வன்னிகோனேந்தலில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

விஜயதசமியை முன்னிட்டு சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உடல் நலன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.
வன்னிகோனேந்தலில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் வன்னிகோேனந்தல் கிராமத்தில் விஜயதசமியை முன்னிட்டு பகத்சிங் வித்யாலயா பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்

தொடர்ந்து அவர் பேசுகையில், குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உடல் நலன் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.கற்றல் திறனை அதிகரிக்க அதிகமான புத்தகங்களை படிக்க பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பால்ராஜ் மற்றும் சுப்பிரமணியன், முருகராஜ், தமிழ் சேவா சங்கம் காளிராஜ், ஏகலைவன் வித்யாலயா பள்ளி, பண்டாரம், ஏகலைவன் ஒன்றிய தலைவர் அந்தோணி சாமி, வன்னிகோனந்தல் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி முத்துராமன், அருள், ராம்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com