search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகா சிவராத்திரி; திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி
    X

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    மகா சிவராத்திரி; திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி

    • மகா சிவராத்திரியில் சிவனை வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன்.
    • மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன.

    திருவாரூர்:

    மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியில், சிவனை வழிபட்டால், ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதைத்தொடர்ந்து, திருவாரூரில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றன.

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில், விடங்கர், மூலவர் வன்மீகநாதர், அசலேஸ்வரர், விஸ்வகர்மேஸ்வரர், இந்திரன் பூஜீத்த லிங்கம், கமலாம்பாள், சப்தமாதர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷகமும், தீபாரதனையும் நடைப்பெற்றன.

    பிரதோஷம் முடித்தவுடன் முதல் கால பூஜைகள் நடந்தேறின.

    பின்னர், இரவு 11 மணியளவில் 2 ஆம் கால பூஜையும் நடைபெற்றன.

    மேலும், கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீகமல முனி சித்தர் லிங்கத்துக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன.

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    திருவாரூர் பகுதியில் உள்ள அனைத்து சிவத்தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    Next Story
    ×