search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
    X

    மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

    • பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பெரியாா், அண்ணா பிறந்த நாளையொட்டி வருகறி 15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    அனைத்துப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவா்களும் இதில் பங்கேற்கலாம். ராமநாதபுரம் வெளிப்பட்டினம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரிடம் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று ராமநாதபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலும், 99522 80798 என்ற மொபைல் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×