search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காகிதம்"

    • பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது.

    இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர்.

    அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக பாட்டிலை கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பீர் பாட்டி லில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • மாணவர்களின் கல்வியை வளர்க்கும் நோக்கில் இருந்தால் நிச்சயம் வரவேற்கிறோம்.
    • மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தமிழக அரசு பள்ளிக்கல்வி துறை கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமின்றி உடல் நிலை, உணவு முறை, குடும்ப விவரம் என, பல்வேறு கேள்விகள் கேட்கப்படுவதால், ஆசிரியர்கள் எப்போது பார்த்தாலும், செல்போனும், கையுமாகவே இருந்து வருகின்றனர். தற்போது காகிதம் இல்லா காலாண்டு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:- பள்ளிக்கல்வித்துறை கொண்டு வரும் முயற்சிகள் மாணவர்களின் கல்வியை வளர்க்கும் நோக்கில் இருந்தால் நிச்சயம் வரவேற்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கூறும் கல்வித்துறை, போன் மூலம் தான் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்துகிறது.கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டு வருகிறது. தற்போது, 1 முதல் 3-ம் வகுப்பு வரை, காலாண்டு தேர்வினை காகிதம் இல்லாமல் வாய்வழியாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செல்போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அவர்கள் கூறும் பதில்கள் அடிப்படையில் மதிப்பீடுகளை செல்போனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், மாணவர்களின் எழுத்து திறமை மறைந்து போகும் அபாயம் உள்ளது.ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி மிக அவசியம். ஆனால் தேர்வை காகிதம் இல்லாமல் நடத்த சொல்வதால் மாணவர்களின் எழுத்து மற்றும் சிந்தனைத் திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×