search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கடை"

    • புதுக்கடை அருகேயுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல்
    • புதுக்கடை அருகேயுள்ள காப்புகாடு அரிசி குடோனில் பறிமுதல் செய்யப்பட அரிசி ஒப்படைப்பு.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகேயுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக புதுக்கடை தனிப்பிரிவு ஏட்டு சுனில் ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்பெக்டர் செல்லதுரை, ஏட்டு ரமேஷ் ஆகியோர் இனயம் புத்தன்துறை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதி 6-ம் அன்பியத்தை சேர்ந்த சேவியர் (வயது 49), 2-ம் அன்பியத்தை சேர்ந்த ஜெரால்டு மனைவி ஜெயந்தி (50) ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1.5 டன் ரேசன் அரிசியை கைப்பற்றி போலீஸ் நிலையம் அனுப்பி வைத்தனர்.

    மேலும் ராமன்துறை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் 2 டன் அரிசி பதுக்கி வைத்தி ருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. விசார ணையில் அரிசியை பதுக்கியது அதே பகுதி 2-ம் அன்பியத்தை சேர்ந்த ஜெரோண் மனைவி ஸ்டான்லி (57) என்பவர் எனவும் தெரிய வந்தது. இரண்டு இடங்களில் இருந்து பறிமுதல் செய்த இந்த அரிசிகள் கேரளாவுக்கு கடத்த பதுக்கி யது தெரிய வந்தது. போலீ சார் மொத்தம் 3½ டன் அரிசியையும் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீீசாரிடம் ஒப்ப டைத்த னர். அவர்கள் புதுக்கடை அருகேயுள்ள காப்புகாடு அரிசி குடோ னில் ஒப்ப டைத்தனர்.

    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு
    • தலைமறைவான ரகுபதி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே பொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 55). இவர் முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

    சம்பவத்தன்று மாலை காரில் ஐரேனிபுரம் - புதுக்கடை சாலையில் சென்றார். மேலங்கலம் தொடக்க பள்ளி அருகில் ஜார்ஜ் சென்ற போது நெல்லிக்காவிளை பகுதி களத்து விளையை சேர்ந்த ரகுபதி ராஜா மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் காரை உரசிய வாறு வந்து தடுத்து நிறுத்தியுள்ளார். தொடர்ந்து ஆபாச வார்த்தைகள் பேசி ஆசிரியரை தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதில் படுகாயமடைந்த ஜார்ஜ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் ஆசிரியரை தாக்கியவர் லாரி டிரைவர் என தெரிய வந்துள்ளது. தலைமறைவான ரகுபதி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பிடிக்கப்பட்ட கார் மற்றும் அரிசியை புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு சென்று, மாவட்ட உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி, மண்எண்ணை போன்றவை அதிக அளவில் கடத்தப்படுகிறது. இனயம் புத்தன்துறை கடற்கரை பகுதிகளில் இருந்து புதுக்கடை வழியாக கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று நள்ளிரவு புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக சென்ற கேரளா பதிவெண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தினர். போலீசை கண்டதும் காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து சோதனையிட்ட போது, காருக்குள் 2 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து கார் மற்றும் அரிசியை புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு சென்று, மாவட்ட உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

    • போலீசார் வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.
    • கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்ற மண்எண்ணை அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மணக்குடி பகுதியில் இருந்து கேரளாவுக்கு மானிய விலைமண்எண்ணை கடத்துவதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுக்கடை தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சுனில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், நிலைய காவலர் கிங்ஸ்லி, ஆகியோர் கைசூண்டி சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக சென்ற பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 50 லிட்டர் கொள்ளளவுள்ள 15 கேன்கள், மற்றும் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 2 கேன்களில் சுமார் 820 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. தொடர்ந்து வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.

    விசாரணையில் குளச்சல் பகுதி சிலுவைதாசன் மகன் ஆன்டனி (வயது 27) என்பவர் மேலகிருஷ்ணன் புதூர் பகுதி ரமேஷ் (31) என்பவரின் வாகனத்தில் கேரளாவுக்கு இவற்றை கடத்துவது தெரிய வந்தது. மணக்குடி கடற்கரை பகுதியில் இருந்து கொண்டு செல்வதும் தெரிய வந்தது. போலீசார் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    • கேரளாவுக்கு அரசின் மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கடத்தல்
    • சந்தேகத்திற்கிடமாக செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசின் மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கடத்தப்படுவதால் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு சுனில் மற்றும் ஏட்டு ரமேஷ் ஆகியோர் அம்சி சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் காரில் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 10 கேன்களில் 350 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கார் மற்றும் மண்எண் ணையை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்த போது, தூத்தூர் பகுதி ஆன்டனி சேவியர் (வயது 41) என்பவர் முள்ளுர்துறை பகுதி அலக்சாண்டர் என்பவரிடம் இருந்து வாங்கி கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது.

    இதேபோல் பார்வதி புரத்தில் வைத்து ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 35 லிட்டர் கொள்ளள வுள்ள 5 கேன்களில் 175 லிட்டர் மானிய விலை மண்எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் என்ற இடத்தை சேர்ந்த அவுசேப் (31) என்பவர் இனயம் புத்தன்துறை பகுதி சொப்னா என்பவரிடம் இருந்து மண்எண்ணை வாங்கியது தெரிய வந்தது.

    புதுக்கடை போலீசார் பறிமுதல் செய்த வாக னங்கள், மண்எண்ணை போன்றவற்றை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வயலாதேவியிடம் ஒப்படைத்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • கோவிலில் கடந்த 30-ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகேயுள்ள அஞ்சுகண்ணுகலுங்கு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 30-ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க நல்லூர் பகுதி முளங்குழி என்ற இடத்தை சேர்ந்த பொன்னுப்பிள்ளை மனைவி ஞானம்மாள் (வயது 72) சென்றிருந்தார்.

    அப்போது கூட்டத்தில் யாரோ மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் எடையுள்ள தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இது தொடர்பாக ஞானம்மாள் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதே கோவிலில் நகை திருட்டு போனதாக ஏற்கனவே திரசம்மாள் என்ற பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதே நாளில் கோவில் கூட்டத்தில் தங்க நகைகள் பறித்ததாக சென்னையை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பொதுமக்களால் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதும் குறிப்பிட தகுந்ததாகும்.

    • மரப்பட்டறை எரிந்து சாம்பல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதி குழிக்கான்விளை என்ற இடத்தை சேர்ந்தவர் குமார் (வயது 36).

    இவர் அதே பகுதி அத்திக்காவிளை என்ற இடத்தில மரப்பட்டறை நடத்தி வருகிறார்.

    இங்கு அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் கடை முற்றிலும் எரிந்து சேதமானது.

    இது தொடர்பாக புதுக்கடை போலீசில் குமார் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் தானாக தீ பிடித்ததா? அல்லது சதி வேலையா? என விசாரித்து வருகின்றனர்.

    • ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி அரசகுளம், மேலவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் நேசையன் (வயது 65). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று நேசையனுக்கும் மனைவி மேரிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், வீட்டின் அருகில் உள்ள வாழை தோப்பில் விஷ மருந்து தின்று ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நேசையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நேசையன் மகன் ஜெகன் (33) அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
    • 3 ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்

    கன்னியாகுமரி :


    புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி உசரத்துவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் மரிய செல்வம். இவரது மகன் ஜாண் றோஸ் (வயது 38) கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேங்கோடு பகுதியில் தனியாக வசித்த ஜாண் றோஸ் கடந்த 3 ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று ஜாண் றோஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதைப்பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின்பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோட்டிக்கோடு முதல் புதுக்கடை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
    • இரணியல் காற்றாடி மூடு பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தோண்டப் பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோட்டிக்கோடு முதல் புதுக்கடை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.

    இதனை சரிசெய்ய அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடவிளாகம் குடிநீர் தேவைக்காக தோண்ட பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ள காரணத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் ஆட்டோ மீது சிமெண்ட் கலவை தயார் செய்யும் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இரணியல் காற்றாடி மூடு பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தோண்டப் பட்ட பெரிய அளவிலான பள்ளங்களை சரியான முறையில் மூடாமல் உள்ளனர்.

    மேலும் திங்கள் நகர் ரவுண்டானா வில் இருந்து கருங்கல் செல்லும் வழியில் பெரிய அளவிலான பள்ளங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பயணிகள் தவறி விழுந்து செல்வதை காண முடிகிறது. தினசரி மாநில மந்திரி மற்றும் உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் சாலையின் நிலை குறித்து புகார் அளித்தும் கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.


    உயிருக்கு உலை வைக்கும் சம்பவம் நிகழும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×