search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uthukottai 6 Ways Road"

    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். #LandAcquisition #Farmersprotest

    ஊத்துக்கோட்டை:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணை, போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைகிறது.

    இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணையில் 6 வழிச் சாலை அமைத்தால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் 800 அடி அகலத்தில் விளை நிலங்கள் கையகப்படுத்த வேண்டியிருக்கும். இதனால் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் கிராமம் வழியாக 6 வழி சாலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் சென்னங்காரனையில் நிலம் அளவிடும் பணிக்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    இந்தநிலையில் ஓய்வு பெற்ற தாசில்தார் விஜயராகவுலு தலைமையில் அதிகாரிகள் நேற்று மீண்டும் நிலம் அளவிடுவதற்காக சென்னங்காரணை கிராமத்துக்கு வந்தனர்.

    இதனை அறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகளின் காரை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகள் ஏதும் மேற் கொள்ளாமல் அங்கிருந்து காரில் திரும்பி சென்று விட்டனர். #LandAcquisition #Farmersprotest

    ×