உயிர் காக்கும் மருந்துகள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

சாதாரண மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
உயிர் காக்கும் மருந்துகள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி எம்.பி.யான விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்.

சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com