவான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மண்ணின் மூலம் பரவும் நோய்கள் மட்டுமின்றி, இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.
மேலும் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்து–வதால், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அனைத்தும், பூச்சி கொல்லி மருந்துகளை ஒப்பிடும்போது, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்ட விவசாயிகள், அருகே உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.
திண்டிவனம் நகரம் லயன் சங்கம் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் வெண்மணி, பட்டணம் ஆத்தூர் ஊராட்சி,ஊரல் ஊராட்சி ஆகியவை இணைந்து திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் சிறப்பு மருத்துவம்,எலும்பு முறிவு சிகிச்சை, மருத்துவம், பொது மருத்துவம் ,முகப்பேர் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் சர்க்கரை நோய் மருத்துவம் ஆகியவை இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.
இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்டனர். இதில் இதற்கான ஏற்பாடுகளை ஊரல், பட்டணம், வெண்மணியாத்தூர், ஒன்றிய கவுன்சிலர் ஊரல் சிலம்பரசன், ஊரல் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை ஆகியோர் செய்து இருந்தனர்.லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 100 நாள் வேலைக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் கூறினார்.
- அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பட்ஜெட் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிரந்தரக் கழிவு ரு.75 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதால் ரூ.12.75 லட்சம் வரை வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமை பெருமளவில் குறையும். அந்த வகையில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும். 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருப்பதும், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்.
பள்ளிக் கல்விக்கு ரூ.78572.10 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதுமானது அல்ல. அதேபோல், தொடர்வண்டித் திட்டங்கள் குறித்தும், நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி தான் இந்த முறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதியைக் கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது என்பதால் இந்த நிதி ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் உற்பத்திப் பொருட்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். இதை வலியுறுத்தி உழவர்கள் போராடி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை சட்டப்பூர்வ உரிமையாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மெட்பார்மின் மாத்திரைகள் 11 கோடிக்கும் அதிகமாக உள்ளன.
- எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், எத்தனை மருந்துகள் உள்ளன என்பதை சென்னையில் இருந்தே பார்க்க இயலும்.
சென்னை:
குளிர் மற்றும் மழை காலங்களில் டெங்கு, இன்புளூயன்சா, எச்.எம்.பி. வைரஸ் தொற்று உள்ளிட்டவை வேகமாக பரவும். வெப்ப நிலை அதிகமாக இருக்கும் போது சின்னம்மை, பொன்னுக்கு விங்கி, அக்கி போன்ற பாதிப்புகள் பரவுவது வழக்கம்.
கடந்த இரு ஆண்டுகளாக இந்த கால பருவ நிலைமாறி அனைத்து கால சூழல்களி லும் அனைத்து விதமான தொற்றுகளும் பரவுகின்றன. குறிப்பாக குளிர் மற்றும் மழைக் காலங்களில் அம்மை பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அதே போன்று மாசுபட்ட நீர் மற்றும் உணவு மூலம் பரவும் டைபாய்டு காய்ச்சல் கோடை காலங்களிலும் பதிவாகிறது.
இதையடுத்து பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான எதிர்ப்பு மருந்துகள் உள்பட 320 மருந்துகளை போதிய எண்ணிக்கையில் தொடர்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல், சளி மருந்துகளில் இருந்து உயிர் காக்கும் உயர் மருந்துகள் வரை அனைத்துமே இருப்பில் உள்ளன. இதைத் தவிர 13 வகையான தடுப்பூசிகளும் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ளன.
ரேபிஸ் தடுப்பூசிகள் மட்டும் 1.08 லட்சம் குப்பிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போதுள்ளன. இதைத் தவிர பாம்பு கடிக்கான மருந்துகள் 21 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மெட்பார்மின் மாத்திரைகள் 11 கோடிக்கும் அதிகமாக உள்ளன. இவை அனைத்தின் இருப்பும் குறையும்போது அதுகுறித்த விவரங்களை டி.டி.எம்.எஸ். எனப்படும் மருந்து விநியோக மேலாண்மை தளத்தில் எங்களால் கண்காணிக்க முடியும். எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், எத்தனை மருந்துகள் உள்ளன என்பதை சென்னையில் இருந்தே பார்க்க இயலும். இதன் வாயிலாக மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அவற்றின் இருப்பை உடனுக்குடன் உறுதி செய்து வருகிறோம். எந்த பருவத்தில் எத்தகைய நோய் பரவினாலும், அதனை எதிர்கொள்வதற்கான மருந்து கையிருப்பும், சிகிச்சை கட்டமைப்பும் நம்மிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- முறையான மருத்துவ சேவையை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை.
- நியாயமான விலையில் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதில் மாநிலங்கள் தோல்வியடைந்துள்ளது.
மருத்துவமனை மருந்தகங்களில் இருந்து மட்டுமே மருந்துகளை வாங்குமாறு நோயாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் என்று பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது, முறையான மருத்துவ சேவையை உறுதி செய்வது மாநில அரசுகளின் கடமை. ஆனால் மலிவு விலையில் மருத்துவ சேவை மற்றும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய மாநில அரசுகள் தவறிவிட்டன. ஏழை மக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை, குறிப்பாக அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதில் மாநிலங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த தோல்வி, தனியார் மருத்துவமனைகளுக்கு வசதி செய்து கொடுத்து ஊக்குவித்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பொதுமக்களை சுரண்டுவதைத் தடுக்க வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக கட்டாய உத்தரவுகளை பிறப்பிப்பது நல்லதல்ல, ஆனால் இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தது.






