என் மலர்

  தொழில்நுட்பம்

  இந்தியாவில் பட்ஜெட் விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம்
  X

  இந்தியாவில் பட்ஜெட் விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹாட் சீரிஸ் மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #InfinixHot6Pro  இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் இன்ஃபிகிஸ் ஹாட் 6 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ளது.

  இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த X ஓ.எஸ். 3.2 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

  பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட்கள், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.  இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

  - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்தகிளாஸ் டிஸ்ப்ளே
  - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
  - அட்ரினோ 308 GPU
  - 3 ஜிபி ரேம்
  - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த X ஓ.எஸ். 3.2
  - டூயல் சிம் ஸ்லாட்
  - 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
  - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
  - 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.0
  - கைரேகை சென்சார்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட், சான்ட்ஸ்டோன் பிளாக் மற்றும் மேஜிக் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.7,999 விலையில் கிடைக்கும் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
  Next Story
  ×