search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பொருட்கள்"

    • காரைக்கால் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்காலை அடுத்த நிரவி ஹேவெய்ஸ் நகரில், தடை செய்யப்பட்ட போதை புதையிலை பொருள்க ளான குட்கா, ஹான்ஸ், கூல்லிப் மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், ஹேவெய்ஸ் நகரில் ரவி (வயது47) என்பவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வீட்டில் மறைத்து வைத்திருந்த, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப் போன்ற போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரவியிடம் நடத்திய விசாரணையில், காரைக்கால் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (27), நிரவி கீர்த்திகா நகரை சேர்ந்த சூர்யா (26) ஆகிய 3 பேரை கைது செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறதா? எனஆய்வு மேற்கொண்டனர்.
    • நேற்று ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 பேர்களை கைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தீவிர சோதனை ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த ேபாலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறதா? எனஆய்வு மேற்கொண்டனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததாக நேற்று ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 பேர்களை கைது செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் பேக்கரிகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்ட வற்றில் சோதனை மேற்கொண்டனர்.
    • 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையி லான போலீசார், பேக்கரிகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில், ஒவ்வொரு கடைகளிலும் தலா 5 முதல் 10 பாக்கெட்டுகள் என சுமார் 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதனை விற்பனைக்கு வைத்திருந்த அன்வர் பாஷா (440 பாக்யராஜ்(42) சுந்தரேசன் 60 உள்ளிட்ட 12 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • மயிலாடுதுறையில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திவர் கைது செய்யப்பட்டார்.
    • 500 போதை கலந்த புகையிலை பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் வள்ளலார் கோவில் முன்பு மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்திய போலீசார் அவரை சோதனையிட்டனர். சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட போதை கலந்த புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் குத்தாலம் ராஜகோபாலபுரம் மந்தக்கரை தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் பிரசாந்த் (வயது26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்த 500 போதை கலந்த புகையிலை பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 118 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே காடையூா் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனா்.

    அப்போது காடையூா் அருகே கல்லாங்காட்டுபுதூா் பகுதியில் மணிகண்டன் (25) என்பவரது மளிகைக் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 118 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனா். இது குறித்து காங்கயம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் .

    • புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
    • காா் பணிமனையில் சோதனை மேற்கொண்டனா்.

    அவிநாசி :

    அவிநாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் இருந்த காா் பணிமனையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு விற்பனைக்காகப் பதுக்கிவைத்திருந்த 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில் மொத்தமாக பதுக்கிவைத்திருப்பதாக கூறப்பட்ட சேவூா் அருகே போத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஹா்ஷத் (எ) திருமூா்த்தி (31) வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

    இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய கோவை, மேட்டுப்பாளையம் சௌகத் அலி மகன் தா்வேஸ் முகைதீன் (36), சேவூா் பகுதியைச் சோ்ந்த முகமது பஷீா் மகன் ஜெயிலாபுதீன் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவான திருமூா்த்தியை போலீசார் தேடி வருகின்றனா்.

    • அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா்.
    • சிவகங்கையை சோ்ந்த நடராஜன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனா்.

     அவினாசி:

    சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சேவூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனா்.

    இதைத்தொடா்ந்து கடை உரிமையாளரான மோ்வின் (வயது 40) என்பவரை கைது செய்தனா். இதே போல சேவூா் கைகாட்டி பெட்டிக் கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக சிவகங்கையை சோ்ந்த நடராஜன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனா்.

    • பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பவானிசாகர் அடுத்த பசுவபாளையம் அருகே வெள்ளை நிறப்பை உடன் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (60) என்பதும்,

    அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து அவரிடம் இருந்து 670 கிராம் புகையிலை பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2 ஆயிரம் இருக்கும்.

    மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது திருக்குமார் என்ற நபர் மூலம் பான் மசாலா, புகையிலை பொருட்கள் வாங்கியதாக கூறினார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் திருக்குமாரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதேப்போல் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் சூரம்பட்டி போலீசாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.

    கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவை யூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டு தோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை.

    சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சட்டங்களும் புகையிலைப் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்க வழிவகை செய்யவில்லை.

    அந்த சட்டங்கள் தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்கிறோம்.

    இவ்வாறு கூறியுள்ளனர்.

    • ராஜபாளையம் அருகே 550 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    550 கிலோ புகையிலை பொருட்கள்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து அதில் இருந்த வாலிபரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த மூடையை சோதனையிட்டபோது, அதில் 550 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் கடத்துவது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.

    தொடர் விசாரணையில், அதனை கடத்தி வந்த முகவூரை சேர்ந்த ஜெயபாஸ்கர் மகன் அருண்குமார்(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது இதனை தொடர்ந்து கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீசார் புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கோத்தகிரி கப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையிலும் பாண்டியன்பர்க் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலும் புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து அங்கு சென்ற போலீசார் அந்த கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்ததாக கப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் கோத்தகிரி கார்செலி பகுதியை சேர்ந்த ரமேஷ் தாவுத் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

    • புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தன்மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே ஜாமீன் வழங்குமாறு தெரிவிக்கப்ப ட்டது.

    இதனையடுத்து நீதிபதி, மனுதாரரின் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் ரூ. 50 ஆயிரத்தை நன்கொடையாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். அதற்கான ரசீதை விசா ரணை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்க வேண்டும்.

    மறு உத்தரவு வரும்வரை மனுதாரர் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிபதி பிறப்பித்தார். 

    ×