என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srihari"

    ஸ்ரீஹரி இயக்கத்தில் கராத்தே கவுசிக் - குஷ்பு சிங் நடிப்பில் பாலியல் கொடுமைக்கு பாடம் கற்பிக்கும் வகையில் உருவாகி இருக்கும் ‘ஆறிலிருந்து 6 வரை’ படத்தின் முன்னோட்டம். #Aarilirunthu6Varai
    ரோ‌ஷன் பிலிம் இன்டர்நே‌ஷனல் நிறுவனம் சார்பில் வி.ரிஷிராஜ் தயாரிக்கும் படம் ‘ஆறிலிருந்து 6 வரை’.

    இதில் கராத்தே கவுசிக் கதாநாயகனாக நடிக்கிறார். குஷ்பு சிங் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜார்ஜ், மிப்பு சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - தேவ், இசை - பெண் இசை அமைப்பாளர் ஜீவாவர்ஷினி, நடனம் - சுரேஷ், படத்தொகுப்பு - சி.எஸ். பிரேம், இணை தயாரிப்பு - டி.எஸ்.எஸ். புரொடக்‌ஷன்ஸ் ரோகன், ஷாலியன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஸ்ரீஹரி.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் சம்பவங்களை கதையாக கொண்ட படம். பாலியல் கொடுமைக்கு பாடம் கற்பிக்கும் கதைக்களம் கொண்டது.



    ஒரு இளம் பெண் அதை எப்படி கையாள்கிறாள் என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கிறோம். நாயகன், நாயகியை தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தலாம் என்ற தப்பான எண்ணத்துடன் பழகுகிறான்.

    ஆனால் அவள் வீட்டுக்கு சென்ற அவன் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதன் பிறகு நடந்தது என்ன? நாயகியை நெருங்கினானா? என்பது கதையின் திடீர் திருப்பம். இந்த படத்துக்காக நாயகி உண்மையாகவே ரத்தம் சிந்தி நடித்து இருக்கிறார். படப்பிடிப்பின் போது காட்டு எருமைகளிடம் இருந்து நாயகியை நாயகன் காப்பாற்றினார்” என்றார். #Aarilirunthu6Varai

    ×