search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupani"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.
    • கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் திரு முக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அகஸ்தீஸ்வரர், இறைவி, அஞ்சனாச்சியம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

    நிதி வசதி இல்லாத இக்கோவில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.

    இக்கோவிலின் அகஸ்தீஸ்வரர் மணலால் பிடிக்கப்பட்டவர் எனவும், இங்கு அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.இக்கோவிலின் மதில் சுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முழுவதும் சேதம் அடைந்தது. சோழ மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் தொடர்பாக கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகிறது .திருக்கோயில் உள்ள பழமையான கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்பாள் சன்னதி, மடப் பள்ளி, ராஜகோபுரம் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகளும், சோபனா மண்டபம், வசந்த மண்டபம், அபிஷேக மண்டபம், சுப்பிரமணியர் சன்னதி ஆகியவற்றில் மீள கட்டுதல் பணிகளும், உப சந்நிதிகளில் வர்ணம் பூசும் பணிகளும், மேற்கு வடக்கு கிழக்கு மதில் சுவர்கள் பழுது பார்த்து புதுப்பித்தல் பணியும் நடைபெற உள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் 24 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

    அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    2022-23-ம் நிதி ஆண்டில் 113 கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 நிதி ஆண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி களுக்கு மானியமாக ரூ.200 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது.

    இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 12 கோயில்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மேலும் வரலாற்றில் படித்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கோவிலுக்கான திருப்பணிகள் நடைபெற்றது போல தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார்.

    • கோவில் வளாகத்தில் திருமாளிகை பத்தி அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
    • திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அவிநாசி:

    கொங்கு மண்டலத்தில் தேவார பாடல் பெற்ற ஏழு சிவாலயங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீஅவிநாசி லிங்கேஸ்வரர் கோவில். கொங்கு சோழர்கள் கட்டிய இக்கோவிலில் பாண்டியர், ஹொய்சாளர், விஜயநகரம் மற்றும் மைசூர் மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2008 ஜூலை 14-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போதைய அறங்காவலர் குழு பொறுப்பேற்றதும் திருப்பணி செய்து கும்பாபிஷேக விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் திருமாளிகை பத்தி அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    கும்பாபிஷேக விழா பிப்ரவரி 2-ந்தேதி நடக்க உள்ள நிலையில், மயிலாடு துறையை சேர்ந்த குழுவினர், யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். கோவில் அன்னதான மண்டபம் அருகே 3 பகுதிகளாக 80 குண்டங்களுடன் யாகசாலைகள் அமைக்கப்படுகின்றன.

    அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் மற்றும் சுப்பிரமணியருக்கு நவாக்னி வேள்விசாலை அமைக்கப்படுகின்றன. விநாயகர், பாதிரியம்மன், கால பைரவருக்கு பஞ்சாக்னி யாகசாலையும் அமைக்கப்படுகிறது.

    விநாயகருக்கு பத்மவேதிகை, சிவபெருமானுக்கு, பஞ்சாசன வேதிகை, அம்மனுக்கு ஸ்ரீசக்ர வேதிகை, முருகப்பெருமானுக்கு சற்கோண வேதி கைகள் அமைக்கப்படுகின்றன. 150க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், யாகசாலை பூஜைகளை நிகழ்த்த உள்ளதாக சிவாச்சாரியர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறியதாவது:-

    கோவில் 2ம் பிரகாரத்தில் திருமாளிகை பத்தி மண்டபம், கருங்கல்தளம் அமைப்பது, கதவுகள் புதுப்பிப்பு பணி, கோபுரம் மற்றும் விமானம் பெயின்டிங் பணி முடிந்துள்ளது. தெப்பக்குளம், படிக்கட்டு களும் சீரமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக, மயிலாடுதுறையை சேர்ந்த குழுவினர் 80 குண்டங்களுடன் கூடிய யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். விரைவில் யாகசாலையை சுற்றிலும் முளைப்பாலிகை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கும்பாபிஷேகம் நடத்த கூடாது என திருப்பணி குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
    • அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நாகை சாலையில் ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டபட்ட வேதாமிர்த ஏரி எனும் தீர்த்த குளம் உள்ளது.

    இந்த ஏரியை 7.30 கோடியில் தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்க ப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் நடுவில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரு மான ஓ.எஸ்.மணியன் தன் சொந்த செலவில் தடாக ஸ்ரீ நந்திகேஸ்வரர் கோவில் அமைத்து தற்போது வரும் 4ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

    நேற்று 2ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்க பட்டது. இந்த நிலையில் விழாவிற்கு வரும் பக்தா்களை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வை க்க கூடாது உடன் அகற்ற வேண்டுமென அறநிலை யத்துறை, நகராட்சி நிர்வாகத்தினர் தெரி வித்ததால் பிளக்ஸ்போ ர்டுகள் அகற்றபட்டன. நேற்று அறநிலை துறையினர் தாடகநந்தி ஸ்வார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி வாங்கவில்லை. எனவே கும்பாபிஷேகம் நடத்த கூடாது என திருப்பணி குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தனர்.

    இதையொட்டி வேதாரண்யம் தாலுகா அலு வலகத்தில் பேச்சுவா ர்த்தை வருவாய் கோட்டா ட்சியர் பேபி தலைமையில் நடைபெற்றது பேச்சுவா ர்த்தையில் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் அறிவழக ன் டி.எஸ்.பி சுபாஷ் சந்திரபோஸ் நகராட்சி கமிஷ னரவெங்கட லெட்சுமணன் மற்றும்ச ட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், வழக்கறிஞர்கள் சுப்பையன் கிரிதரன் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டனர். பேச்சு வார்த்தை க்கு பின்பு அனுமதி பெற்று கும்பா பிஷேகம்நடத்த வேண்டும் என தெரிவிக்க பட்டது இதனால் இன்று காலைஏரியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

    • கோவில் புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசி திருப்பணிகள் நிறைவடைந்தது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சிறு வேம்பு பராசக்தி என்கிற வேம்பரிசி அம்மன் கோயில் உள்ளது.

    இக்கோவில் புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசி திருப்பணிகள் நிறைவடைந்தது.

    இதனை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம்பூர் வாங்க பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது விழா அன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பூர்ணாஹூதி மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாளங்களுடன் கோயில் விமான கலசத்தை வந்து அடைந்தது கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இதில் கோயில் நிர்வாகி சாந்தகுமாரி, நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு மற்றும் திரளான பக்தர்கள் தெருவாசிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீசார் செய்தனர்.

    • 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2022-2023-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்கள் மற்றும் 1,250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள 2 லட்சம் ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 20 கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள வரைவோலைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோ ரிக்சாக்களுக்கான பதிவு சான்று மற்றும் அனுமதி ஆவணங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் முகமது நசிமுத்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகவளாகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 50 சென்ட் நிலப்பரப்பில், 10,600 சதுர அடி கட்டிட பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன், 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

    இவ்வளாகத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்கள் மற்றும் அதன் சார்நிலை அலுவல கங்களான தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவை அமையப் பெற்றுள்ளன.

    • கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து ரூ.6 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கியது.
    • திருப்பணியில் கோவிலின் மதில் சுவர் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.

    கும்பகோணம்:

    மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கும்பகோணம் அருகே கஞ்சனூர் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயில் நவக்கிரக தலங்களில் சுக்ர தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சுக்கிர பிரீத்தி வழிபாடு செய்கின்றனர். இக்கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து ரூ. 6 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கஞ்சனூர் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு  பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவிலில் சுவாமி, அம்பாள், சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு ஆராதனை நடந்தது. கோயிலில் மதுரை ஆதீனத்தின் சார்பில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சுற்றுசுவர் திருப்பணிகளை மதுரை ஆதீனம் 293 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் பார்வையிட்டு  ஆலோசனைகளை வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், கோயில் சுற்றுப்புற 700 மீட்டர் நீளமுடைய மதில் சுவர் திருப்பணி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.

    மேலும் கோயிலில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் தனித்தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. கோயில் திருப்பணிகளுடன்  பக்தர்களின் வசதிக்காக சுகாதார வளாகம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட உள்ளது. 

    மாசி மக உற்சவத்தில் தேர் ஓடுவதற்கு ஏதுவாக கஞ்சனூர் கோயிலுக்கு புதிதாக தேர் செய்திடும் வகையில் விரைவில் திருப்பணி  தொடங்கப்பட உள்ளது. வரும் மாசி மக விழாவில் தேரோட்டம்  நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    கஞ்சனூர் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக நடமாடும் சித்த மருத்துவ வைத்தியசாலை மதுரை ஆதீனத்தின் சார்பில் தொடங்கிடவும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோயில்களை முறையாக பராமரிப்பது, திருப்பணி செய்வது, தூய்மையாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்என்றார்.  

    தொடர்ந்து திருப்புறம்பியும் சாட்நாதர் சுவாமி கோயிலில் நடைபெறும் தேர் திருப்பணிகளையும் மதுரை ஆதீனம் பார்வையிட்டார். அவருடன் நிர்வாக பொறுப்பாளர் ஆசிரியர் முத்தையன், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் கண்காணிப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியுள்ளன.
    • திருப்பணி முடிந்து 2 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்களூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியுள்ளன.

    இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு கால பஞ்சசுத்த ஹோமம் பூர்ணாதி நாராயணன், ராஜு மற்றும் பக்தர்கள் உபயத்தோடு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது.

    பாலாலயத்தில் விமானம் உட்பிரகாரம் மதில் சுவர்கள் கோபுரங்கள் என அனைத்தையும் திருப்பணி முடித்து இரண்டு மாத காலத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என திருப்பணி குழு தெரிவித்தனர்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கீதாபாய்,செயல் அலுவலர் சக்திவேல், கோவில் எழுத்தர் செல்வன் மற்றும் பட்டாச்சாரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • 1,200 ஆண்டு பழைமையான இந்த கோயில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
    • சகல சாஸ்திரம், ஆகம விதிமுறைகள்படி கருங்கல் முதல்வரி பதிக்கப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே திருபுவனம் கிராமத்தில் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது 1,200 ஆண்டு பழைமையான இந்த கோயில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

    கோவிலில் முதல்வரி கருங்கல் பதிக்கும் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீ பெரிய நம்பி திருமாளிகை தலைமையில் திருப்பணி குழுவினர், கிராமவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    முன்னதாக கருங்கல் உபய பீடத்திற்கு அடியில் வெள்ளி காசு, தங்க காசு, நவரத்தினங்கள், துளசி, நொச்சி. ஆழம் கொழுந்து, வேப்ப கொழுந்து, அரச கொழுந்து. பாதரசம், நாணயங்கள், வைக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள். சகல சாஸ்திரம், ஆகம விதிமுறைகள்படி கருங்கல் முதல்வரி பதிக்கப்பட்டது

    இதில் இதில் தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜேந்திரன், பூண்டி கல்லூரி பேராசிரியர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், திருப்பணி குழுவினர், கிராமவாசிகள், மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இக்கோயில் நீண்ட நாட்களாக சிதலமாகி இருந்த நிலையில் உள்ளூர் மக்களும், பக்கத்து கிராமவாசிகளும், பக்தர்களும் ஒருங்கிணைந்து திருப்பணிகளை மேற்கொண்டனர்.
    • விரைவில் இக்கோவிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோடுகிழி கிராமத்தில் வெட்டாற்றின் வடகரையில் பழமையான முக்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நீண்ட நாட்களாக சிதலமாகி இருந்த நிலையில் உள்ளூர் மக்களும், பக்கத்து கிராமவாசிகளும், பக்தர்களும் ஒருங்கிணைந்து திருப்பணிகளை மேற்கொ ண்டனர்.

    கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திரு கூட்டத்தின் நிறுவனர் திருவடி சுவாமிகள் கோவிலு க்கு வந்து தரிசித்து திருமுறை பாராயணம் செய்து கோயில் திருப்பணியை துவக்கி வைத்தார்.

    சுவாமிக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.அது சமயம் திருப்பணி குழுவினர், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். விரைவில் இக்கோவிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.

    • கோவில் திருப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கணபதி, மகாலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்பட பூர்வாங்க பூஜைகள் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் உள்ள சியாமளாதேவி, மகா காளியம்மன் கோவில் திருப்பணி கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் நடைபெற்று வந்தது.

    கோயில் திருப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி, மகாலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர், புத்தூர் கிராம வாசிகள், இளைஞர் மன்றத்தினர் செய்தனர்.

    ×