search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராத்திரி"

    • தேவர்கள் எல்லாரும் அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பிரம்மனிடம் சென்று வழி கேட்டனர்.
    • மலை ஒருபக்கமா சரிய தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார்.

    ஒரு காலத்துல தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்துகிட்டே இருந்துச்சு.

    தேவர்கள் எல்லாரும் அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பிரம்மனிடம் சென்று வழி கேட்டனர்.

    பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து சாப்பிட்டால் இறப்பில்லாத இளமையான வாழ்வை பெறலாம்.

    அப்புறம் அசுரர்களை சமாளிப்பது ரொம்ப ஈஸின்னு பிரம்மா வழி சொன்னார்.

    திருமாலிடம் அனுமதி வாங்கிக்கிட்டு மந்திரமலையை மத்தாக்கினாங்க.

    சந்திரனை அசைத்தூணாக்கி வாசுகிங்கற பாம்பை கயிறாக அந்த மலையில் கட்டி தேவர்கள் ஒருபக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் இழுக்க தொடங்கினாங்க.

    மலை ஒருபக்கமா சரிய தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார்.

    அப்புறம் ஒரே ஸ்பீடு தான். அமுதம் உண்ணப்போகிறோம் என்கிற சந்தோஷத்தில் தேவர்கள் வேக வேகமாக கடைஞ்சாங்க.

    வாசுகி களைத்து துடித்தது. அதன் உடல் இறுக்கமாக இருந்ததால் உடலில் இருந்த விஷத்தை கக்கியது.

    அதோடு பாற்கடலில் இருந்தும் நிறைய விஷம் வெளிப்பட்டது.

    இரண்டும் சேர்ந்து ஆலகால விஷம் எனும் கொடிய நஞ்சாக மாறிடுச்சு.

    விஷத்தோட வீரியம் தாங்காம அவர்கள் சிவன் கிட்ட ஓடிப்போய் முறையிட்டாங்க.

    நமசிவாய மந்திரம் உச்சரிச்சாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன்.

    தேவர்களை காப்பதாக உறுதியளித்தான். சுந்தரரை விஷத்தை கொண்டு வரும்படி பணித்தான்.

    சுந்தரர் சென்று அவ்வளவு விஷத்தையும் உருட்டி உருண்டையாக நாவல்கனிபோல் ஆக்கிக்கொண்டு வந்து சிவனிடம் கொடுத்தார்.

    தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன்.

    அன்னை சக்தி பதறிப்போனாள். உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்துவிடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை.

    விஷம் அன்னையின் கைபட்டு கழுத்து பகுதியில் அப்படியே நின்றது.

    ஈசன் திருநீலகண்டன் ஆனார்.

    அவரது உடலில் இருக்கும் விஷத்தின் உஷ்ணம் குறைவதற்காக பிரம்மா, திருமால், முப்பத்து முக்கோடி தேவர்கள்,

    இந்திரன், முனிவர்கள், ரிஷிகள், அசுரர்கள் இவர்களுடன் பார்வதி தேவியும் சிவனை நினைத்து ஆறுகால பூஜை

    செய்து வழிபட்ட தினம் தான் சிவராத்திரி.

    அப்படி சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக ஆலகால விஷத்தை அமுது போல் எண்ணி

    அருந்தியதை நமக்கு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது தான் சிவராத்திரி.

    • மாசி மாதத்து தேய்ப்பிறைச் சதுர்த்தசி கூடிய நாளே மகா சிவராத்திரியாகும்
    • ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற சிவராத்திரி மாத சிவராத்திரியாகும்

    1. மகா சிவராத்திரி: மாசி மாதத்து தேய்ப்பிறைச் சதுர்த்தசி கூடிய நாளே மகா சிவராத்திரியாகும். அந்த நாள் சிவனுக்கே உரியது.

    2. யோக சிவராத்திரி: சோமவார சம்பந்தமாக வரும் யோக சிவராத்திரி நான்கு வகைப்படும். சோம வாரத்தன்று சூரிய உதயகாலம் தொட்டு இரவு முழுவதும் அமாவாசை இருக்குமானால் அன்று யோக சிவராத்திரியாகும்.

    3. நித்திய சிவராத்திரி: வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை வளர்பிறைகளின் சதுர்த்தசி கூடிய 24 நாட்களும் நித்திய சிவராத்திரியாகும்.

    4. பட்ச சிவராத்திரி: தை மாதத்தின் தேய்பிறைப் பிரதமையன்று தொடங்கி 13 நாள் வரையில் தினமும் நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உண்டு 14ஆம் நாளாகிய சதுர்த்தசியன்று விதிப்படி விரதம் நோற்பது பட்ச சிவராத்திரியாகும்.

    5. மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற சிவராத்திரி மாத சிவராத்திரியாகும் அன்று சிவபுராணம் படித்துச் சிவனைப் போற்றினால் வராத நன்மை நம்மை தேடி நாடி வரும்.

    • சிவம் என்றால் மங்கலம் என்று பொருள்.
    • சிவன் என்றால் மங்கலத்தை அருளுபவன் என்பது பொருள்.

    சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். சிவன் என்றால் மங்கலத்தை அருளுபவன் என்பது பொருள்.

    சிவபெருமான் எப்பொழுது மங்கலத்தைத் தருவார்?

    சிவராத்திரி அன்று தெரிந்தோ தெரியாமலோ (யதேச்சையாய்) (எதிர்பார்க்காமல்) சிவலிங்கத்திற்குப் பூஜை செய்தால் எல்லா நன்மைகளும் பெறலாம்.

    தெரியாமல் செய்த சிவ பூஜையும் அதனால் கிடைத்த புண்ணியமும் பற்றி சிவமகாபுராணத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

    வேடன் ஒருவன் வேட்டையாட வில் அம்பும் தோல் பையில் தண்ணீரும் எடுத்து சென்றான்.

    காட்டிற்குள் நுழைந்து வேட்டையாட முற்பட்டான்.

    ஒரு மிருகமும் கிடைக்கவில்லை. பொழுது சாய்ந்து இருட்டு வந்து விட்டது.

    அங்கே ஒரு குளம் தென்பட்டது. அதன் அருகில் ஒரு மரம் உயர்ந்து வளர்ந்திருந்தது.

    அவனுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. இந்த மரத்தின் மீது அமர்ந்து கொள்வோம்.

    குளத்து நீரைக் குடிக்க பல மிருகங்கள் வரும்.

    நாம் அம்பு எய்து கொல்லலாம் என்று எண்ணி அம்மரத்தின் மேல் ஏறி அமர்ந்து மிருகம் ஏதாவது வருகிறதா? என்று கூர்ந்து கவனித்தான்.

    முதல் ஜாமம் ஒரு மான் நீர்க்குடிக்க வந்தது.

    அம்பு போட முயற்சி செய்த போது தோல்பை நீர் தவறி கீழே வீழுந்தது.

    அது அம்மரத்தடியில் முனிவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிசலிங்கத்தை தீர்த்தவாரி (நீராட்டுதல்) செய்தது.

    அம்பைத் தொடுக்கும்போது அதன் நுனி பட்டு வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

    எதிர்பாராத வகையில் நீரும் இலைகளும் விழுந்ததால் அந்த வேடனுக்குச் சிவ பூஜை செய்த புண்ணியம் கிடைத்தது.

    மான் வேடனை நோக்கி, "என் குட்டியை வேறொரு மானிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுச் சென்றது.

    சிறிது நேரம் கழித்து ஆண்மான், பெண்மான், குட்டி மூன்றும் வந்தன.

    அவற்றின் சத்தியத்தைக் கண்ட வேடன் மனம் திருந்தினான்.

    இந்த மான்களிடம் இருக்கும் சத்தியம், நேர்மை, தியாகம் ஆகிய பண்புகள் நம்மிடம் இல்லையே என்று எண்ணி வருந்தினான் மனம் திருந்தினான்.

    அன்று சிவராத்திரி வேடன் இதை அறியவில்லை. வில்வமரம் என்றும் அறியவில்லை.

    அறியாமல் எதிர்பாராத வகையில் சிவபூஜை சிவராத்திரியில் நடந்தேறியது. இவ்வாறு சிவமகாபுராணம் கூறுகிறது.

    • சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது நல்லது.
    • கோகர்ணம், தேவிகாபுரம் ஆகிய சிவத்தலங்களிலும் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது நல்லது.

    அப்பொழுது சிவபெருமானுடைய நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சிறந்தது.

    சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன.

    வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.

    1. திருவைகாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைகாவூரில் எழுந்தருளி உள்ளவர் வில்வனேஸ்வரர் இறைவி சர்வ ஜனரட்சகி. இத்தலத்தைச் சம்பந்தர், நாவுக்கரசர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர்.

    2. திருவண்ணாமலை: பிரமனும் திருமாலும் சிவபெருமான் நெருப்புருவில் நின்றபோது முடி, அடி தேடித் தோல்வி அடைந்து சிவபெருமானை வணங்கிய தலம் திருஅண்ணாமலை. வணங்கிப் போற்றிய இருவருக்கும் காட்சி தந்தது சிவ ராத்திரி அன்றே ஆகும்.

    3. திருக்கடவூர்: காலனை காலால் உதைத்த ஊர் திருக்கடவூர். மார்க்கண்டேயன் சிவனைச் சிவராத்திரி அன்று பூசித்துக் கொண்டிருந்தபோது எமன் வந்து பாசக் கயிற்றை வீச லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் தன் காலால் எமனை உதைத்தார். அத்தலம் தான் திருக்கடவூர். எமன் பூசித்த தலம். அருளாளர்களின் பாடல் பெற்ற தலம். இத்தலத்தைத் தரிசித்தால் எமவாதம் நீங்கும்.

    4. காஞ்சீபுரம்: பார்வதி தேவியார் விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால் சிவபெரு மானால் சாபம் பெற்று தவம் முழுமை அடையாததால் திருவண்ணாமலையில் தவம் செய்து இடப்பாகம் பெற்றார்.

    இவ்வரலாற்றை காஞ்சிபுராணம் மிக விரிவாகக் கூறுகிறது. இந்நிகழ்வு சிவராத்திரி அன்று நடந்தது. காஞ்சியின் ஒரு பகுதி உருத்திரச் சோலை எனப்பட்டதாகவும் காஞ்சிபுராணம் கூறுகிறது. காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரரைச் சிவராத்திரி அன்று வழிபட்டு அருளை பெறுவோமாக.

    5. ஸ்ரீசைலம்: சிவ மகா புராணத் தில் கூறப்பட்ட வேடன் கதை நடந்த இடம் ஸ்ரீசைலம் ஆகும். இங்கே நந்திதேவர் மலை உருவில் வீற்றிருக்கின்றார். காஞ்சியில் மர உருவிலும் திருவண்ணாமலையில் மலை உருவிலும் சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல ஸ்ரீசைலத்தில் மலை உருவில் நந்திதேவர் எழுந் தருளியுள்ளார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் சொல்வார்கள்.

    இது 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்று. சிவராத்தி யன்று இங்குள்ள பாதாளகங்கை என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தரிசித்தால் எல்லா நலன்களும் பெற்று இன்பம் அடையலாம்.

    6. ஓமாம்புலியூர்: சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்த தலம் ஓமாம்புலியூராகும். சிவமகா புராணத்தில் சொல்லப்பட்ட வேடன் கதை போன்ற ஒரு கதை இங்கும் உண்டு. சிவராத்திரியின் பெருமையை விளக்குகிறது. இந்த ஊரினை பிரணவ வியாக்ரபுரம் என்றும் கூறுவர். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.

    7. திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஊர் திருக்கழுக்குன்றமாகும். இவ்வூரை உருத்திரகோடி என்பார்கள். கோடி உருத்திரர்கள் சிவராத்திரி அன்று சிவபூஜை செய்து அருள் பெற்றதால் இது உருத்திரகோடி எனப் பெயர் பெற்றதாம். இக்கோவிலில் சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்தால் கோடிருந்திரர்கள் பெற்ற அருள் நமக்கு கிடைக்கும்.

    8. திருக்காளத்தி: இங்குள்ள மலைக் கோவிலில் சிவராத்திரி நாளில் தேரில் காளத்திநாதர் பவனி வருகிறார். தேரோட்டம் திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை முதலிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    கோகர்ணம், தேவிகாபுரம் ஆகிய சிவத்தலங்களிலும் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    • மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது.
    • சித்திரை மாதம் : இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.

    மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது.

    அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.

    1. சித்திரை மாதம் : இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.

    2. வைகாசி மாதம் : வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.

    3. ஆனி மாதம் : வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானால் வழிபடப்பட்டது.

    4. ஆடி மாதம் : தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

    5. ஆவணி மாதம் : வளர்பிறைஅஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.

    6. புரட்டாசி மாதம் : வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

    7. ஐப்பசி மாதம் : வளர்பிறைதுவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.

    8. கார்த்திகை மாதம் : 2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

    9. மார்கழி மாதம் : வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

    10. தை மாதம் : வளர்பிறைநந்தி தேவரால் வழிபடப் பட்டது.

    11. மாசி மாதம் : தேய்பிறைதேவர்களால் வழிபடப் பட்டது.

    12. பங்குனி மாதம் : வளர்பிறைகுபேரனால் வழிபடப் பட்டது.

    நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அருளைப் பெறுவோம்.

    • சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம், மாலைப் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும்.
    • இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம், மாலைப் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும்.

    சிவராத்திரிக்கு முந்தைய மாலை காலத்தை நடராஜ் மூர்த்தியையும் பிரதோஷ நாயகரையும் வழிபட வேண்டும்.

    பிரதோஷ நேரத்தில் இறைவனைத் தரிசித்தது முதல் கோவிலிலேயே இருந்து கொண்டு சிவ சிந்தையுடனே ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைக் காண வேண்டும்.

    1. இரவின் முதல் காலம்: (ஜாமம்) சோமஸ்கந்தரை வழிபட வேண்டும். அப்போது பஞ்சகவ்ய அபிஷேகம் சிறந்தது. ரிக்வேதம் ஓத வேண்டும்.

    2. இரண்டாம் காலம்: தென் முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் கலந்த பங்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. யசூர் வேதம் ஓத வேண்டும்.

    3. மூன்றாம் காலம் : லிங்கோற்பவரை வழிபடுவது சிறப்பு. திருவண்ணாமலையில் இந்த மூன்றாம் காலத்தில் தான் (ஜாமத்தில்) லிங்கோற்பவ உற்பத்தி ஆயிற்று என்று புராணம் சொல்லுகிறது.

    4. நான்காம் காலம் : சிவராத்திரி நான்காம் காலத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்வது சிறப்பு. கஸ்தூரி மேல் பூச்சாக பூசலாம். பச்சை ஆடை அணிவிக்கலாம். திரநாவுக்கரசர் பாடலைப் பாடலாம். அதர்வண வேதம் ஓதுதல் சிறந்தது.

    இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    • சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
    • விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

    1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும். (நீராட்டல்)

    2. மணம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சிமுதல் திருத்தாள் வரைத் தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

    3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

    4. சிவாலயங்களைச் சாணமிட்டு அலகிட்டு (துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல்) வாழ்த்த வேண்டும்.

    5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.

    7. எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

    8. சிவதண்டமான கட்டங்களும், (மழுவாயுதம்) கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

    9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

    இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

    • எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
    • சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

    2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

    3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

    4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

    5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

    6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

    7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

    9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

    11. திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

    12. பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் "சங்கர நாராயண" வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் "பாண லிங்கம்" இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

    13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

    14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

    15. சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    16. திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

    17. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

    19. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் ª¢சய்த பலனும் தரவல்லது.

    20. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    • நந்திதேவருக்கு கோபம். ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.
    • இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

    நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன், சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.

    பூலோகம் வந்த இருவரும் வேலையை மறந்து நந்தவன நிழலில் படுத்து தூங்கி விட்டனர்.

    நந்திதேவருக்கு கோபம். ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.

    இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

    பூனையை ஒரு வேடன் துரத்தினான்.

    பயந்து ஓடிய பூனை அருகிலிருந்த சிவன் கோவிலுக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிக் கொண்டது.

    வேடனின் அம்பு சிவலிங்கம் மீது பட்டு ரத்தம் கொட்டியது. பூனை பயந்து தீர்த்த குளத்துக்கு ஓடியது.

    சிவனை காயப்படுத்தி விட்டோமே என்று கவலை அடைந்த வேடனும் தீர்த்தத்தில் நீராடி சிவனிடம் மன்னிப்பு கேட்க வந்தான்.

    ஒரே சமயத்தில் வேடன் ஒரு பக்கம், பூனை ஒரு பக்கம் குளத்தில் மூழ்கி எழுந்திருக்க.,

    இருவரும் மீண்டும் மகாகாந்தன், காந்தன் ஆக மாறினார்.

    சிவராத்திரி தினமான அந்நாளில் இறைவனுக்கு பூ, பழங்களை படைத்து வணங்கினார்.

    • மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.
    • அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.

    மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.

    காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது, 'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.

    பொருளாதார நிலையும் உயரும்.

    ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில்

    அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.

    அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

    • ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.
    • எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.

    இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன.

    ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.

    உலகங்களே தோன்றவில்லை.

    இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.

    அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.

    அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று

    பெயர் பெற வேண்டும் என்றும் அதனை சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்

    அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்று பிராத்தித்தார்.

    இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.

    அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.

    • சிவராத்திரிக்கு ஞாயிறு தலத்தில் இரவில் 4 ஜாம பூஜை நடைபெற உள்ளது.
    • 4-வது ஜாம பூஜை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும்.

    சிவராத்திரிக்கு ஞாயிறு தலத்தில் இரவில் 4 ஜாம பூஜை நடைபெற உள்ளது.

    முதல் ஜாம பூஜை இரவு 7 மணிக்கு நடைபெறும். 2-வது ஜாம பூஜை இரவு 9 மணிக்கும்,

    3-ம் ஜாம பூஜை நள்ளிரவு 11.30 மணிக்கும் நடைபெறும்.

    4-வது ஜாம பூஜை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும். அன்று இரவு முழுக்க கோவில் நடை திறந்திருக்கும்.

    ஒவ்வொரு ஜாம பூஜைக்கும் அபிஷேகங்கள், ஆராதனைகள் அனைத்தும் மாறுபடும்.

    பக்தர்கள் சிவராத்திரி அபிஷேக பூஜைகளுக்கு தேன், பால், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வகைகளை

    வாங்கி கொடுத்து சிவபெருமான் அருளை பெறலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

    ×