என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் கைது
- மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறதா? எனஆய்வு மேற்கொண்டனர்.
- நேற்று ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 பேர்களை கைது செய்தனர்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தீவிர சோதனை ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த ேபாலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறதா? எனஆய்வு மேற்கொண்டனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததாக நேற்று ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 பேர்களை கைது செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






