என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் தொரப்பாடி ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கினார். அருகில் மேயர் சுஜாதா.
4.49 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
- இன்று முதல் வினியோகம்
- குறைகள் இருந்தால் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்
வேலூர்:
பொங்கல் பண்டிகையொட்டி அரிசி பெறும் ரேசன் அட்டைதாரார்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் முழு கரும்பு ஒன்றினையும் சேர்த்து. பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 49,554 அரிசி பெறும் ரேசன் அட்டைதாரர்களுக்கு அந்தந்த ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்த்து வழங்கிட ரேசன் கடைகளுக்கு 13-ந் தேதி (வெள்ளிகிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒரே நேரத்தில் வழங்கப்படும்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் ரேசன் கடைகளில் சுழற்சி முறையில் தெரு வாரியாக நானொன்றுக்கு சுமார் 200 முதல் 250 டோக்கன் வழங்கி அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்காள அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை கலெக்டர் குமார வேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.
எவ்வித பதட்டமின்றி நெரிசல் ஏற்படாத வகையில் தங்களுக்குரிய ரேசன் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.
புகார் தெரிவிக்கலாம்
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.0415-2252566, மாவட்ட வருவாய் அலுவலர் 9445000004, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவ ாளர்.7335740600 மாவட்ட வழங்கல் அலுவலர் 944500084, கூட்டுறவு சார்பதிவாளர்கள், வேலூர் 9445000185,9344545267, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.






