search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகா சிவராத்திரியை யொட்டி சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி
    X

    நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    மகா சிவராத்திரியை யொட்டி சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி

    • சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு சீர்காழி திருஞானசம்பந்தர் இசை பள்ளி வழங்கிய 6ம் ஆண்டு மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

    நாட்டியாஞ்சலி விழாவிற்கு அதன் தலைவர் முத்துக்கருப்பன் தலைமை வகித்தார்.

    உப தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் நடராஜ. சட்டையப்பன், உபசெயலாளர் மணிகண்டன், பொருளாளர் கடவாசல் சத்துரு ஹன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் தருமை. சிவா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    தொடர்ந்து சீர்காழி, சிதம்பரம் ,சென்னை, பெங்களூர், கோவை, கும்பகோணம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நாட்டிய நிகழ்வு களை நடத்தினர். திரளான பக்தர்கள் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×