search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஜைகள்"

    • சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு சீர்காழி திருஞானசம்பந்தர் இசை பள்ளி வழங்கிய 6ம் ஆண்டு மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

    நாட்டியாஞ்சலி விழாவிற்கு அதன் தலைவர் முத்துக்கருப்பன் தலைமை வகித்தார்.

    உப தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் நடராஜ. சட்டையப்பன், உபசெயலாளர் மணிகண்டன், பொருளாளர் கடவாசல் சத்துரு ஹன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் தருமை. சிவா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    தொடர்ந்து சீர்காழி, சிதம்பரம் ,சென்னை, பெங்களூர், கோவை, கும்பகோணம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நாட்டிய நிகழ்வு களை நடத்தினர். திரளான பக்தர்கள் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி கண்டு ரசித்தனர்.

    • மகா சிவராத்திரியில் சிவனை வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன்.
    • மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன.

    திருவாரூர்:

    மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியில், சிவனை வழிபட்டால், ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதைத்தொடர்ந்து, திருவாரூரில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றன.

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில், விடங்கர், மூலவர் வன்மீகநாதர், அசலேஸ்வரர், விஸ்வகர்மேஸ்வரர், இந்திரன் பூஜீத்த லிங்கம், கமலாம்பாள், சப்தமாதர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷகமும், தீபாரதனையும் நடைப்பெற்றன.

    பிரதோஷம் முடித்தவுடன் முதல் கால பூஜைகள் நடந்தேறின.

    பின்னர், இரவு 11 மணியளவில் 2 ஆம் கால பூஜையும் நடைபெற்றன.

    மேலும், கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீகமல முனி சித்தர் லிங்கத்துக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன.

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    திருவாரூர் பகுதியில் உள்ள அனைத்து சிவத்தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    • வெண்ணதாழி மற்றும் வெட்டுங்குதிரை வாகன ஊர்வலம் நடைபெற்றது.
    • வன்னி மரத்தடியில் சிம்மவர்ம அரசனுக்கு காட்சியளித்தல்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எண்கண் சுப்ரமணியசாமி கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் முக்கியத்துவம் பெற்ற கோவிலாக கோயில் வழங்குகிறது.

    இக்கோயிலில் தைப்பூச ஜனவரி 22 முதல் பிப்ரவரி 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 25 முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினம்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

    பிப்ரவரி 2-ந்தேதி பல்லக்கு வெண்ணதாழி மற்றும் வெட்டுங்குதிரை வாகன ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3-ந்தேதி கோவில் திருத்–தேரோட்டம் நடைபெற்றது.

    தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை முதல் தைப்பூச சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் காவிரி கரை சென்று தீர்த்தம் கொடுத்தல் மற்றும் காவடி அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

    நேற்று வன்னி மரத்தடியில் சிம்மவர்ம அரசனுக்கு காட்சியளித்தல் மற்றும் பக்தர் காட்சி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளை காண திருவாரூர் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து இன்று துவஜா அவரோகணம் நிகழ்வும், நாளை பிப்ரவரி 7-ந்தேதி விடையாற்றி சுந்தா–பிஷேகமும் நடைபெறுகிறது.

    • களஞ்சியம் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள்.
    • நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்க–பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்களை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் இடத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு விளைந்த நெல்லை அறுத்து தைப்பூசம் அன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அளிக்கும் நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டும் இதே போல் நெல் அறுவடை செய்து அதனை கோட்டையாக கட்டி விவ சாயிகள் வேதா ரண்யம் கொண்டு வந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று வேதாரண்யம் கோவிலில் ஒப்படைத்தனர்.

    பின்பு அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாரா தனை காண்பிக்கபட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்களை வழங்கினர்.

    • பவுர்ணமி தினத்தன்று சிறப்பாக வேள்வியும், அபிஷேகமும் நடைபெற்றது.
    • மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேய சித்தர் ஜீவப்பீடத்தில் மாதம் தோறும் பௌர்ணமி யாகமானது தமிழ் முறைப்படி சித்தர் பீடத்தை நிர்வகித்து வரும் நாகூர் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    இந்த பௌர்ணமி தினத்தன்று மிகச் சிறப்பாக வேள்வியும், அபிஷேக ஆராதனை களும் நடைபெற்றது.நாகூர், காரைக்கால் திருத்துறைப்பூண்டியை சார்ந்த பக்தர்கள் இந்த வேள்வியில் கலந்து கொண்டார்கள் அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது

    இந்த வேள்வியினை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், டாக்டர் அனிதா, குமார், பழனிவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

    இந்த பூஜையினை கும்பகோணத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் காங்கேய சித்தர் பீடத்தின் அர்ச்சகர் வெங்கட்ராமன் ஆகியோர் பூஜையை செய்தார்கள். வருகின்ற மார்கழி மாதம் முழுவதும் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் அதிகாலையில் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கின்றது.

    • திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜை.
    • கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாகபூஜை நடத்தி வழிபாடு.

    சீர்காழி:

    ஜப்பானில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ் ஆர்வலர் கோபால் பிள்ளை சுப்ரமணியன் தலைமையில் ஜப்பானைச் சேர்ந்த குருஜி பாலகும்ப குருமுனி எனும் தக்காயூகி உள்ளிட்ட 15 பேர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு உலக அமைதிக்காக தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜைகள் செய்து வருகின்றனர்.

    நாடி ஜோதிடர் அடையார் கல்யாணசுந்தரம் வழிகாட்டலின் மூலம் கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாக பூஜை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, திருநிலைநாயகி அம்மன், சட்டநாதர் சுவாமி, தோணியப்பர், திருஞானசம்பந்தர் சந்நிதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள்.
    • 48 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம்.

    தஞ்சாவூர்:

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மேலும், இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

    இக்கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டும். அதன்படி, இந்த ஆண்டு 1037-வது சதய விழா நேற்று முன்தினம் மங்கள இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து கருத்தரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவு நிகழச்சிகள் நடந்தது.

    விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 7 மணிக்கு சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புத்தாடைகள் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து யானை மீது வைத்து ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    அதன் பின்னர் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திரவியபொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 48 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர் பெருவுடையார்-பெரிய நாயகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், இரவு ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.

    • காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி, இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அணுக்கை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 4-ந் தேதி நிறைவடைகிறது.

    தினமும் இரு வேலையும் சந்திரசேகர் வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்ற பின் வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    சண்முகர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்தல் நிகழ்வும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்தல் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி, இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

    இதனை காண வரும் பக்தர்களுக்காக பஸ் வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி, மேலும், மருத்துவ வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி, கோவில் கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • தங்க நகை, திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள் கொண்டு யாகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் உள்ள தேவதுர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று மகாசண்டி யாகம் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கோ பூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, பிரம்மச்சாரியார் பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 7அடி அகலம், 7அடி ஆழத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு யாகத்திற்கு உகந்த தங்க நகை, திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள், கொண்டு யாகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியா ர்கள் சுமந்து கோவிலை வலம் வந்து துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
    • சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் சக்தி விநாயகர்,செல்ல மாரியம்மன், கூத்த பெருமாள் ஐயனார் கோவில்கள் அமைந்துள்ளது.

    இக்கோவில்களின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.

    தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, சித்தி விநாயகர், கூத்த பெருமாள் ஐயனார், செல்ல மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    • கோவில் திருப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கணபதி, மகாலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்பட பூர்வாங்க பூஜைகள் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் உள்ள சியாமளாதேவி, மகா காளியம்மன் கோவில் திருப்பணி கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் நடைபெற்று வந்தது.

    கோயில் திருப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி, மகாலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர், புத்தூர் கிராம வாசிகள், இளைஞர் மன்றத்தினர் செய்தனர்.

    • கடந்த 5-ந் தேதி முதல் நேற்று காலை வரை 6 கால யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
    • கும்பாபிஷேகம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் இருந்து கோபுர கலசங்கள் மற்றும் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய்பாபா அறக்கட்டளையின் சார்பில் பிரமாண்ட சாய்பாபா கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

    பின்னர், இந்த கோவி லுக்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதனையொட்டி கடந்த 5-ந் தேதி முதல் நேற்று காலை வரை 6 கால யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

    அதனைத்தொடர்ந்து நேற்று காலை 11.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அருகே உள்ள திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மன்னார்குடி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை 8 மணி முதலே வாகனங்களில் கோவில் முன்பு குவிந்தனர்.

    பின்னர் அவர்கள் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டபோது சாய்ராம், சாய்ராம் என கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் இருந்து கோபுர கலசங்கள் மற்றும் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டது.

    குடமுழுக்கையொட்டி அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்துவற்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட கார் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய்பாபா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தலைவர் ஆர்.வி.கருணாநிதி, செயலாளர் மற்றும் அறங்காவலர் எம்.ஆர்.வி. ராஜேந்திரன், துணைத்தலைவர் ஆடிட்டர் எல்.ராகவன், அறங்காவல் குழு பொருளாளர் ஆர்.வி.கே.ராம்பிரசாத், அறங்காவலர்கள்.ஆர்.வி.ஆர். மாதவகண்ணன், ஆர்.வி.ஆர். வெங்கட்ராமன், மற்றும் ஆசிரியர் துரை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக சசிகலா, மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திவாகரன், திருத்துறைப்பூண்டி நகரசபை தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ். பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நாகை எம்.பி. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாதஸ்வர நிகழ்ச்சி குடமுழுக்கு முடிந்தவுடன் மாலை 3 மணி அளவில் 100 தவில் வித்வான்கள் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் கலந்து கொண்டு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடத்தினர். இரவு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    இதில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்

    ×