search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை பயிரில் கதிர்நாவாய் பூச்சி தாக்குதலா? -அதிகாரி ஆய்வு
    X

    வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் குறுவை பயிரை ஆய்வு செய்தார்.

    குறுவை பயிரில் கதிர்நாவாய் பூச்சி தாக்குதலா? -அதிகாரி ஆய்வு

    • சிறு துளையிட்டு மணியில் உள்ள சாற்றினை உறிஞ்சி குடிப்பதால் அந்த குறிப்பிட்ட நெல்மணி பதராகி விடும்.
    • பயிர் அதிக அடர்த்தியாக உள்ள இடங்களில் இலையுறை அழுகல் நோய் ஆங்காங்கே தென்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே திருவலஞ்சுழி கிராமத்தில் குறுவைப் பயிரில் கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல் தென்படுவதாக விவசாயிகளிடமிருந்து தகவல் வந்ததை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் அந்த அந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர் உடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறும்போது:-

    பொதுவாக பின் தாளடி பருவத்தில் காணப்படும் கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல்கள் இந்த குறுவை பயிரில் காணப்படுகிறது.

    இந்த பூச்சிகள் கதிரில் அமர்ந்து நெல்மணிகள் உருவாகும் தருணத்தில் நெல்மணிகளில் சிறு துளையிட்டு மணியில் உள்ள சாற்றினை உறிஞ்சி குடிப்பதால் அந்த குறிப்பிட்ட நெல் மணி பதராகி விடும்.

    எனவே மருந்து அடிக்கும் போது சுற்று விழா போட்டு ஒரு சாகுபடி தளையை ஒரே முறையில் மருந்து அடிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தலா 1 கிலோ இஞ்சி, வெள்ளை பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து சார் எடுத்து அந்த சாற்றினை தண்ணீரில் கலந்து கைத்தறிப்பான் கொண்டு மாலை வேளை யில் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால் எளிய முறையில் பூச்சி கட்டுப்படுத்தப்படும்.

    பயிர் அதிக அடர்த்தியாக உள்ள இடங்களில் இலை யுறை அழுகல் நோய் ஆங்காங்கே தென்படுகிறது.

    எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயலில் பட்டம் பிரித்து விட்டு நோய் தென்படும் இடங்களில் ப்ரோபிகோனோசோல் எனும் மருந்தினை ஏக்கருக்கு 250 மில்லி 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம்.

    புகையான் தாக்குதல் வழக்க மாக ஏற்படும் இடங்களிலும் பயிர் அதிக அடர்த்தியாக உள்ள இடங்களிலும் புகையான் வராமல் தடுப்பதற்கு வயலில் பட்டம் பிரித்து ஒரு அங்குலம் நீர் நிறுத்தி ஏக்கருக்கு 5 கிலோ தவிடுவுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் கலந்து தூவினால் புகையானை வராமல் தடுக்கலாம் என்றார்.

    Next Story
    ×