search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal gift set"

    • சாயல்குடி, கடலாடி பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
    • சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.



    சாயல்குடியில் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், மேலக் கிடாரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி நீர் பாசன சங்கத் தலைவர் ராஜாராம், சாயல்குடி பேரூராட்சி துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், நகர் இளைஞரணி செய லாளர் விக்னேஷ் ராம், சாயல்குடி நகர துணை செயலாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் காமராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சித் தலைவர்கள் மங்களசாமி கன்னியம்மாள், சண்முகவேல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் இளங்கோவன், வகிதா சகுபர், மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, முன்னாள் ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், வார்டு செயலாளர் கென்னடி, கிளைச் செயலாளர் மாரியூர் ஜமால், காசி, காவா குளம் முருகேசன், மேலக் கிடாரம் பழனிச்சாமி, ஒப்பிலான் இப்ராகிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நரிப்பையூர், கன்னிராஜ புரம், செவல்பட்டி, எஸ். தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.

    இதில் ஊராட்சித் தலைவர்கள் செஞ்சடை நாதபுரம் லிங்கராஜ், காணி ஒக்கூர் தென்னரசி செல்ல பாண்டியன், ஏ.புனவாசல் ராஜேந்திரன், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். தரைக்குடி முனியசாமி, டி. வேப்பங்குளம் முருகன், எஸ்.வாகைக்குளம் ஜெயலட்சுமி வடமலை, முன்னாள் உச்சநத்தம் ஊராட்சி தலைவர் பால கிருஷ்ணன், சாயல்குடி தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கடலாடி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆப்பனூர், பொதிகுளம், கிடாத்திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். கடலாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கடலாடி, புனவாசல், ஓரிவயல், கருங்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகளை கடலாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வழங்கினார்.

    • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது.

    பல்லடம்:

    பல்லடம் தாலுகாவில் 80,420 பேருக்கு பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ரொக்கம் ரூ.ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ வெல்லம்,ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள்.

    பல்லடம் பகுதியில் உள்ள 134 ரேசன் கடைகளில்,80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி தொடங்கியது. அந்தந்த பகுதி ரேசன் கடைஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது. இந்த முறை துணிப்பை வழங்கப்படாது என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் துணிப்பை எடுத்து வந்து பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • அரி சியின் தரத்தினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சிக்கு ட்பட்ட தனலட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 15-ந்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பினை வழங்கிட ஏதுவாக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன் அங்கு சென்று டோக்கன் பணியை ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில்:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழர் திருநா ளாம் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு ரேசன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பு வழங்கப்படும் எனவும் கிராமப்புற ரேசன் கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்களுக்கும் நகர்புற ரேசன் கடைகளின் மூலம் 300 டோக்கன்கள் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மூலம் 3-ந் தேதி முதல் 8-ந்தேதி வரை வீடு வீடாக சென்று ரேசன் கடை விற்பனையாளர்கள் டோக்கன் வழங்கிடவும் 9.01.2023 முதல் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார். 

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 6,15,020 குடும்ப அட்டைத்தாரர்கள் 434 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என மொத்தம் 6,15,454 குடும்ப அட்டை தாரர்களுக்கு கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் 982 முழுநேர ரேசன் கடைகள் 245 பகுதி நேர கடைகள் மகளிர் சுயதஉவிக்குழுவின் மூலம் இயங்கும் 27 முழுநேர கடைகள் என மொத்தம் 1,254 ரேசன் கடைகள் மூலம் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்குகின்றனர். மேலும் டோக்கன் வழங்கும் பணியினை கண்காணிக்கும் வகையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஒவ்வொரு நாளும் டோக்கன் வழங்கிய விவரத்தினை கூட்டுறவு த்துறை அலுவலருக்கு தெரிவி த்திடவும் உத்தர விட்டுள்ளார். எனவே குடும்ப அட்டை தாரர்கள் டோக்கனில் குறிப்பி டப்பட்டநாள் மற்றும் நேரத்தில் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியிட்டு குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

    இதன் பின்னர் தனல ட்சுமி கார்டன் ரங்கநாதன் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் திரு நாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொ குப்பில் வழங்கப்படவுள்ள அரி சியின் தரத்தினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் யசோதா தேவி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகா ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
    • வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது.

    திருப்பூர்:

    தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு வருகிற 27-ந்தேதி முதல் போராட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.முத்துவிஸ்வநாதன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது. இந்த கோரிக்கை தொடா்பாக பல்வேறு விவசாய சங்கத் தலைவா்கள், சம்பந்தப்பட்ட அமைச்சா்களிடமும், துறையின் செயலாளரிடமும் கோரிக்கை வைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தமிழக அரசு பொங்கல் கரும்பை கொள்முதல் செய்யாவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.ஆகவே கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருந்து அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத்திட்டத்தில் கரும்பு வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றனா். 

    ×