search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில்  நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
    X

    ரேஷன் கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

    • ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
    • இதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்து ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 ரேஷன் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதற்காக மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை வழங்கி வருகின்றனர். டோக்கனில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப் பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் ரேஷன் அட்டைதாரர்கள் வந்து பொங்கல் தொகுப்புகளை பெற்று செல்லலாம் என்று கூறியுள்ளனர். இது குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் அதற்கென்று தனியாக தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டிருந்தது.

    வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டது. இன்றுடன் டோக்கன் வழங்கும் பணி நிறைவடைகிறது.

    இதனைத் தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைக்கிறார்.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு கடைகளிலும் சுமார் 200 பேர் வரை பொங்கல் தொப்புக்குகளை வாங்கி செல்ல டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளுக்கு கார்டுகளின் எண்ணி க்கையின் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. கரும்பு அனுப்பும் பணியும் நடந்து முடிவடைந்து விட்டது. அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட சமயத்தில் பல்வேறு காரணங்களுக்காக டோக்கன் விநியோகம் செய்ய முடியாத அரிசி அட்டைதாரர்கள் வருகிற 13-ந் தேதி அன்று அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து பொங்கல் தொகுப்பினை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×