மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாப சாவு

நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது தூக்கி வீசப்பட்டார்.மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோசு (வயது 32), தொழிலாளி.

இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பிள்ளையார் கோவிலில் இருந்து சேரமங்கலம் நோக்கி சென்றார். பெரிய குளத்தங்கரை பகுதியில் சென்ற போது, அங்கு ஓருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஜோசு நிறுத்த முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோசுவும் தூக்கி வீசப்பட்டார்.

விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பலத்த காயம் அடைந்த ஜோசு சம்பவ இடத்திலேயே பலியானார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்தவர் பறையங்கோட்டையைச் சேர்ந்த பாலையன் (51) என தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக திங்கள் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப ட்டு உள்ளார். விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com