search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாரதனை"

    • மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது.
    • சிறப்புகளையுடைய இக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து புகழ்பெற்ற தலமாகும்.

    பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    கொடிமரம் முன்பு எழுந்தருளியுள்ள நந்திக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள்பொடி, திரவியபொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் நந்தி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

    பிரசாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு தரிசனம் செய்தனர்.

    • விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
    • சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் சக்தி விநாயகர்,செல்ல மாரியம்மன், கூத்த பெருமாள் ஐயனார் கோவில்கள் அமைந்துள்ளது.

    இக்கோவில்களின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.

    தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, சித்தி விநாயகர், கூத்த பெருமாள் ஐயனார், செல்ல மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    • பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மகாதீபாராதனைக்கு பின் சவுந்திரராஜ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
    • வழியெங்கும் பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் சக்தி விநாயகர் குழுவினர் சார்பில், 108 விநாயகர் சிலைகள், நாகை, கீழ்வேளூர், சிக்கல், செல்லுார், பாலையூர், நாகூர் மற்றும் நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அனைத்து பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மகாதீபாரதனைக்கு பின், நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வாசலில் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் மாலையில் புதிய கடற்கரைக்கு வந்தது. வழியெங்கும் பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.

    புதிய கடற்கரைக்கு வந்த விநாயகர் சிலைகள் சிறப்பு தீபாரதனைக்கு பின் படகுகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே உள்ள உத்தாணியில் உள்ள முத்து முனியாண்டவர் கோவிலில் 50 ஆம் ஆண்டு ஊரணி பொங்கல்விழா, பால்குட காவடி எடுக்கும் விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்கு டம், காவடி எடுத்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடமுருட்டிஆற்றங்க ரையிலிருந்து பெண்கள் உட்பட பக்தர்கள் ஏராளமா னோர் பால்குடம், அலங்கார காவடிகள் எடுத்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து கன்னிமூல கணபதி, முத்து முனியாண்டவர், தர்ம சாஸ்தா ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வ ங்களுக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனையும், மஹா தீபாரதனையும் நடைபெ ற்றது.

    இந்நிக ழ்ச்சியில் உத்தானி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடு உத்தாணி கிராமவாசிகள், லாரி தொழிலாளர்கள் சங்கத்தினர், விழா குழுவினர்கள் கிராமவா சிகள் செய்திருந்தனர்.

    • கோவில் தீபாரதனை நேரங்களில் இந்த கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்பு உள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம்.
    • கடந்த சில மாதங்களாக இந்த பெரிய மணி பழுதுபட்டு கிடப்பதால் ஒலிப்பது இல்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த திருக்கோவில் திருநடை தினமும் 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு நடை சாத்தப்படும். அதே போல மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8-30 மணிக்கு திருநடை திருகாப்பிடப்படும்.

    கோவில் தீபாரதனை நேரங்களில் இந்த கோவிலின் வடக்கு நுழைவு வாசல் முன்பு உள்ள கோபுர பெரிய மணி ஒலிக்கப்படுவது வழக்கம். கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் இந்த மணியின் ஓசை கணீர் என ஒலிக்கும்.

    இந்த பெரியமணி ஓசை கேட்கும்போது சுற்று வட்டார பொதுமக்களும் பக்தர்களும் கோவிலில் தீபாராதனை நடக்கிறது என்பதை அறிவார்கள். உடனே சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பக்தர்களும் கோவிலுக்கு சாமி கும்பிட விரைந்து செல்வார்கள்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த கோவிலின் நுழைவு வாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி பழுதுபட்டு கிடப்பதால் ஒலிப்பது இல்லை. தற்போது வைகாசி விசாக பெருந்திருவிழா நடந்து வரும் வேளையிலும் இந்த நுழைவு வாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி தீபாராதனை நேரங்களில் இதுவரை ஒலிக்கப்படவில்லை.

    இதனால் பக்தர்களும் பொதுமக்களும் மனவேதனை அடைந்து உள்ளனர். எனவே வைகாசி விசாகபெருந்திருவிழா முடிவதற்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வடக்குப் பிரதான நுழைவாசல் கோபுரம் அருகில் உள்ள பெரிய மணி ஓசை தீபாராதனை நேரங்களில் ஒலிக்க செய்வதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×