search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
    X

    ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
    • போட்டிகளில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் நெல்லை, தென்காசி மாவட்ட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டி, விளையாட்டு போட்டி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரம் நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தி.மு.க.மாநில சுற்றுச்சூழல்அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சக்பி சுலைமான், சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் உசிலம்பட்டி அருணன், ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரி கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலடி அருணா லிபரல் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வன் வரவேற்று பேசினார்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபடி, கைப்பந்து, வாலிபால் கோக்கோ, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு பேசினார்.

    விழாவில் தென்காசி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லப்பா, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கடையம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் மாயவன். ஜெயக்குமார், முக்கூடல் பேரூர் செயலாளர் லெட்சு மணன், ஆழ்வார்குறிச்சி அழகேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், கீழப்பாவூர் பேரூர் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன், வக்கீல் சிவக்குமார் ரஞ்சித், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், மணிகண்டன், ஆலடி அருணா லிபரல் கல்லூரி பேராசிரியர்கள், ஆலடி அருணா நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரை யாளர்கள் மாணவ -மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு கலை இலக்கிய போட்டிகளில் தென்காசி, ஆலங்குளம், மருதம்புத்தூர், மாறாந்தை, நெட்டூர், நல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில்,சுந்தரபாண்டியபுரம், பாவூர்சத்திரம் அகரக்கட்டு, ஆவுடை யானூர், செங்கோட்டை வீரசிகாமணி, அம்பாச முத்திரம் விக்கிரமசிங்கபுரம், கல்லிடைகுறிச்சி பகுதிகளில இருந்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    Next Story
    ×