search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சு போட்டி"

    • பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • நாடார்கள் உறவின் முறைபொருளாளர் செந்தூரான் வரவேற்றார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் மற்றும் அருப்புக் கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் இணைந்து காமராஜர் 121- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். நாடார்கள் உறவின் முறைபொருளாளர் செந்தூரான் வரவேற்றார்.

    பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

    மேலும் நிகழ்ச்சியில் நாடார்கள் உறவின்முறை துணைத்தலைவர் முத்துக்குமார், காரியதரிசி முத்துசாமி , புரவலர் ராமர், எஸ்.பி.கே.கல்விக் குழும தலைவர் ஜெயக்குமார், நாடார் மகாஜன சங்க மண்டல செயலாளர் கனக ரத்தினம் எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கவுன்சிலர்மணி முருகன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசி கோபிநாத், இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன், கல்லூரி செயலாளர் முத்து தினகரன், தொடக்கப் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன், ஜூனியர் நர்சரி பள்ளி செயலாளர் ராஜசெல்வம், பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின்பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ- மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள்பே ச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர். பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு முதல் பரிசு ரூ5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரமும் ஆறுதல் பரிசாக வழங்கினர்.

    • திருவருட்பா போட்டி தருமபுரி குமாரசாமிப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் திருவருட்பா போட்டி தருமபுரி குமாரசாமிப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டிகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சன்மார்க்க சங்க மாநில பொருளாளர் நஞ்சுண்டன், மாவட்ட பொறுப்பாளர் சிவகுமார், நிர்வாகி மல்லிகா சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் சிவானந்தன், ராஜகோபால், ராதாமணி, பிரபு, ஆய்வாளர்கள் சங்கர், துரை, மணிகண்டன், சங்கர் கணேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
    • நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த மாதம் இந்த போட்டி நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 181 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கடந்த மாதம் நடந்தது. இந்த போட்டியில் பெரியபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி பேத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் மகளுமான பெரியபட்டினம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவி அர்ஷியா வெற்றி பெற்றார்.அவருக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் சிறப்பு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சபீர்பானு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.
    • ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட பள்ளி
    மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.

    இதில் வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஜெ.தர்ஷினி, மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.

    பரிசு பெற்ற மாணவியை பள்ளியின் புரவலர் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    இந்நிகழ்வில் பள்ளியில் நிர்வாக குழு தலைவர் ராஜேஷ், செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், முதல்வர் ஜெகதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • பேச்சு போட்டியில் ஆங்கிலத்துறை மாணவி லிபியா நாராயணி முதல் பரிசு பெற்றார்.

    திருச்செந்தூர்:

    மும்பை சுயசார்பற்ற நிறுவனங்களின் அமைப்பாளர் ஷெரப் 56-வது நினைவுநாளையொட்டி அகில இ்ந்திய அளவில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் பேச்சு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பொருளியல் துறையின் உதவி பேராசிரியை முருகேஸ்வரி நன்றி கூறினார். போட்டியில் நடுவர்களாக பொருளியல் துறை இணை பேராசிரியர் மாலைசூடும் பெருமாள், உதவி பேராசிரியர் கணேசன் மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ராஜ் பினோ ஆகியோர் செயல்பட்டனர்.

    பேச்சு போட்டியில் முதுகலை 2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி லிபியா நாராயணி முதல் பரிசாக ரூ.2500-ம், இளங்கலை பொருளியல் 3-ம் ஆண்டு மாணவர் செல்வம் 2-ம் பரிசாக ரூ.1,500-ம், இளங்கலை 3-ம் ஆண்டு வணிக நிர்வாகவியல் மாணவர் முகமது செய்க் மபாஷ் 3-ம் பரிசாக ரூ.1000-ம் பெற்றுக் கொண்டனர். மாணவி ஆஷா மற்றும் மாணவர் கார்த்திக் ராஜ் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பொருளியல் துறையின் உதவி பேராசிரியர் வீ.சிவ இளங்கோ தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவ செயலர்கள் ஜெப்ரின் ஆகாஷ் மற்றும் முகுந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
    • சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு 1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவர்களுக்கு அண்ணா, 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உயரும்!, 5. அண்ணாவின் வாழ்விலே என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. அண்ணாவின் மனிதநேயம், 3. அண்ணாவின் தமிழ் வளம், 4. அண்ணாவும் தமிழ் சமுதாயமும், 5. அண்ணாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.

    மேலும், பெரியார் பிறந்தநாளான வருகிற 17-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு 1. பெண்ணடிமை தீருமட்டும், 2. தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே, 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4. பெரியாரின் உலக நோக்கு என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. பெண் ஏன் அடிமையானாள்?, 2. இனிவரும் உலகம், 3. சமுதாய விஞ்ஞானி பெரியார், 4. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும், 5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி, 6. மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன.

    வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பெரியாா், அண்ணா பிறந்த நாளையொட்டி வருகறி 15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    அனைத்துப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவா்களும் இதில் பங்கேற்கலாம். ராமநாதபுரம் வெளிப்பட்டினம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரிடம் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று ராமநாதபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலும், 99522 80798 என்ற மொபைல் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது.
    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சிமன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர்.

    போட்டிகளுக்கு, சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியை ஜான்சி ராணி, ந.சுப்பையாபு ரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் ராஜசேகர். வெள்ளையா புரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் வேல்முருகன் ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.

    விருதுநகர் முதன்மைக்கல்வி அலு வலகத்தின் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பா ளர் தங்க மாரியப்பன் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

    பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டியில் தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜ் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராசர் மேல்நிலைப்பள்ளி மாணவி வைதேகி இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்தீஸ்வரி, 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வென்றனர்.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப்பரிசாக வழங்கப்ப டும். ரூ.2ஆயிரத்தை ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மாரீஸ்வரி, மேலப்பருத்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஹரிணி ஆகியோர் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கான பரிசுத்தொகைகள் பிறிதொரு நாளில் கலெக்டர் முன்னிலையில் வழங்கப்பெறும் என விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி த்துறை உதவி இயக்குநர் சுசிலா தெரிவித்துள்ளார்.

    • கருணாநிதி பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

     மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 28-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு மதுரை உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தில் நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும் இந்த பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப் போட்டி நடத்தி முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் 25 பள்ளி மாணவ, மாணவிகள் பரிந்துரை செய்யப்பெற்று மதுரை வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை யாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரவேண்டும். போட்டிக்கான தலைப்புகள், மாண வர்களுக்கு முன்னதாகத் தெரிவிக்கப்படமாட்டாது.

    சென்னை தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் இருந்து முத்திரையிடப்பட்ட உறைகளில் அனுப்பப்படும் தலைப்பு கள், போட்டி யின்போது நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னி லையில் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்க ப்படும்.

    மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்க ளுக்கு முதல்பரிசாக ரூ.5,000-மும், 2-ம் பரிசாக ரூ.3,000-மும், 3-ம் பரிசாக ரூ.2,000-மும் வழங்கப்படும்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டத்தில் கோட்டாட்டசியர் உள்பட அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்ன. அதன் படி சாத்தூர் கோட்டாட்சியராக இருந்த புஷ்பா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி சாத்தூர் கோட்டாட்சியராக இருந்த புஷ்பா இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

    அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் நரிக்குடிக்கு, திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி சாத்தூருக்கும், மருத்துவ விடுப்பிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் சத்ய சங்கர் வத்ராயிருப்பிற்க்கும், இங்கு பணிபுரிந்த சத்யாவதி விருதுநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் சிறுசேமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ் நரிக்குடிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி வருகிற 3-ந் தேதி நடக்கிறது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறையின்  2021- 22-ம் ஆண்டிற்கான  மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி  பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

    அதன்படி, கருணாநிதி பிறந்தநாளான வருகிற 3-ம் தேதி முற்பகலில்  கல்லூரி மாணவர்களுக்கு  பேச்சுப் போட்டிகள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

    இதில் அரசு, தனியார், அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள்,  பொறியியல் கல்லூரிகள்,   பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள்,  கல்லூரிகளுக்கு, கல்லூரிக்கல்வி  இணை இயக்குநர் வாயிலாக  அனுப்பப்படும். போட்டிக்கான தலைப்புகள், போட்டி நடைபெறும் நாளில்    அறிவிக்கப்படும்.கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம்,  2-ம்பரிசு ரூ.3 ஆயிரம்,  3-ம் பரிசு ரூ.2 ஆயிரம்  வீதத்திலும்  வழங்கப்பட உள்ளன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்   சுசிலா  மேற்கொண்டுவருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×