search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்பு கொள்முதல்"

    • பஞ்சாபில் மட்டுமின்றி, அரியானாவில் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,860 வழங்கப்படுகிறது.
    • ஒரு டன் கரும்புக்கு ரூ.1000 வீதம் உழவர்களிடம் சுரண்டப்படுவதாக வைத்துக்கொண்டால், ஓராண்டில் ரூ. 2080 கோடி சுரண்டப்படுகிறது.

    சென்னை:

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பஞ்சாப் மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.3910 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் பக்வந்த்சிங் மான் அறிவித்திருக்கிறார். இதன்மூலம் இந்தியாவிலேயே கரும்புக்கு அதிக விலை கொடுக்கும் மாநிலம் என்ற பெயரை பஞ்சாப் பெற்றுள்ளது. நாட்டில் கரும்புக்கு மிகக் குறைந்த விலை கொடுக்கும் மாநிலம் என்ற அவப் பெயரை தமிழகம் பெற்றுள்ளது.

    பஞ்சாபில் மட்டுமின்றி, அரியானாவில் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,860 வழங்கப்படுகிறது. உத்தரபிரதேச அரசு கரும்பு கொள்முதல் விலையை ரூ.3750 ஆக உயர்த்தியுள்ளது. வட மாநிலங்களில் கரும்புக்கு இந்த அளவுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு குறைவாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது உழவர்களை சுரண்டும் செயலாகும். தமிழகத்தில் ஆண்டுக்கு 2.08 கோடி டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு டன் கரும்புக்கு ரூ.1000 வீதம் உழவர்களிடம் சுரண்டப்படுவதாக வைத்துக்கொண்டால், ஓராண்டில் ரூ. 2080 கோடி சுரண்டப்படுகிறது.

    தமிழ்நாட்டு உழவர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால், 2016-17-ம் ஆண்டுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த, கரும்புக்கு மாநில அரசே பரிந்துரை விலை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த விலையுடன் ரூ.1081 கூடுதல் விலையாக சேர்த்து, டன்னுக்கு 4000 ரூபாயை மாநில அரசின் பரிந்துரை விலையாக அறிவிக்க வேண்டும். அந்த விலையை அனைத்து சர்க்கரை ஆலைகளும் வழங்குவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு டன் கரும்புக்கு ரூ.2,919 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • குறைந்தது கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5000 கொள்முதல் விலையாக வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,919 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய ரூ.1570 மட்டுமே செலவு ஆவதாகவும், அதை விட 100.60 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது, பற்றாக்குறையான கொள்முதல் விலையை ஏற்றுக்கொள்ள முடியாத உழவர்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வேதனைத் தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்று அமைந்திருக்கிறது.

    கரும்பு சாகுபடியை லாபமானதாக மாற்ற வேண்டுமானால், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைபடி ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3,500 என்பதை அடிப்படையாகக் கொண்டு, அத்துடன் 50சதவீதம் லாபம், அதாவது ரூ.1750 சேர்த்து கொள்முதல் விலையாக ரூ.5,250 நிர்ணயிக்க வேண்டும். குறைந்தது கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5000 கொள்முதல் விலையாக வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
    • கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பிற்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.

    மாவட்டத்திற்குள்ளேயே கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்போது வண்டி வாடகை என்ற பெயரில் ஒவ்வொரு கரும்பிற்கும் பாதி தொகையினை பறிப்பது எவ்வகையில் நியாயம்? ஆகவே, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரொக்கத்துடன், முழு கரும்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • நேரடியாக சென்று, அவற்றின் உயரம், தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டத்தில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இந்த பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கத்துடன், முழு கரும்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறைவாக இருக்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளிலேயே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    அதன்படி தருமபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 70 ஆயிரம் கரும்புகளை கொள்முதல் செய்யும் பணியில் வேளாண்மை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் கரும்பு பயிரிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அவற்றின் உயரம், தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

    அரூர் பகுதியில் வேளாண்மை துறை அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் காந்தி நகர், அச்சல்வாடி, பேதாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பின் தரத்தினை ஆய்வு செய்தனர்.

    இதனைடுத்து விவசாயிகளிடம் கரும்புகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர் விவரம், வங்கிக் கணக்கு எண், சிட்டா, அடங்கல் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து, அரசு வழங்கியுள்ள விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்றனர்.

    • வேளாண்மை துறை அலுலவர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் முழுக் கரும்பும் சேர்த்து

    வழங்கப்படும் என

    முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    இதன்படி சேலம் மாவட்டத்தில் 10,73,514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 10,74,453 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

    இப்பொங்கல் பரிசு வழங்குவதற்காக 10,74,453 முழு கரும்பு சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மை துறை அலுலவர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள அலுவ லர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை களின்படி கரும்பின் தரம், உயரம் ஆகியவற்றை வேளாண்மை துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு விவ சாயி களிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும். எனவே, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கக்கூடிய கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் என விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் பன்னீர் கரும்பு அதிகள

    வில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இதர மாவட்ட அலுவ லர்களும் சேலம் மாவட்டத்தில் கரும்பு கொள்முதல் செய்யலாம். எனவே விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்ய வரும் அலுவலர்கள் குறித்த முழுமையான விவரம் மற்றும் எந்த

    மாவட்டத்திற்கு தங்களிட மிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளவேண்டும். இது தொடர்பாக உதவி மைய தொலைபேசி எண்.0427-2415784 மற்றும் 7338721707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
    • வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது.

    திருப்பூர்:

    தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு வருகிற 27-ந்தேதி முதல் போராட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.முத்துவிஸ்வநாதன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது. இந்த கோரிக்கை தொடா்பாக பல்வேறு விவசாய சங்கத் தலைவா்கள், சம்பந்தப்பட்ட அமைச்சா்களிடமும், துறையின் செயலாளரிடமும் கோரிக்கை வைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தமிழக அரசு பொங்கல் கரும்பை கொள்முதல் செய்யாவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.ஆகவே கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருந்து அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத்திட்டத்தில் கரும்பு வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றனா். 

    • பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வயலியுறுத்தப்பட்டது.
    • மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

    இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.

    தமிழக அரசு கடந்த வருடம் போல் இந்த வருடமும் கரும்பை கொள்முதல் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தடைசெய்யப்பட்ட சில பூச்சி கொல்லி மருந்துகளின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விளைந்து வரும் நெற்பயிரை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.

    கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணப்பட்டுவாடா விவசாயி களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலூர் பெரியாறு ஒரு போக விவசாயிகள் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×