search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்-கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்
    X

    தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்-கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்

    • ஒரு கல்லூரியிலிருந்து 2மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாண வர்களுக்கும் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்க ளுக்கும் பேச்சுப்போட்டி கள் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி 30-ந் தேதியும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் 2-ந் தேதியும் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    30-ந் தேதி நடைபெறும் போட்டியில் பள்ளி மாண வர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மற்றும் வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் உள்ளிட்ட தலைப்பும், கல்லூரி மாண வர்களுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளை யனே வெளி யேறு இயக்கம், சத்திய சோதனை மற்றும் மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

    அடுத்த மாதம் 2-ந் தேதி அன்று பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி மற்றும் மனிதருள் மாணிக்கம் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்ச சீல கொள்கை மற்றும் நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடை பெற உள்ளது.

    போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று அதனை நேரில் அளிக்க வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து 2மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்க ளுக்கு முதல்பரிசு ரூ.5ஆயி ரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிர மும், 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரம் மற்றும் பாராட்டு சான்றித ழும் வழங்கப்படும்.

    இதேபோல் 6 -ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசுத்தொகை ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.

    போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி அன்று நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் 2-ம் தளத்தில் செயல்பட்டுவரும் மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, 0462- 2502521 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும்

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×