search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காகிதம் இல்லாமல் காலாண்டு தேர்வு, மறுபரிசீலனை செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    காகிதம் இல்லாமல் காலாண்டு தேர்வு, மறுபரிசீலனை செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    • மாணவர்களின் கல்வியை வளர்க்கும் நோக்கில் இருந்தால் நிச்சயம் வரவேற்கிறோம்.
    • மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தமிழக அரசு பள்ளிக்கல்வி துறை கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமின்றி உடல் நிலை, உணவு முறை, குடும்ப விவரம் என, பல்வேறு கேள்விகள் கேட்கப்படுவதால், ஆசிரியர்கள் எப்போது பார்த்தாலும், செல்போனும், கையுமாகவே இருந்து வருகின்றனர். தற்போது காகிதம் இல்லா காலாண்டு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:- பள்ளிக்கல்வித்துறை கொண்டு வரும் முயற்சிகள் மாணவர்களின் கல்வியை வளர்க்கும் நோக்கில் இருந்தால் நிச்சயம் வரவேற்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கூறும் கல்வித்துறை, போன் மூலம் தான் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்துகிறது.கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டு வருகிறது. தற்போது, 1 முதல் 3-ம் வகுப்பு வரை, காலாண்டு தேர்வினை காகிதம் இல்லாமல் வாய்வழியாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செல்போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அவர்கள் கூறும் பதில்கள் அடிப்படையில் மதிப்பீடுகளை செல்போனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், மாணவர்களின் எழுத்து திறமை மறைந்து போகும் அபாயம் உள்ளது.ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி மிக அவசியம். ஆனால் தேர்வை காகிதம் இல்லாமல் நடத்த சொல்வதால் மாணவர்களின் எழுத்து மற்றும் சிந்தனைத் திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×