search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசு"

    • பேச்சு போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் வள்ளல்பெருமான் வருவிக்கஉற்ற 200-வது ஆண்டு நிறைவு விழா, மாநில அளவில் நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    Vallalar 200th Anniversary Celebrationநிகழ்விற்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளு வன் தலைமை தாங்கினார். பதிவாளர்(பொ) முனைவர் இளையாப்பிள்ளை முன்னிலை வகித்தார்.

    புலமுதன்மையர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வரவேற்புரை ஆற்றினார். தொ டர்ந்து அருட்பெருஞ்ஜோதி ஞானதீபத்தை துணைவேந்தர் திருவள்ளுவன் ஏற்றித் தலைமையுரை ஆற்றினார்.

    தொடர்ந்து தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகளின் இயக்குநர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய வைகுண்டர் வள்ளலார் ஓர் ஒப்பீட்டு நூல் வெளியிடப்பட்டது.

    நூலின் முதல் படியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன் வெளியிட துணைவேந்தர் திருவள்ளுவன் பெற்றுக் கொண்டார்.

    சிறப்பு விருந்தினராக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் புதல்வர் ராஜாராமலிங்கம், வடலூர் சங்க கெளரவத் தலைவர் ராமதாஸ், வடலூர் தலைமைச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் வெற்றிவேல், மருத்துவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாகக் காலையில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிப் பேச்சுப் போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேல் கலந்து கொண்டனர்.

    அதில் முதல் பரிசு 30,000, இரண்டாம் பரிசு 20,000, மூன்றாம் பரிசு 10,000 மற்றும் ஆறுதல் பத்துப் பரிசுகள் தலா 1000 என்கிற வகையில் வழங்கப்பட்டன.

    நிகழ்வின் ஏற்பாடுகளை வடலூர் தலைமைச் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் அருள் நாகலிங்கம், பேராசிரியர்கள் குறிஞ்சி வேந்தன், மஞ்சுளா, சங்கரராமன், கவிஞர் வெற்றிச்செல்வன், கவிஞர் யோகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • விஜயதசமியை முன்னிட்டு சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உடல் நலன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வன்னிகோேனந்தல் கிராமத்தில் விஜயதசமியை முன்னிட்டு பகத்சிங் வித்யாலயா பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்

    தொடர்ந்து அவர் பேசுகையில், குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உடல் நலன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.கற்றல் திறனை அதிகரிக்க அதிகமான புத்தகங்களை படிக்க பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பால்ராஜ் மற்றும் சுப்பிரமணியன், முருகராஜ், தமிழ் சேவா சங்கம் காளிராஜ், ஏகலைவன் வித்யாலயா பள்ளி, பண்டாரம், ஏகலைவன் ஒன்றிய தலைவர் அந்தோணி சாமி, வன்னிகோனந்தல் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி முத்துராமன், அருள், ராம்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    • 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது 3 நிலைகளாக நடைபெற்றது.

    போட்டியில் முதல் இடம் பிடித்த குழந்தைக்கு தங்க பதக்கமும், முறையே 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

    விழாவில் கார்த்தி வித்யாலயா பள்ளி தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மேலும், கலந்து கொண்ட அனைத்து குழந்தை களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கூறுகையில்:-

    போட்டியானது குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார்.

    முன்னதாக பள்ளி முதல்வர் அம்பிகாபதி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இசை பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில்அமைந்துள்ளது.

    திருஞான சம்பந்தர் தேவாரத்தில் முதல் பதிகமான தோடுடைய சிவனே என்ற பதிகத்தை பாடி அருளிய தலமான இங்கு நவராத்திரி இசை விழா ஆண்டுதோறும் திருஞானசம்பந்தர் இசை பள்ளி சார்பில் நடைபெற்று வருகிறது.

    அதுபோல இவ்வாண்டு நவராத்திரி இசை விழா நடைபெற்றது.

    இசை பள்ளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டு தேவார பதிகங்கள், விநாயகர் துதி, சரஸ்வதி பாடல் உள்ளிட்ட பக்தி பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் பாடினர்.

    இதில் குறிப்பாக 4 வயது முதல் மழலைச் சொல் மாறாத சிறுவர் சிறுமியர் இசை விழாவில் கலந்து கொண்டு இசைக்கு ஏற்ப பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

    இவ்விழாவில் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
    • போட்டிகளில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் நெல்லை, தென்காசி மாவட்ட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டி, விளையாட்டு போட்டி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரம் நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தி.மு.க.மாநில சுற்றுச்சூழல்அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சக்பி சுலைமான், சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் உசிலம்பட்டி அருணன், ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரி கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலடி அருணா லிபரல் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வன் வரவேற்று பேசினார்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபடி, கைப்பந்து, வாலிபால் கோக்கோ, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு பேசினார்.

    விழாவில் தென்காசி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லப்பா, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கடையம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் மாயவன். ஜெயக்குமார், முக்கூடல் பேரூர் செயலாளர் லெட்சு மணன், ஆழ்வார்குறிச்சி அழகேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், கீழப்பாவூர் பேரூர் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன், வக்கீல் சிவக்குமார் ரஞ்சித், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், மணிகண்டன், ஆலடி அருணா லிபரல் கல்லூரி பேராசிரியர்கள், ஆலடி அருணா நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரை யாளர்கள் மாணவ -மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு கலை இலக்கிய போட்டிகளில் தென்காசி, ஆலங்குளம், மருதம்புத்தூர், மாறாந்தை, நெட்டூர், நல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில்,சுந்தரபாண்டியபுரம், பாவூர்சத்திரம் அகரக்கட்டு, ஆவுடை யானூர், செங்கோட்டை வீரசிகாமணி, அம்பாச முத்திரம் விக்கிரமசிங்கபுரம், கல்லிடைகுறிச்சி பகுதிகளில இருந்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    • மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.
    • சிறந்த முறையில் சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் இன்று கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி நடத்தும் 3-ம் ஆண்டு சிலம்பப் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்திய குழந்தைகள் நல சங்கம் ஆற்றுப்படுத்துனர் டென்னிஸ் மேரி வரவேற்புரை ஆற்றினார்.

    மானோஜிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி தலைமை தாங்கினார்.

    மேம்பாலம் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

    நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    பேராசிரியர் சுகுமாறன், இந்திய குழந்தைகள் நல சங்கம் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார், கண்காணிப்பாளர் நாராயணசாமி ராஜா, நேரு யுவ கேந்திரா கணக்காளர் பவுன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதையடுத்து சிலம்பப் போட்டியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட பல்வேறு மாவட்ட ங்களை சேர்ந்த 5 வயதுக்கு மேற்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவர், மாணவிகளுக்கு தனி தனியாக சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.

    அவர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் சுற்றினர். தொடர்ந்து சிலம்ப போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    போட்டி நடுவராக ஆசான் ஐயப்பன் செயல்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து மாலையில் பாராட்டு விழா மற்றும் சிறந்த சிலம்பாட்ட ஆசான்களுக்கான கலைப்புலி கோவிந்தராஜ் விருது வழங்கும் விழா, ஆண்டு விழா நடைபெற உள்ளது.

    இதில் ஆசான்களுக்கான விருதை தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் தொழில்நுட்ப குழு சேர்மன் சந்திரசேகரன் வழங்குகிறார். சிறந்த முறையில் சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு பரிசுகளை இந்திய குழந்தைகள் நல சங்கம் கௌரவ செயலாளர் ரகுராமன் வழங்கி பாராட்டுகிறார்.

    முடிவில் தஞ்சாவூர் கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி பயிற்சியாளர் துளசிராமன் நன்றி கூறுகிறார்.

    • தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பதக்கங்கள், ஷீல்டுகள் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. மாணவர் அணி சார்பில் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் பரிசுகள், பதக்கங்கள், ஷீல்டுகள் வழங்கினார்.

    இதில் செல்லம்பட்டி ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு கல்லூரியிலிருந்து 2மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாண வர்களுக்கும் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்க ளுக்கும் பேச்சுப்போட்டி கள் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி 30-ந் தேதியும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் 2-ந் தேதியும் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    30-ந் தேதி நடைபெறும் போட்டியில் பள்ளி மாண வர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மற்றும் வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் உள்ளிட்ட தலைப்பும், கல்லூரி மாண வர்களுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளை யனே வெளி யேறு இயக்கம், சத்திய சோதனை மற்றும் மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

    அடுத்த மாதம் 2-ந் தேதி அன்று பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி மற்றும் மனிதருள் மாணிக்கம் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்ச சீல கொள்கை மற்றும் நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடை பெற உள்ளது.

    போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று அதனை நேரில் அளிக்க வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து 2மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்க ளுக்கு முதல்பரிசு ரூ.5ஆயி ரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிர மும், 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரம் மற்றும் பாராட்டு சான்றித ழும் வழங்கப்படும்.

    இதேபோல் 6 -ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசுத்தொகை ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.

    போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி அன்று நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் 2-ம் தளத்தில் செயல்பட்டுவரும் மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, 0462- 2502521 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும்

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பிளஸ்-2 வகுப்பு பயிலும் 172 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ்களை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார். முதுகலை தமிழாசிரியர் பேச்சியம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் 87 மாணவர்களுக்கும், 85 மாணவிகளுக்கும் மொத்தம் 172 பேருக்கு இலவச சைக்கிளையும், வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதை போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவைகளில் வெற்றி பெற்ற 19 மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ், விருதுகளை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    இதில் கவுன்சிலர்கள் சித்ராதேவி, அருணாசலம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மகமாயி, கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள் வீரகுமார், காசிராஜன், மோகன், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

    • அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுஅமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடை பெற்றது.

    இதில் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய ங்கொண்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரிகளில் முதல் நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.

    இதைத்தொடர்ந்து 2-ம் நாள் கருத்தரங்கம், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றிய பெருமை கருணாநிதியைேய சேரும். அந்த வகையில் மாண வர்களுடைய அறிவுத்திறன் கருணாநிதியை பற்றிய புரிந்து ணர்வு, சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு இவற்றை யெல்லாம் மாணவர்கள் பேச்சுப்போட்டி வாயிலாக எடுத்துரைத்துள்ளனர்.

    இதனுடைய விளைவு இன் றைக்கு இருக்கின்ற இளம் பிள்ளைகள் நாளைய தினம் திராவிட சிந்தனையோடும், மொழி உணர்வோடும், பெரி யார், அண்ணா, கருணாநிதி ஆகி யோரின் கனவினை நனவாக்கி சமூகத்திற்கு பணியாற்றுகின்ற நல்லப் பணியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற வாய்ப்பினை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிகளில் சட்டப்பே ரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், சட்டப்பேரவை துணை செயலர் அய்யம்பெ ருமாள், சட்டப்பேரவை துணை செயலாளர் சாந்தா, சட்டப்பேரவை சார்பு செயலர் லோகநாதன், மண்டல இணை இயக்குநர் தன்ராஜ் (தஞ்சாவூர்), அரியலூர் வருவாய் கோட்டாட்சி யர் ராமகிருஷ்ணன், உடையார்பா ளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் நகராட்சி உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர்.

    • ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
    • முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி நூர்ஆகாஸ் 2-ம் இடம் பிடித்தார்.

    கும்பகோணம்:

    பாபநாசம் திராவிடர் சமுதாய நலக்கல்வி அறக்கட்டளை, இமயம் கல்வி சமூகப்பணி அறக்கட்டளை, தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கட்டுரை போட்டிகள் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

    போட்டியில் கணினி அறிவியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் மாதவன் முதல் இடம் பிடித்தார். அவருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    தொடாந்து, பேச்சு போட்டியில் முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி நூர்ஆகாஸ் 2-ம் இடம் பிடித்தார்.

    அவருக்கு ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மாதவி பாராட்டி வாழ்த்தினார்.

    அப்போது தேர்வு நெறியாளர் சுந்தரராசன், வேதியல் துறை தலைவர் மீனாட்சி சுந்தரம், புவியியல் துறை தலைவர் கோபு, கார்த்தி, சவுந்தர்ராஜன், கல்லூரி நூலகர் சங்கரலிங்கம், கவின் கலை மன்ற பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், விவேகா னந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நிகழ்ச்சியில் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
    • விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ஊக்கப்பரிசு வழங்கிய சிவபத்மநாதனுக்கு ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    தென்காசி:

    கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டியில் பி.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 4-வது ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.

    கபடி போட்டி தொடக்கம்

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி தலைவருமான ரவிச்சந்திரன், வெங்கடாம் பட்டி ஊராட்சி தலைவர் ஷாருகலா ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ஆவுடை கோமதி, மகேஸ்வரி சத்தியராஜ், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யன்சாமி, முகமது யாகூப், அன்பழகன், கடையம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட், கடையம் வடக்கு ஒன்றிய முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் செல்வன், தொண்டரணி தலைவர் வெங்கடேசன், சிறுபான்மை அணி ஆதம் சுபேர், உதயநிதி நற்பணி மன்றம் அசிம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியாசிங், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்கச்செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், வெய்க்காலிபட்டி கிளை செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் நவீன்கிருஷ்ணா, பால்ராஜ், ராஜாமணி, கோவில்பிள்ளை, ஜெயராஜ், ராபர்ட், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் கார்த்திக், சங்கர் ராம், பன்னீர், முத்து பாண்டி, பூதத்தான், வடமலைபட்டி ஆதிலிங்கம், சங்கர்ராம், மகாராஜா, சுமன், சிவசந்திரன், அருணாசலம், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விளையாட்டு போட்டி நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற்றுத்தந்ததுடன், விளையாட்டு வீரர்களை ஊக்கப் படுத்தும் வகை யில் ஊக்கப்பரிசு வழங்கிய முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுக்கு ஊர் பொதுமக்கள், விளையாட்டு குழுவினர் திரண்டு வரவேற்பு அளித்து, நன்றி தெரிவித்தனர்.

    ×