என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி- தமிழக அரசு அறிவிப்பு
- வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
- சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு 1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவர்களுக்கு அண்ணா, 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உயரும்!, 5. அண்ணாவின் வாழ்விலே என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. அண்ணாவின் மனிதநேயம், 3. அண்ணாவின் தமிழ் வளம், 4. அண்ணாவும் தமிழ் சமுதாயமும், 5. அண்ணாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.
மேலும், பெரியார் பிறந்தநாளான வருகிற 17-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு 1. பெண்ணடிமை தீருமட்டும், 2. தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே, 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4. பெரியாரின் உலக நோக்கு என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. பெண் ஏன் அடிமையானாள்?, 2. இனிவரும் உலகம், 3. சமுதாய விஞ்ஞானி பெரியார், 4. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும், 5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி, 6. மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன.
வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.