என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி
- திருவருட்பா போட்டி தருமபுரி குமாரசாமிப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் திருவருட்பா போட்டி தருமபுரி குமாரசாமிப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சன்மார்க்க சங்க மாநில பொருளாளர் நஞ்சுண்டன், மாவட்ட பொறுப்பாளர் சிவகுமார், நிர்வாகி மல்லிகா சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் சிவானந்தன், ராஜகோபால், ராதாமணி, பிரபு, ஆய்வாளர்கள் சங்கர், துரை, மணிகண்டன், சங்கர் கணேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






