search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹானர் 8ஏ ப்ரோ"

    கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
    பழனி:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பழனி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இமானுவேல் சேகரன், சுதந்திர போராட்ட தியாகி சுந்தரலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து 7, 8, 9-ம் வகுப்பு பாடத்திட்டங்களில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற தலைவர்கள் போல் இவர்கள் குறித்த விவரங்களையும் அனைத்து வகுப்புகளுக்கும் துணை பாடதிட்டமாக சேர்க்க வேண்டும்.

    அதே போல் அனைத்து தலைவர்களின் பெயரிலும் அரசு விழா கொண்டாடப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

    கல்வி, மின்சாரம், சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளுடன் சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் கையகப்படுத்த வேண்டும். 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

    கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றி உங்கள் நிலைப்பாடு?


    பதில்:-ஒரு கட்சியின் சின்னத்தை நம்பியே மக்கள் வாக்களித்து எம்.எல்.ஏ.க்களை உருவாக்குகின்றனர். அந்த கட்சி மீது எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவர்களே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும்.

    கேள்வி:-பழனி சிலை மோசடி வழக்கில் அரசு ஒத்துழைக்கவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியது பற்றி?

    பதில்:- அரசு கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது. எனவே அரசின் உத்தரவுக்கு யாராக இருந்தாலும் கீழ்படிந்தே ஆக வேண்டும்.

    கேள்வி:-கவர்னர் அடுத்து எங்கு ஆய்வு செய்தாலும் போராட்டம் நடத்துவேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

    பதில்:-சில கேள்விகளுக்கு உடனே பதில் அளித்துவிட முடியாது. அடுத்து நாம் சந்திக்கும் போது இதற்கான பதிலை நிச்சயம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.#Krishnasamy
    சேலம்-சென்னை 8 வழி சாலை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவலை பரப்பிய சென்னையை சேர்ந்த செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 8 வழி சாலை திட்டத்திற்கு நில அளவீடு பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், போராட்டக்காரர்களை ஒடுக்க காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் வாட்ஸ்-அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரபரப்பு தகவல் பரவியது.

    போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அது பொய்யான தகவல் என தெரிய வந்தது. மேலும் தவறான தகவலை அந்த நபர் சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் இருந்து பரப்பியது தெரிய வந்ததால் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர் சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரில் வசித்து வரும் செல்வராஜ் (வயது 43) என்பது தெரியவந்தது. உடனே சென்னைக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை சேலம் மாவட்டத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர். தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வன்முறையை தூண்டுதல் உள்பட (500, 504, 505 (ஐ)) 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர். இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள். செல்வராஜின் சொந்த ஊர் கரூர் மாவட்டம் ஆகும்.

    இது போன்று அவதூறு மற்றும் பொய்யான, நடக்காத நிகழ்வை நடந்தது போன்று வேண்டும் என்றே சித்தரித்து அவதூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் வாட்ஸ்-அப், மின் அஞ்சல், ஊடகம் வழியாக பரப்புவது சட்டப்படி குற்றம்.அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே பொதுமக்கள் அவ்வாறான செய்திகளை நம்ப வேண்டாம். அவ்வாறு வரும் செய்திகளை வேறு நபர்களுக்கு அனுப்பினாலும் சட்டப்படி குற்றம் என்பதால் பொது மகம்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் கேட்டு கொண்டுள்ளார்.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 6 வெளியானதை தொடர்ந்து சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்ட நிலையில், சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.8000 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் More Than Just Speed என்ற டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், சாம்சங் பே மற்றும் பிக்ஸ்பி அசிஸ்டண்ட் போன்றவை இரண்டு ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 6 வெளியிடப்பட்ட நாளில் சாம்சங் மொபைல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேகத்தை கடந்து பல்வேறு விஷயங்களை பெறக்கூடிய சூழலில் ஏன் வேகத்திற்கு மட்டும் ஏற்று கொள்ள வேண்டும் என்ற வாக்கில் (Why settle for just speed when you can get much more than just speed) ட்வீட் செய்யப்பட்டிருந்தது. 



    சாம்சங் அறிவித்திருக்கும் புதிய சலுகையின் கீழ் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.8000 கேஷ்பேக் மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகையின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனினை ரூ.37,990 விலையிலும், கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனினை ரூ.29,990 விலையில் வாங்கிட முடியும்.

    இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகளும் பேடிஎம் மால் வலைத்தளத்தில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் ரூ.45,990-க்கும், கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.32,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    சாசம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 8895 சிப்செட், 5.8 இன்ச் QHD பிளஸ் 1440x2960 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, டூயல் வளைந்த டிஸ்ப்ளே, 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. 



    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, OIS, f/1.7 அப்ரேச்சர், முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 அப்ரேச்சர், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், 3000 எம்ஏஹெச் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 6.0 இன்ச் FHD பிளஸ் 1080x2220 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, சாம்சங் எக்சைனோஸ் 7885 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி + 8 எம்பி செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    64 ஜிபி இந்டெர்னல் மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 
    தரகம்பட்டி அருகே வெறிநாய் கடித்ததில் 8 செம்மறி ஆடுகள் பலியாகின.
    தரகம்பட்டி:

    கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி மாலப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு (வயது 50). கொத்தனாரான இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று முன் தினம் ஆடுகளை மேய்த்துவிட்டு தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    மறுநாள் காலை வந்து பார்த்தபோது, படுகாயங்களுடன் 8 செம்மறிஆடுகள் இறந்து கிடந்தன. 6 செம்மறி ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காணியாளம்பட்டி கால்நடை மருத்துவரை வரவழைத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.

    அந்த செம்மறி ஆடுகள் வெறிநாய் கடித்ததால்தான் இறந்துள்ளன என டாக்டரின் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் கிராம நிர்வாக அதிகாரி மணிவேல் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் உள்ள வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் தேதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. 

    SM-G8750 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் பலமுறை இணையத்தில் கசிந்திருக்கின்றன. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் சீனாவின் JD.com வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த தகவல்கள் ட்விட்டரில் கசிந்திருக்கும் நிலையில், இதன் விளம்பர படங்களும் வெய்போ மூலம் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்9 லைட் என்ற பெயர் கொண்டிருக்கிறது. விளம்பர படத்தில் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கேமரா மாட்யூல் அருகிலேயே கைரேகை சென்சார் இடம்பெற்றிருக்கிறது. 



    சாம்சங் எஸ் சீரிஸ் லைட் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2220 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
    - அட்ரினோ 512GPU
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், யுஎஸ்பி
    - கைரேகை சென்சார்
    - ஐரிஸ் சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    ×