search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணவாளக்குறிச்சி"

    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தை சேர்ந்தவர் பிஜூ. இவரது மகன் லெஜி (வயது 20). இவர், ஆறுதெங்கன்விளையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரி முடிந்து மாலை புதுக்கடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை கல்லூரிக்கு வருவது வழக்கம்.

    சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து லெஜி வழக்கம்போல் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மணவாளக்குறிச்சி கடந்து பரப்பற்று சந்திப்பில் செல்லும்போது முன்னால் பெரியவிளையை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி வல்லேரியன் (48) மோட்டார் சைக்கிளை திடீரென வலதுபுறம் திருப்பினார். இதில் லெஜி பைக் மீது மோதியதில் இரு வரும் கீழே விழுந்து படு காயமடைந்தனர்.

    இதில் வல்லேரியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ராஜாக்கமங்கலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லெஜிக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர் அருகில் ஒரு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வல்லேரியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணவாளக்குறிச்சி அருகே பாணான்விளையை சேர்ந்தவர் ரெத்தினசுவாமி (வயது 73). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டு முன் உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று ரெத்தினசுவாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரெத்தினசுவாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அவரது மகள் பிரதீபா (32) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது தூக்கி வீசப்பட்டார்.
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோசு (வயது 32), தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பிள்ளையார் கோவிலில் இருந்து சேரமங்கலம் நோக்கி சென்றார். பெரிய குளத்தங்கரை பகுதியில் சென்ற போது, அங்கு ஓருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஜோசு நிறுத்த முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோசுவும் தூக்கி வீசப்பட்டார்.

    விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பலத்த காயம் அடைந்த ஜோசு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்தவர் பறையங்கோட்டையைச் சேர்ந்த பாலையன் (51) என தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக திங்கள் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப ட்டு உள்ளார். விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.
    • கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கடியப்பட்ட ணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஆன்றனி மைக்கேல் (வயது 43). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி சபின் சஜோனா (32). இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சபின் சஜோனா தனது மகன்களுடன் வீட்டிலிருந்து மாயமானார். ஆன்றனி மைக்கேல் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.

    இச்சம்பவம் குறித்து ஆன்றனி மைக்கேல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 3 பேரை தேடி வருகின்றனர்.

    • பள்ளி மாணவர்கள் கடற்கரை கழிவுகளை சேகரித்து பேரூராட்சி ஊழியர்களிடம் வழங்கினர்.
    • சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி:

    சர்வதேச கடலோர தூய்மை நாளை முன்னிட்டு மணவாளக்குறிச்சி சின்ன விளை கடற்கரை பகுதிகள் தூய்மை படுத்தப்பட்டது.

    சின்னவிளை பங்கு த்தந்தை சகாய ஜெரோம், பாபுஜி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தர் ராஜ், செயல் அலுவலர் யேசுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிளீன் சீ பவுண்டேசன் (இந்திய) கவரவ தலைவர் இஸ்ரோ விஞ்ஞானி பென்சிகர் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் இந்திய அரிய மணல் ஆலை தலைவர் செல்வராஜன், தமிழ்நாடு அறிவியல் இயக்க குமரி மாவட்ட செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கி ணைப்பாளர் மலர்விழி, கிளீன் சீ பவுண்டேசன் பொது மேலாளர் திருமாறன், மணல் ஆலை உதவி பொது மேலாளர் பிரசாத், நெய்தல் நில எழுத்தாளர் குறும்பனை பெர்லின், சமூக விழிப்புணர்வு சேவகர் கலைவாணன், செயலாக்க நிர்வாகி ரெஜின்மேரி, சமூக சேவகி பெரியவிளை உஷா உள்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பாபுஜி மேல்நிலைப்ப ள்ளி மாணவர்கள் கடற்கரையில் தேங்கி கிடந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பேரூராட்சி ஊழியர்களிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் கூட்டமைப்பு தலைவர் தங்கமணி ஒருங்கிணைத்தார்.

    • மணவாளக்குறிச்சி போலீசில் புகார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளையை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 65). ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்த மாக உரப்பனவிளையில் தோட்டம் உள்ளது. தங்கதுரை இந்த தோட்டத்தில் கல்தூண் மற்றும் முள் வேலி அமைத்திருந்தார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த செல்வன், அசோக் என்ற இளங்கோ, செல்வகுமார், தங்கராஜ், சேகர், யுவராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தோட்டத்தில் உள்ள கல்தூண் மற்றும் முள்வேலியை சேதப்படுத்தினார்கள்.

    இது குறித்து தங்கதுரை மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.போலீசார் முள்வேலியை சேதப்படுத்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • மாணவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை திவண்டாக்கோட்டையை சேர்ந்தவர் ரெத்னகுமார்.

    இவரது மகன் டெனி (வயது 19). 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பொறி யியல் கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்துள் ளார்.

    சம்பவத்தன்று டெனி தனது மோட்டார் சைக்கி ளில் மணவாளக்குறிச்சி - நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். பின்னால் அதே பகுதி யைச் சேர்ந்த ஆசீர் அமர்ந்திருந்தார்.

    மோட்டார் சைக்கிள் வெள்ளமோடி பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது அங்கு குறுக்கே சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் டெனி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்த டெனி அருகில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கடியப்பட்டணம் கிறிஸ்து ராஜா தெருவைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் நிகிலன் (வயது 15).

    இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் நண்பர்களுடன் மணவா ளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ. குடியிருப்பு வளா கத்தின் மதில் சுவர் ஏறி மறுபக்கம் செல்ல முடிவு செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக உயர்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் நிகிலன் தூக்கி வீசப்பட்டான்.

    அவருக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து ஐ.ஆர்.இ. பாதுகாவலர் முரளி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை அடைக்க முடியாமல் அவதி
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கல்லடிவிளை சிவந்தமண் என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரபா (வயது 42). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவருடைய தாத்தா சந்திரன் (76) பிரபாவின் வீட்டு திண்ணையில் உறங்குவது வழக்கம்.

    பிரபா பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும் அத னால் கடனை அடைக்க முடியாமல் அவதிப் பட்டு இருந்ததாகவும் கூறப்படு கிறது. சம்பவத்தன்று இரவு வீட்டில் சத்தம் கேட்டதால் திண்ணையில் தூங்கி கொண்டிருந்த சந்திரன் கதவை திறந்து பார்த்தபோது பிரபா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடி யாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

    இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது. மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவர் போலீசில் புகார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கல்படி சடையன்விளையை சேர்ந்தவர் ரத்தினகுமார், பெயிண்டர். இவரது மனைவி அபிராமி (வயது 33). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உண்டு. மகன் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 12 ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ரத்தினகுமார் வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அவர் உறவினர்கள் மற்றும் அபிராமியின் பெற்றோர் வீட்டில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ரத்தினகுமார் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மணவாளக்குறிச்சி போலீசில் புகார்
    • 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவரது மனைவி கிஜிலா (43). இவர் அப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி இவர் வேலை முடிந்து ஆற்றின்கரை பகுதியில் நடந்து செல்லும்போது கல்லடிவிளையை சேர்ந்த வினு, கோபகுமார் உள்பட 5 பேர் கிஜிலாவை வழிமறித்து தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் திட்டினார்கள்.

    பின்னர் அவரை கீழே தள்ளி தாக்கி னர். மேலும் அவரை மானபங்கப்படுத்த முயற்சித்தனர்.

    இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் திருட்டு.
    • மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் மணி. கேபிள் டி.வி. ஊழியரான இவர் மனைவி, குழந்தைகள் மற்றும் தாயார் சாந்தம்மாள் (வயது 75) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கி னர்.அப்போது காற்றுக்காக சமையல் அறை ஜன்னல் கதவை திறந்து வைத்து உள்ளனர். இந்தநிலையில் இரவில் யாரோ மர்ம நபர் ஜன்னல் வழியாக கையை விட்டு கதவை திறந்து உள்ளார்.

    பின்னர்வீட்டுக்குள் புகுந்த அவர் சாந்தம்மா ளின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்று விட்டார். வீடு புகுந்து நகை பறித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மணவாள க்குறிச்சி போலீசில் மணி புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணவாளக்குறிச்சி போலீசில் புகார்.
    • மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்தவர் மீது வழக்குபதிவு

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டி விளை பொட்டல்குழியை சேர்ந்தவர் சகாய வால்டர், ஸ்டூடியோ போட்டோ கிராபர். இவரது மகன் டஸ்கின் ஜோந்த் (வயது 6). இவன் அந்தப் பகுதியில் ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் மாலை டஸ்கின் ஜோந்த், வீட்டு முன்பு உள்ள சாலையை கடக்க முயற்சித்துள்ளான். அப்போது அம்மாண்டி விளையிலிருந்து திருநயினார்க்குறிச்சி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் அவன் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த டஸ்கின் ஜோந்தை குடும்பத்தினர் மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி டஸ்கின் ஜோந்த் நேற்றிரவு பரிதாபமாக இறந்தான். இது குறித்து சகாய வால்டர், மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த சின்னவிளையை சேர்ந்த பென்கர் கிரோஷியோ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 6 வயது சிறுவன் பைக் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×