பேச்சு போட்டியில் குருஞானசம்பந்தர் மிஷன் முத்தையா பள்ளி மாணவி சிறப்பிடம்

மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.
சிறப்பிடம் பிடித்த மாணவிக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.
சிறப்பிடம் பிடித்த மாணவிக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.
Published on

சீர்காழி:

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட பள்ளி
மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இதில் வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஜெ.தர்ஷினி, மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூபாய் 5000 பரிசு பெற்றுள்ளார்.

பரிசு பெற்ற மாணவியை பள்ளியின் புரவலர் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளியில் நிர்வாக குழு தலைவர் ராஜேஷ், செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், முதல்வர் ஜெகதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com