search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீர்"

    • பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது.

    இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர்.

    அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக பாட்டிலை கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பீர் பாட்டி லில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
    • சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவமனை சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தாரமங்கலம் அருகே துட்டம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் கோனேரி வளவு என்ற பகுதியில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார், மேலும் ஆட்டோ கன்சல்டிங் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு மது அருந்த அனுமதி இல்லை என சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக்தி உள்ளிட்ட 3 பேரும் போன் செய்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் சந்திரசேகரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சல் போட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சையாக அனு மதிக்கப்பட்டார். ஓட்டல் உரிமையாளரை கும்பல் தாக்கும் சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சக்தி, அவரது சகோதரர்கள் அருள் மற்றும் அஜித் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே 3 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஓட்டல் உரிமையாளர் சந்திரசேகரனின் உறவினர்கள் ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து டி.எஸ்.பி. சங்கீதா, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் தீவிர மாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர், தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது.
    • விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினசரி ரூ.40 கோடி மதிப்பில் பீர் மற்றும் பிராந்தி வகைகள் விற்பனையாகி வருகிறது.

    வெயில் தாக்கம் அதிகரிப்பு

    இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக பிராந்தி வகை–களை விட, பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது. விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீர் வகைகளை விட, பிராந்தி வகைகளின் விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.

    விற்பனை அதிகரிப்பு

    அதன்படி தற்போது ேகாடை காலத்தை முன்னிட்டு வெயில் அதிகரித்து இருப்பதால், மது பிரியர்கள், பீர் வகைகளுக்கு மாறி விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பீர் விற்பனை அதிகமாக உள்ளது என டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    • மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்படுகின்றன.
    • நகர்வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு முடிந்த நிலையில் இருந்த கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் இன்று கொட்டி அளிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள், வெளியிடங்களில் மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்படுகின்றன.

    இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மற்றும் வாகனங்கள் மூலம் கடத்தி வரப்படும் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்தது. வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் செலுத்திய பிறகு கைப்பற்றப்பட்ட மதுபானங்கள்கொட்டி அழிக்கப்படும்.

    அதன்படி நகர்வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு முடிந்த நிலையில் இருந்த கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் இன்று கொட்டி அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைைமயில் போலீசார் பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை தரையில் குழி தோண்டி அதில் ஊற்றி அழித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

    • கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது.
    • வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக கூலிங் பீர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    குறிப்பிட்ட பீர் வகைகள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது. வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.

    இதனால் ஏப்ரல் மாதத்தில் 20 சதவீதமும், மே மாதத்தில் 25 சதவீதமும், ஜூன் மாதத்தில் 40 சதவீதமும் பீர் விற்பனை அதிகரித்தது.

    இந்த நிலையில் தற்போது ஜில் பீர் விற்பனை குறையத் தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஜில் பீர் விற்பனை சரிந்தது.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் பீர் விற்பனை 45 சதவீதம் வரை அதிகரித்தது. அதனால் தட்டுப்பாடு இல்லாமல் மதுபானங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் 'கூலிங்' பீர் விற்பனை குறைந்தது.

    சென்னையில் மட்டும் 20 சதவீதமும், தமிழகம் முழுவதும் 30 சதவீதமும் ஜில் பீர் விற்பனை சரிந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாக இயக்குனர் பால சுப்பிரமணியத்திற்கு வந்த புகாரின் பேரில் அதிரடி சோதனை ஒரு வாரமாக நடக்கிறது.

    90 நாட்களுக்கு மேலான உயர் வகை சரக்குகள் கடையில் இருப்பு வைக்க கூடாது, எந்த பிராண்ட் மது அதிகளவு விற்கப்படுகிறதோ அதனை ஒரு வாரம் விற்பனை அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

    நடுத்தர, குறைந்த ரக மதுபானங்கள் அதிகமாக விற்பனை ஆவதால் அதனை 'இல்லை' என்று சொல்லாமல் இருப்பு வைக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை, வெளிநபர்கள் வேலைபார்த்தல், சட்ட விரோத பார் செயல்படுதல் போன்றவற்றை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சென்னையில் மட்டும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரம் தெரிவிக்கின்றது.

    • கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது.
    • மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக சிறப்பு பீர் தயாரிக்கப்படுகிறது

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பீர் தயாரிக்கப்பட்டு, 'நியூப்ரூ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.

    சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பீர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பீருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.

    நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. முதலில் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டிற்கு வருகிறது.

    சர்வதேச பீர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், உடல் ஆரோக்கியம் முதல் மனமகிழ்ச்சி வரை பீரால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். #InternationalBeerDay

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகள் பீர் சார்ந்த பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. பீர் ஆல்கஹாலை சேர்ந்த ஒரு போதைப்பொருளாகவே இந்தியாவில் பார்க்கப்படும் நிலையில், ஆல்கஹால் கலப்பு இல்லாமலும் பீர் வகைகள் கிடைக்கின்றன.

    உடல் ஆரோக்கியம் முதல் மனமகிழ்ச்சி வரை பீரால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

    பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. பொதுவாக அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மனநிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறது.

    பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.  சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.

    பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது. எனவே, இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.

    பீரில் நிறைய நார் சத்து உள்ளது. இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.

    பீர் விட்டமின் செறிந்தது. பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன. மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12 என பல விட்டமின்கள் பீரில் உள்ளன.



    பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது. 2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு, மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாதவர்களை விட 40% குறைவாக உள்ளது .

    பீர் நமது கல்லீரலுக்கு நல்லது. மிதமான பீர் கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் வளர் சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன.

    பீர் தூக்கம் இன்மையை அகற்றும். லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது. 

    பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூகாஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறது. பீர் அதிகமான சிலிக்கானை கொண்டுள்ளது, இது எலும்பை உருவாக்கும் செல்கள் ஊக்குவிப்பதன் மூலம் நல்ல எலும்பு ஊக்குவிப்பதில் உதவுகிறது. 

    மிதமான பீர் அருந்துதல் சிறுநீரக ஆரோக்கியத்தை நல்லபடியாக வைத்துகொள்ள உதவுகிறது. சிறுநீரக கற்களைக் கையாளுவதில் பெரும் பங்காற்றுகிற்றது. ஆனால், அருந்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம் என்பதை மரத்து விட வேண்டாம்.

    மேற்கண்ட அனைத்து நன்மைகளும் அளவாக பீர் அருந்தும் நபர்களுக்கு மட்டுமே. என்நேரமும், மதுவில் மூழ்கிக்கிடப்பவர்களுக்கு மேற்கண்ட அனைத்தும் ரிவர்சில் நடக்கும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    தனது ஒரு வயது மகனை மடியில் கிடத்தி பீர் ஊட்டிய வீடியோ வைரலாக பரவியதை அடுத்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கொழும்பு:

    இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள மீகலேவா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு பீர் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், சுற்றிலும் மூன்று பேர் அமர்ந்திருக்க மகனை மடியில் கிடத்திய அந்த நபர், பீர் பாட்டிலில் இருந்த பீரை இரண்டு முறை சிறுவனுக்கு ஊட்டினார்.

    இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். 
    ×