search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பரிசு"

    • கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
    • கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பிற்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.

    மாவட்டத்திற்குள்ளேயே கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்போது வண்டி வாடகை என்ற பெயரில் ஒவ்வொரு கரும்பிற்கும் பாதி தொகையினை பறிப்பது எவ்வகையில் நியாயம்? ஆகவே, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரொக்க பணம் ரூ.1,000 கொடுத்திருக்கிறார் முதலமைச்சர்.
    • மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொங்கல் பரிசு தொகுப்பை முதல் பயனாளியாக பெற்ற குடும்ப தலைவி சாந்தி பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியமாக கருதுகிறேன். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரொக்க பணம் ரூ.1,000 கொடுத்திருக்கிறார் முதலமைச்சர்.

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது. எங்கள் பகுதியில் கழிப்பிட வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது 24 மணி நேரமும் திறந்திருக்கும் வகையில் கழிப்பிட வசதி செய்து தந்திருக்கிறார்கள். இதேபோல மருத்துவம், சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற வசதிகளை எல்லாம் செய்து தந்திருக்கிறார்கள்.

    சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும், தேவையானவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை செய்கிறார்கள். மதநல்லிணக்க அடிப்படையில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியர்கள் என பாரபட்சமின்றி எல்லோருக்கமான அரசாக திறம்பட செயல்படுகிறது. அனைத்து மத பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கான வாய்ப்பை முதலமைச்சர் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் நாங்கள் மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல முதலமைச்சரின் கையால் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்ற திருநங்கை அலைகா என்பவரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

    • இன்று முதல் வினியோகம்
    • குறைகள் இருந்தால் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்

    வேலூர்:

    பொங்கல் பண்டிகையொட்டி அரிசி பெறும் ரேசன் அட்டைதாரார்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் முழு கரும்பு ஒன்றினையும் சேர்த்து. பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 49,554 அரிசி பெறும் ரேசன் அட்டைதாரர்களுக்கு அந்தந்த ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

    மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்த்து வழங்கிட ரேசன் கடைகளுக்கு 13-ந் தேதி (வெள்ளிகிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒரே நேரத்தில் வழங்கப்படும்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் ரேசன் கடைகளில் சுழற்சி முறையில் தெரு வாரியாக நானொன்றுக்கு சுமார் 200 முதல் 250 டோக்கன் வழங்கி அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்காள அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை கலெக்டர் குமார வேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    எவ்வித பதட்டமின்றி நெரிசல் ஏற்படாத வகையில் தங்களுக்குரிய ரேசன் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.

    புகார் தெரிவிக்கலாம்

    பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.0415-2252566, மாவட்ட வருவாய் அலுவலர் 9445000004, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவ ாளர்.7335740600 மாவட்ட வழங்கல் அலுவலர் 944500084, கூட்டுறவு சார்பதிவாளர்கள், வேலூர் 9445000185,9344545267, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், மூத்த குடிமக்கள், உடல்முடியாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்ய வேண்டும்.
    • குடும்ப அட்டைதாரர்களுடன் அன்புடன் கனிவுடன் பேச வேண்டும். எந்தவித வாக்கு வாதமும் செய்யக்கூடாது.

    சென்னை:

    பொங்கல் பரிசு தொகுப்பாக இன்றுமுதல் ரேசன் கடைகளில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கப்பணம், ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் தொடர்பாக ரேசன் கடை ஊழியர்களுக்கு அரசு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. அவை வருமாறு:-

    நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    பொங்கல் பொருட்களுக்கு என தனியே பெறப்பட்ட அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும்.

    ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசி வினியோகம் செய்தல் கூடாது.

    பொங்கல் பண்டிகைக்காக புதிய சன்னரக அரிசி நகர்வு செய்யப்பட்ட அரிசி மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு வழங்க வேண்டும்.

    அனைத்து அரிசி மூட்டைகளையும் குத்தூசி மூலம் அரிசியின் தரத்தினை இன்றே சரிபார்க்க வேண்டும். பொருட்கள் வினியோகத்தின்போது குறை காணப்பட்டால் மாற்று அரிசி வழங்கிட இயலாத நிலை ஏற்படும். தரமான அரிசி வழங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும்.

    100 சதவீதம் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது.

    அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் புதிய பச்சரிசி வழங்கப்பட்டுள்ளதால் இதில் வண்டு, செல் பூச்சி எளிதில் பிற மூட்டைகளில் இருந்து இதற்கு பரவிவிட வாய்ப்பு உள்ளது. இதனை தனியே பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

    பச்சரியில் பூச்சி எளிதில் உற்பத்தி ஆகிவிடும் என்பதால் இதனில் கவனம் தேவை என்பதை விற்பனையாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    அதிகபூச்சி, வண்டுகள் காணப்படும் பச்சரிசியினை உடன் மாற்றம் செய்து தரமான அரிசி வினியோகம் செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    சர்க்கரை வினியோகம் தொடர்பில் இதற்கென தனியே பெறப்பட்ட சர்க்கரை மட்டுமே பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க வேண்டும்.

    தூய்மையான வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை 100 சதவீதம் அனைத்து கடைகளுக்கும் நகர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை மட்டுமே பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு பயன்படுத்திட வேண்டும்.

    சர்க்கரையின் தரமும் உறுதி செய்துகொள்ள வேண்டும். பழுப்பு நிற சர்க்கரை, மாவு போன்ற சர்க்கரை போன்றவற்றை வினியோகம் செய்தல் கூடாது.

    நியாய விலை கடைகளுக்கு 100 சதவீதம் கரும்பு நகர்வு செய்திட வேண்டும். எண்ணிக்கையில் குறைவு இருக்க கூடாது. அதிகமாக இருக்கலாம். ஆனால் குறைவு கண்டிப்பாக இருக்க கூடாது.

    கரும்பின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது.

    6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே பொதுமக்களுக்கு வினியோகம் செய்திட வேண்டும்.

    எக்காரணத்தை கொண்டும் 6 அடிக்கு குறைவான கரும்புகளை வினியோகம் செய்யக்கூடாது. அதனை தனியே பிரித்து வைத்துவிட வேண்டும். இதனை வினியோகம் செய்யக்கூடாது. மேலும் இது பொதுமக்களின் பார்வைக்குபடும்படி வைத்து தேவையில்லா பிரச்சினைகளுக்கு வழிவகுக்க கூடாது.

    நோயுள்ள செல்லரித்த பிடித்த, கோந்தாளை கரும்புகள் வினியோகம் செய்யக்கூடாது.

    கரும்பு சோகையுடன் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மொத்த உயரம் 10 அடி அல்லது அதற்கு மேல் இருக்கக்கூடும். மின்கம்பங்கள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஒருவாரம் வரையிலும் கரும்பு இருப்பில் உள்ள நிலை உள்ளதால் கரும்பு சோகைகள் காய்ந்து போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை ஈர சாக்கு போர்த்தி தினமும் தண்ணீர் தெளித்து பாதுகாப்பு செய்திட வேண்டும்.

    ரூ.1000 ரொக்கத்தையும் உரிய நபர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும்.

    இரண்டு ரூ.500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும் சில்லரை மாற்றித்தர கூடாது.

    அனைவரும் பார்க்கும்படி கையில் தரவேண்டும். கவரில் வைத்து தரக் கூடாது.

    9-ந்தேதி முதல் 12-ந் தேதி ஆகிய தேதிகளுக்குள் முழுமையாக வினியோகம் செய்திட வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், மூத்த குடிமக்கள், உடல்முடியாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்ய வேண்டும்.

    தினமும் 200 முதல் 350 வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க டோக்கன் வினியோகம் செய்யபட்டிருக்கும் நிலையில் மாற்றுத்தேதி டோக்கன் கொண்டு எவரேனும் வந்தால் அவருக்கு இல்லை என்று சொல்லாமல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரொக்கம் வினியோகம் செய்ய வேண்டும்.

    வேறு தேதிக்கு வா என்று சொல்லக்கூடாது. குடும்ப அட்டைதாரர்களுடன் அன்புடன் கனிவுடன் பேச வேண்டும். எந்தவித வாக்கு வாதமும் செய்யக்கூடாது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் மற்றும் கரும்பு நல்லமுறையில் மக்களுக்கு சென்றடைவதை கட்டாயம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பொங்கல் பரிசை வாங்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
    • டோக்கன் இல்லாதவர்கள் 13-ம் தேதி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது.

    இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு தெருக்கள் வாரியாக எப்போது வந்து மக்கள் பொங்கல் பரிசை வாங்க வரவேண்டும் என்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் இல்லாதவர்கள் 13-ம் தேதி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பரிசுத்தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கும் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு கோட்டைக்கு செல்லும் வழியில் போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அந்த கடையில் உள்ள பொதுமக்கள் 20 பேருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 பணத்துடன் ஒரு முழு கரும்பு ஆகியவற்றையும் தனது கையால் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதேபோல் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்க உள்ளனர்.

    • பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.
    • 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கினர்

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கிடவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் மாவட்ட த்தலைவர்கள் வெங்கடேசன், சேதுராமன்,நகர தலைவர் பிரேம்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் க.அகோரம் கண்டன உரையாற்றினார். பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்க வலியுறுத்தி தேங்காயை சாலையில் கொட்டி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து லாரியில் 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
    • இதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்து ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 ரேஷன் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதற்காக மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை வழங்கி வருகின்றனர். டோக்கனில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப் பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் ரேஷன் அட்டைதாரர்கள் வந்து பொங்கல் தொகுப்புகளை பெற்று செல்லலாம் என்று கூறியுள்ளனர். இது குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் அதற்கென்று தனியாக தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டிருந்தது.

    வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டது. இன்றுடன் டோக்கன் வழங்கும் பணி நிறைவடைகிறது.

    இதனைத் தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைக்கிறார்.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு கடைகளிலும் சுமார் 200 பேர் வரை பொங்கல் தொப்புக்குகளை வாங்கி செல்ல டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளுக்கு கார்டுகளின் எண்ணி க்கையின் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. கரும்பு அனுப்பும் பணியும் நடந்து முடிவடைந்து விட்டது. அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட சமயத்தில் பல்வேறு காரணங்களுக்காக டோக்கன் விநியோகம் செய்ய முடியாத அரிசி அட்டைதாரர்கள் வருகிற 13-ந் தேதி அன்று அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து பொங்கல் தொகுப்பினை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆலங்குடி மேலாத்துாரில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொது மக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூர் ஊராட்சி நீர் பாசன சங்கம் சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார்.விழாவில் நீர் பாசன சங்க தலைவர் குமார், மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சோபா புஷ்பராஜ், ஆலங்குடி ஊராட்சி மன்ற திருவரங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கரம்பக்காடு ஜெமீன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குழ.சண்முகநாதன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


    • ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு தெருக்கள் வாரியாக எப்போது வந்து மக்கள் பொங்கல் பரிசை வாங்க வரவேண்டும் என்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
    • டோக்கன் இல்லாதவர்கள் 13-ந்தேதி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இதற்காக அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஒவ்வொருவருக்கும் 6 அடி உயரம் உள்ள செங்கரும்பு தோகையுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் 500 ரூபாய் தாள்கள் 2 கையில் கொடுக்க வேண்டும் என்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை தரமானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு தெருக்கள் வாரியாக எப்போது வந்து மக்கள் பொங்கல் பரிசை வாங்க வரவேண்டும் என்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி இதுவரை 93 சதவீதம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுவிட்டது. பூட்டிய வீடுகள், வெளியூர் சென்றவர்கள் என ஒரு சிலருக்குத்தான் இன்னும் டோக்கன் சென்றடையவில்லை.

    டோக்கன் இல்லாதவர்கள் 13-ந்தேதி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பரிசுத்தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கும் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதையொட்டி ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் ஏற்கனவே பச்சரிசி, சர்க்கரை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று முழுக்கரும்பு மற்றும் பணம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்கப்படுவதையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு கோட்டைக்கு செல்லும் வழியில் போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அந்த கடையில் உள்ள பொதுமக்கள் 20 பேருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 பணத்துடன் ஒரு முழு கரும்பு ஆகியவற்றையும் தனது கையால் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதேபோல் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்க உள்ளனர்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உள்ள சர்தார்ஜன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்குகிறார்.

    ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள 2 ரேசன் கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை ஒதுக்கி கட்டிடத்தை புதுப்பித்து கட்டி இருந்தார். அந்த கடைகளை திறந்து வைத்து பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்க உள்ளார்.

    • கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளடக்கிய நடமாடும் கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.
    • பொது மக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான ரொக்க பரிசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதன்படி, செங்கல்பட்டு வண்டலூர் வட்டங்கள் மற்றும் காட்டாங்கொளத்தூர் வட்டாரத்துக்கு செங்கல்பட்டு சார் ஆட்சியர் (9445000414) அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதே போல், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் வட்டாரத்துக்கு மதுராந்தகம் கோட்டாட்சியர் (9445000415), செய்யூர் வட்டம், சித்தாமூர் வட்டாரத்துக்கு செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (99447 25575), செய்யூர் வட்டம் இலத்தூர் வட்டாரத்துக்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (9725307555), திருக்கழுங்குன்றம் வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (9500959938), திருப்போரூர் வட்டத்துக்கு கலால் உதவி ஆணையர் (9444939212) ஆகியோர் சிறப்பு கண் காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் ஒவ்வொரு வட்டத்துக்கும் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளடக்கிய நடமாடும் கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.

    பொங்கல் பரிசுகளை வழங்கும் போது, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்காக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும், பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தை ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம். பொங்கல் பரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்படும்.

    இது தவிர பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்கும் பணிகளை கண்காணிக்கவும், பொது மக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 044-27427414, 27427412 ஆகிய எண்களிலும், வட்டங்கள் வாரியாக புகார்களை தெரிவிக்க செங்கல்பட்டு வட்டம்-8637616667, மதுராந்தகம்-82482 12994, செய்யூர்-9597373617, திருக்கழுக்குன்றம்- 9940624877, திருப்போரூர்- 99443 36339, வண்டலூர்- 7708931572 கட்டணமில்லா தொலைபேசி எண். 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் 3,93,204 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வருகிற 9-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு சம்பந்தப்பட்ட தகவல், புகார் ஏதேனும் இருப்பின் அதனை 044-27238225, 9043046100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக டோக்கன்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகிக்கும் போது கதவு பூட்டப்பட்டு இருந்தாலோ, வெளியூர் சென்று இருந்தாலோ வழங்க முடியாமல் போகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடும் வகையில் அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

    சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப்பணமும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.

    சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9-ந்தேதி பொங்கல் தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தவுடன் அனைத்து பகுதியிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பொங்கல் தொகுப்பு பெறும் வகையில் வீடு வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் வழங்கி வருகின்றனர். எந்த நாளில் எந்த நேரத்தில் கடைக்கு வந்து ரொக்கப்பணம் பெற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. தினமும் 200 முதல் 300 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக டோக்கன்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகிக்கும் போது கதவு பூட்டப்பட்டு இருந்தாலோ, வெளியூர் சென்று இருந்தாலோ வழங்க முடியாமல் போகிறது.

    இதுபோன்ற காரணத்தால் டோக்கன் கிடைக்காதவர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படத்தேவையில்லை. அனைவருக்கும் பொங்கல் தொகுப்பிற்கான பணம், பொருட்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை டோக்கன் பெற முடியாத நிலையில் இருந்தவர்களுக்கும் விடுபட்டு போனவர்களுக்கும் தனியாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அவர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

    ரூ.1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் பெறக்கூடிய குடும்ப அட்டை உறுப்பினர்கள், கைரேகை பதிவு செய்து பெற வேண்டும். ரேஷன் கடைக்கு வர இயலாத நிலையில் உள்ளவர்கள் அவர்களின் அத்தாட்சி கடிதம் பெற்று வந்து ஒருவர் தொகுப்பை பெறலாம் என்று சிவில் சப்ளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் ரேஷன் கடைகள் இயங்காது. வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையில் 5 நாட்களுக்குள் பெற இயலாமல் உள்ளவர்களுக்கு மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்படுமா என்பது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
    • ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கினர்

    போளூர்:

    பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது ரூ.1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை ஒரு கிலோ மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க நேற்று முதல் போளூரில் 18 வார்டுகளில் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் விநியோகம் செய்தனர்.

    ×