என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில் பா.ஜனதாவினர் நூதன போராட்டம்
    X

    தேங்காய்களை மக்களுக்கு வழங்கி நூதன ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜனதாவினர்.

    சீர்காழியில் பா.ஜனதாவினர் நூதன போராட்டம்

    • பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.
    • 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கினர்

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கிடவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் மாவட்ட த்தலைவர்கள் வெங்கடேசன், சேதுராமன்,நகர தலைவர் பிரேம்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் க.அகோரம் கண்டன உரையாற்றினார். பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்க வலியுறுத்தி தேங்காயை சாலையில் கொட்டி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து லாரியில் 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    Next Story
    ×