search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்குளம் 6 பேர் கைது"

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. #MotoG6Plus



    மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக டீசர்கள் வெளியிடப்பட்ட நிலையில், ஒருவழியாக மோட்டோ ஜி6 பிளஸ் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    லெனோவோவின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் செப்டம்பர் 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே மாடல்கள் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மோட்டோரோலாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள ஜிஃப் மோட்டோ ஜி6 பிளஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் சில சிறப்பம்சங்களை தெரியப்படுத்தி உள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்மார்ட் பிரைமரி கேமராக்கள், குறைந்த வெளிச்சத்தில் சிறப்பான புகைப்படம் எடுக்கும் வசதி, 6 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.

    இத்துடன் கூகுள் லென்ஸ், ஸ்பாட் கலர், போர்டிரெயிட் மோட், செலக்டிவ் பிளாக் மற்றும் வைட், லேன்ட்மார்க் அங்கீகாரம், ஃபேஸ் அன்லாக், 18:9 மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, டர்போ பவர் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.93 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 IPS டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 14nm பிராசஸர்
    - அட்ரினோ 508 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம், f/1.7, 1.4um பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜிங்
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் மாடல்கள் அந்நிறுவன வலைத்தளத்தில் லீக் ஆனதாக கூறப்படுகிறது. #smartphone
    சாம்சங் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் வியட்நாம் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் SM-J415F/DS மற்றும் SM-J610F/DS என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ளது.

    பட்ஜெட் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜெ4 மற்றும் கேலக்ஸி ஜெ6 மாடல்களுடன் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், குவால்காம் பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் நெதர்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டு வலைத்தளங்களில் வெளியானது. ஏற்கனவே வெளியான சாம்சங் கேலக்ஸி ஜெ4 மாடலில் 5.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1280 பிக்சல் சூப்பர் AMOLED பேனல், 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கிறது.

    இத்துடன் குவாட்-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7570 சிப்செட், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஜெ6 மாடலில் 5.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பேனல், 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #smartphone
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Lightning
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உ.பி.யின் ஷாஜஹான்பூர் பகுதியில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மின்னல் தாக்கி பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்னல் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சியோமியின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அம்சங்கள் பென்ச்மார்க்கிங் மற்றும் சான்றளிக்கும் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. #Redmi6Pro


    சியோமி நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் அடுத்த ஸ்மார்ட்போனாக ரெட்மி 6 சீரிஸ் இருக்கலாம். சமீபத்தில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் மற்றும் சான்றளிக்கும் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. 

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அமெரிக்காவிலும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதற்கட்டமாக ரெட்மி 6 சீரிஸ் அமெரிக்க சந்தையில் வெளியிடப்படலாம். 

    ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம்+32ஜிபி மெமரி, 4ஜிபி ரேம்+32ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம்+64ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரெட்மி 6 ப்ரோ மாடல் கோல்டு, பிளாக், பின்க், புளு மற்றும் ரெட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெட்மி 6 ப்ரோ மாடலில் 5.45 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080x2280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கலாம். ரெட்மி 6 ப்ரோ மாடலில் MIUI 10 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.



    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி 6 ப்ரோ வெளியீடு குறித்து இதுவரை சியோமியிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்தியாவில் ரெட்மி நோட் 6 போன்கள் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. 

    சமீபத்தில் சியோமியின் துணை பிரான்டு போகோ சர்வதேச சந்தையில் அறிமுகமானது. அந்த வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. மூன்று வித இன்டெர்னல் மெமரி மற்றும் ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் போகோ எஃப்1 மாடலின் பேஸ் வேரியன்ட் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரியும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 

    இவற்றின் விலை முறையே ரூ.20,999, ரூ.23,999 மற்றும் ரூ.28,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 8ஜிபி ரேம், 256 ஜிபி வேரியன்ட் ஆர்மர்டு எடிஷன் மாடலும் விற்பனை செய்யப்பட இருகிறது. இதன் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய போகோ எஃப்1 மாடல் ஆகஸ்டு 29-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. #Redmi6Pro
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. #galaxya6


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஏ6 பிளஸ் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் ரூ.2,000 விலை குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் இதன் விலை ரூ.2000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் FHD பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - சாம்சங் பே மினி
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் ரூ.21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி வெர்ஷன் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஸ்ரீஹரி இயக்கத்தில் கராத்தே கவுசிக் - குஷ்பு சிங் நடிப்பில் பாலியல் கொடுமைக்கு பாடம் கற்பிக்கும் வகையில் உருவாகி இருக்கும் ‘ஆறிலிருந்து 6 வரை’ படத்தின் முன்னோட்டம். #Aarilirunthu6Varai
    ரோ‌ஷன் பிலிம் இன்டர்நே‌ஷனல் நிறுவனம் சார்பில் வி.ரிஷிராஜ் தயாரிக்கும் படம் ‘ஆறிலிருந்து 6 வரை’.

    இதில் கராத்தே கவுசிக் கதாநாயகனாக நடிக்கிறார். குஷ்பு சிங் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜார்ஜ், மிப்பு சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - தேவ், இசை - பெண் இசை அமைப்பாளர் ஜீவாவர்ஷினி, நடனம் - சுரேஷ், படத்தொகுப்பு - சி.எஸ். பிரேம், இணை தயாரிப்பு - டி.எஸ்.எஸ். புரொடக்‌ஷன்ஸ் ரோகன், ஷாலியன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஸ்ரீஹரி.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் சம்பவங்களை கதையாக கொண்ட படம். பாலியல் கொடுமைக்கு பாடம் கற்பிக்கும் கதைக்களம் கொண்டது.



    ஒரு இளம் பெண் அதை எப்படி கையாள்கிறாள் என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கிறோம். நாயகன், நாயகியை தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தலாம் என்ற தப்பான எண்ணத்துடன் பழகுகிறான்.

    ஆனால் அவள் வீட்டுக்கு சென்ற அவன் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதன் பிறகு நடந்தது என்ன? நாயகியை நெருங்கினானா? என்பது கதையின் திடீர் திருப்பம். இந்த படத்துக்காக நாயகி உண்மையாகவே ரத்தம் சிந்தி நடித்து இருக்கிறார். படப்பிடிப்பின் போது காட்டு எருமைகளிடம் இருந்து நாயகியை நாயகன் காப்பாற்றினார்” என்றார். #Aarilirunthu6Varai

    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். #LandAcquisition #Farmersprotest

    ஊத்துக்கோட்டை:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணை, போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைகிறது.

    இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணையில் 6 வழிச் சாலை அமைத்தால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் 800 அடி அகலத்தில் விளை நிலங்கள் கையகப்படுத்த வேண்டியிருக்கும். இதனால் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் கிராமம் வழியாக 6 வழி சாலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் சென்னங்காரனையில் நிலம் அளவிடும் பணிக்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    இந்தநிலையில் ஓய்வு பெற்ற தாசில்தார் விஜயராகவுலு தலைமையில் அதிகாரிகள் நேற்று மீண்டும் நிலம் அளவிடுவதற்காக சென்னங்காரணை கிராமத்துக்கு வந்தனர்.

    இதனை அறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகளின் காரை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகள் ஏதும் மேற் கொள்ளாமல் அங்கிருந்து காரில் திரும்பி சென்று விட்டனர். #LandAcquisition #Farmersprotest

    தாயை கொன்றதற்கு பழிக்குப்பழியாக கார் டிரைவரை மகன் வெட்டிக்கொலை செய்தார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் பொன்னகரம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம் (வயது34). கடந்த 2015-ம் ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்ட ரமணி என்ற பெண் கொலை வழக்கில் சங்கர சுப்பிரமணியம் முக்கிய குற்றவாளி ஆவார்.

    இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த இவர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் கார் டிரைவராக உள்ளார்.

    நேற்று மாலை சங்கர சுப்பிரமணியம் தனது தாயார் இந்திராணியுடன் மலையடிப்பட்டி வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்து வழி மறித்தது.

    அவர்கள் சங்கரசுப்பிரமணியத்தை ஆட்டோவில் இருந்து இழுத்து போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர சுப்பிரமணியம் தாய் கண் முன்பே பரிதாபமாக இறந் தார்.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் இந்திராணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பழிக்குப்பழியாக சங்கரசுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரமணியின் மகன் ரெங்கராஜன் (30) அடிக்கடி சங்கரசுப்பிரமணியத்தை சந்தித்து எனது தாயை கொலை செய்த உன்னை பழி தீர்ப்பேன் என மிரட்டி உள்ளார்.

    தற்போது அவர்தான் நண்பர்களுடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெங்கராஜன், அவரது நண்பர்கள் காளீஸ்வரன் (22), கிருஷ்ணமூர்த்தி (28), பாண்டியராஜன் (30), விகாஷ்ராஜ் (26), சந்திர பிரகாஷ் (26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மலையடிப்பட்டியை சேர்ந்த சசிஆனந்த் (29) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #motorola


    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதை உணர்த்துகிறது. முன்னதாக மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்களுடன் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், மோட்டோ ஜி6 பிளஸ் வெளியீடு மட்டும் தாமதமானது. தாமதத்துக்கான காரணம், விற்பனை மற்றும் விலை சார்ந்த விவரங்கள் அறியப்படவில்லை.



    மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.93 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
    - அட்ரினோ 508 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ் எல்இடி ஃபிளாஷ், F/2.2
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ், F/2.2
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை EUR 299 (இந்திய மதிப்பில் ரூ.24,350) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி6 விலை ரூ.13,999 இல் துவங்குகிறது.
    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹாட் சீரிஸ் மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #InfinixHot6Pro



    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் இன்ஃபிகிஸ் ஹாட் 6 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ளது.

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த X ஓ.எஸ். 3.2 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட்கள், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்தகிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த X ஓ.எஸ். 3.2
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட், சான்ட்ஸ்டோன் பிளாக் மற்றும் மேஜிக் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.7,999 விலையில் கிடைக்கும் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
    வங்காளதேசத்தில் காரும் ஆட்டோ ரிக்‌ஷாவும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    டாக்கா:

    வங்காளதேசத்தின் மவுல்விபசார் மாவட்டத்தில் நடாம்பூர் பகுதியில் அமைந்துள்ளது மவுல்விபசார் - சிதெட் நெடுஞ்சாலை.

    இந்த நெடுஞ்சாலையில் இன்று இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்த காரும் ஆட்டோ ரிக்‌ஷாவும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம்  அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் புதிய விலை குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மாப்ரட்போன் மே மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் விலை தற்சமயம் ரூ.2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி ஏ6 வேரியன்ட்களின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - சாம்சங் பே மினி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை விரைவில் ரூ.23,990-க்கு அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ×