என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே முள்வேலியை சேதப்படுத்திய 7 பேர் மீது வழக்கு
- மணவாளக்குறிச்சி போலீசில் புகார்
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளையை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 65). ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்த மாக உரப்பனவிளையில் தோட்டம் உள்ளது. தங்கதுரை இந்த தோட்டத்தில் கல்தூண் மற்றும் முள் வேலி அமைத்திருந்தார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த செல்வன், அசோக் என்ற இளங்கோ, செல்வகுமார், தங்கராஜ், சேகர், யுவராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தோட்டத்தில் உள்ள கல்தூண் மற்றும் முள்வேலியை சேதப்படுத்தினார்கள்.
இது குறித்து தங்கதுரை மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.போலீசார் முள்வேலியை சேதப்படுத்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story